நாட்டின் பலபாகங்களிலும் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

Published By: Daya

05 Jun, 2019 | 10:19 AM
image

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் முஸ்லிம் மக்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். 

அந்தவகையில் இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் முஸ்லிம்கள் அச்ச உணர்வுடன் இருந்த போதிலும் இன்றையதினம் நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நோன்புப் பெருநாளை அமைதியான முறையில் நோன்புப் பெருநாளை முன்னெடுக்குமாறும்  பொதுவெளிகளில் நோன்புப் பெருநாள் தொழுகை முன்னெடுப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் நோன்புப் பெருநாள் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் நோன்புபெருநாள் தொழுகை

வவுனியா தௌஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் திடல் தொழுகை வவுனியா பட்டானிச்சூர் குடா வயல் திடலில் இன்று  புதன்கிழமை இடம்பெற்றது.

அதன் தலைவர் மௌலவி எம். எப். சாபிக்கின் (பாரி) தலைமையில் தொழுகைகள் இடம்பெற்றது.

இதன்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மாளிகைக்காடு, சாய்ந்தமருதில் நோன்புப்பெருநாள் தொழுகை

மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் இடம்பெற்றது.

அசாதாரண சூழ்நிலையிலிருந்து நாடு வழமைக்கு திரும்பியதன் பின்னர் முஸ்லிம்கள் அதிகமாக கூடும் நிகழ்வு என்பதால் சம்மாந்துறை பொலிஸ் இருவர் இன்றைய தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவில் கலந்து கொள்ள வழமைபோன்று சாய்ந்தமருது மாளிகைக்காடு பொதுமக்கள் ஆவலுடன் கலந்துகொண்டிருந்தனர்.

அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.ஆர்.எம். சப்ராஸ் பெருநாள் தொழுகையையும் குத்பா உரையையும் நிகழ்த்தினார்.

மேலதிக செய்திகளுக்கு ஒரே தினத்தில் பெரு­நாளைக் கொண்­டாட வேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31