பாரா­ளு­மன்­றம் கலைப்­பு ; பிரே­ர­ணையை கொண்­டு­வருகிறது ஜே.வி.பி. 

Published By: Daya

05 Jun, 2019 | 10:20 AM
image

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 150 பேரின் கையொப்­பங்­களை பெற்று பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது தொடர்­பான  பிரே­ர­ணை­யொன்றை அடுத்­த­மாதம் அளவில் மக்கள் விடு­தலை முன்­னணி  கொண்­டு­வ­ர­வுள்­ளது. 

முதலில் இந்த யோச­னையை   முன்­வைக்­க­வுள்ள  ஜே.வி.பி.யினர் அது தொடர்பில் ஏனைய அர­சியல் கட்­சி­களின் ஆத­ர­வையும்   கோரு­வார்கள் என தெரி­கி­றது.   தற்­போ­தைய எட்­டா­வது  பாரா­ளு­மன்றம்  2020 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் முடி­வ­டை­கின்­றது.  எனினும்   அடுத்த வருடம் மார்ச் மாதத்­துடன் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின்   நான்­கரை வரு­டங்கள் பூர்த்தி அடை­வதால் அதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடியும்.
 
அதற்கு இன்னும்   ஒன்­பது மாதங்கள் எஞ்­சி­யி­ருக்­கின்ற நிலை­யி­லேயே  பாரா­ளு­மன்­றத்தை  கலைப்­பது தொடர்­பான பிரே­ர­ணையை  மக்கள் விடு­தலை முன்­னணி  முன்­வைக்­க­வுள்­ளது.  எனினும்  பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்­பி­னர்­களில்  150 பேர்  இணக்கம்  தெரி­வித்து கைச்­சாத்­திட்டால் பாரா­ளு­மன்றத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த முடியும் என்­பதே 19 ஆவது திருத்­த­ச் சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள ஏற்­பா­டாகும். 



"தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு தொட ர்ந்தும் பத­வியில் இருக்கும் தகுதி இல்லை  இவ்­வாறு   பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பது தொடர்­பான  பிரே­ர­ணையை கொண்­டு­வ­ர­வுள்ளோம் "என்று  மக்கள் விடு­தலை  முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
 
தற்­போ­தைய சூழலில்  உட­ன­டி­யாக  பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு  மஹிந்த ராஜ­பக் ஷ தரப்பு ஆத­ரவு வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சுதந்­தி­ரக்­கட்­சியும் அதற்கு ஆத­ரவு வழங்­கலாம் என்றே தெரி­கி­றது. எனினும்  ஐக்­கிய தேசி­யக்­கட்சி எவ்­வா­றான முடிவை எடுக்கும் என்­பது  தெளி­வில்­லாமல் இருக்­கின்­றது. 

இந்த நிலை­யி­லேயே மக்கள் விடு­த­லை முன்னணியின் பிரே­ரணை அடுத்­த­மாதம் அளவில் வர­வி­ருக்­கி­றது. இதே­வேளை இவ்­வ­ருடம் டிசம்­பர் ­மாதம் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டிய தேவை காணப்­படும் நிலையில் அதற்கு முன்னர்  பாரா­ளு­மன்றத் தேர்­தலை  நடத்­து­வ­தற்கே இந்த முயற்சி எடுக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் மக்கள்  விடு­தலை முன்­னணி கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

மக்கள் விடு­தலை முன்­னணி ஏற்­க­னவே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யொன்றை சபா­நா­யகர்  கரு ஜய­சூ­ரி­ய­விடம் சமர்ப்­பித்­துள்ள நிலை­யி­லேயே    தற்­போது  150 பேரின் ஆத­ர­வுடன்  பாரா­ளு­மன்­றத்தை கலைத்து  பொதுத்­தேர்­த­லுக்கு செல்­வ­தற்­கான ஏற்­பாட்டை முன்­னெ­டுக்­க­வுள்­ளது. 

19 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தற்கு  முன்­ப­தாக  பாரா­ளு­மன்­றத்தை ஒரு­வ­ரு­டத்தின் பின்னர் கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இருந்­தது.  

எனினும் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக அந்த அதி­காரம்  நீக்­கப்­பட்­ட­துடன் நான்­கரை வரு­டங்­களின் பின்­னரே   பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­ப­தி­யினால் கலைக்­க­மு­டியும் என்ற ஏற்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டது. 

 எனினும் கடந்த   வருடம் நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  விசேட வர்த்தமானி அறிவித் தல் ஊடாக   பாராளுமன்றத்தை கலைத்திருந் தார்.  


எனினும் அதற்கு எதிராக அரசியல் கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக் கல் செய்த நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டத் திற்கு விரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54