சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த மூவரையும் பிணையில் விடுவிக்கக் கோரிக்கை

Published By: Digital Desk 4

05 Jun, 2019 | 11:12 AM
image

சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் பதுளைக்கிளை தலைவர், செயலாளர், விரிவுரையாளர் ஆகிய மூவரையும் பிணையில் விடுமாறு பதுளை நீதவான் நீதிமன்றத்தில்  கோரிக்கை விடப்பட்ட போதிலும் அக் கோரிக்கையைப் பரிசீலனை செய்து எதிர்வரும் 07ஆம் திகதி தீர்மானிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

பதுளை நீதவான் நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் நேற்று மாலை குறித்த  வழக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது  நீதிபதி சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்குவது குறித்து எதிர்வரும் 07ஆம் திகதி தீர்மானிப்பதாகவும் அதுவரை சந்தேக நபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர்கள் மூவரும் சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களென்றும் அந்த  அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. ஆனால் தேசிய தௌஹித் அமைப்பே தடைசெய்யப்பட்டிருப்பதாகும். 

அத்துடன் இம்மூவரும் கைது செய்யப்பட்டதிலிருந்து இது வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணைகளில் இவர்கள் பயங்கரவாத குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களாகக் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆகையினால் இவர்களுக்குப் பிணை வழங்கும்படி சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இக் கோரிக்கையினை நீதிமன்றத்தில் ஆஜரான பொலிசாரும் ஆட்சேபிக்கவில்லை. இந்நிலையில் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பட்டுள்ளது. அதன் அறிக்கைகளும் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை. எது எப்படியிருந்த போதிலும் சந்தேக நபர்களைப் பிணையில் விடுவதற்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென பொலிஸார் நீதிபதியிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இவற்றினை கருத்திற்கொண்ட நீதிபதி சமிந்த கருணாதாச சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி தீர்மானிக்கப்படும். அதுவரை குறித்த மூவரும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04