ரமழானின் போதனைகளை பேணுவோம் - ஈகைத் திருள்நாள் வாழ்த்துக்கள்

Published By: Digital Desk 3

05 Jun, 2019 | 09:44 AM
image

அல்­லா­ஹு­த­ஆ­லாவின் அரு­ளி னால் இன்று நாங்கள் நோன்புப் பெரு­நாளைக் கொண்­டாடும் பாக்­கியம் கிடைத்­தி­ருக்­கி­றது.

இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்­பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெரு­நாளைக் கொண்­டா­டு­கிறோம்.

முஸ்­லிம்கள் கொண்­டாடும் இரு பிர­தான பெரு­நாட்­களில் முதல் பெருநாள் நோன்புப் பெரு­நா­ளாகும். 'ஈதுல் பித்ர்' எனும் இந்தப் புனிதப் பெருநாள் சமத்­து­வத்தை, சகோ­த­ரத்­து­வத்தை, சாந்­தியை, சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தும் உன்­னத பெரு­நா­ளாக இருக்­கி­றது. இறை­வனின் நேசத்தை பெறு­வ­தற்­காக தடுக்­கப்­பட்ட சகல காரி­யங்­க­ளி­லி­ருந்தும் தவிர்ந்து நடந்து, நல்­ல­மல்கள் பல புரிந்து, முஸ்­லிம்கள் ஒவ்­வொ­ரு­வரும் தம்­மையே புடம்­போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்­துவம் மிக்க பெரு­நாளை கொண்­டா­டு­கின்­றனர்.

இன்­றைய பெருநாள் தினத்­திலே முஸ்­லிம்கள் அனை­வரும் பள்­ளி­வா­சல்­க­ளிலே தமது சகோ­த­ரர்­க­ளுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒரு­வ­ரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்­சியை தெரி­வித்துக் கொள்வர். அதேபோல், தமது உற­வினர், நண்­பர்கள், அய­ல­வர்கள் இல்லம் சென்று இவ்­வாறே பெருநாள் மகிழ்ச்­சியை பகிர்ந்து கொள்வர்.

இதே­வேளை, புனித பெருநாள் கொண்­டாடும் இந்த மகிழ்ச்­சி­யான இனிய நாளில் புனித ரமழான் கற்றுத் தந்த பாடத்தை, போத­னையைப் பற்றி நாம் ஒவ்­வொ­ரு­வரும் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாதம் முழு­வதும் பெற்ற பயிற்­சிகள், அதனால் எம்மில் ஏற்­பட்ட மாற்­றங்கள் வாழ்நாள் முழு­வதும் தொடர்ந்தும் பேணப்­பட வேண்டும்.

இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறை­யாகும். அந்த வாழ்க்கை முறைக்­கான பயிற்­சியை நோன்பு வழங்­கி­யது. சரி­யான முறையில் நோன்பு நோற்­றதன் மூல­மாக இனிய குணம், கற்­பு­டைமை, பொறுமை, நேர்மை, நன்­ந­டத்தை, சகிப்புத் தன்மை, உளத் தூய்மை, வீரம், ஏழை­களின் துயரை உணரும் தன்மை, உதவும் மனப்­பான்மை, மனித நேயம் என்­பன போன்ற பல்­வேறு நற்­பண்­பு­களை ஒருவர் அடைந்து கொள்­வ­தற்கு வாய்ப்பு கிடைக்­கி­றது.

இந்த நற்­பண்­பு­களை ஒரு முஸ்லிம் ஏனைய மாதங்­க­ளிலும் கடை­ப்பி­டிக்க வேண்டும். அதற்­கான பயிற்­சியே ரமழான் மாத­மாகும். நோன்பின் போது உட­லையும் உள்­ளத்­தையும் கட்­டுப்­ப­டுத்தி இருந்­தது போல, இனி­வரும் நாட்­க­ளிலும் உட­லையும் உள்­ளத்­தையும் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க வேண்டும். இதன் மூலம் பூரண ஆரோக்­கி­யத்­தையும் மகிழ்ச்­சி­க­ர­மான வாழ்க்­கை­யையும் அமைத்துக் கொள்ள முடியும். தீய பழக்க வழக்­கங்கள் மீண்டும் நம்மை கௌவிக் கொள்­ளாமல் பாது­காத்துக் கொள்­வ­தோடு, நோன்பு காலங்­களில் ஐவேளை தொழு­கை­யோடு, சுன்னத் தொழு­கைகள், தஹஜ்ஜத் தொழு­கை­களை தொழு­தது போல் தொடர்ந்தும் தொழுது வர­வேண்டும்.

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அச்ச சூழ்­நிலை அகன்று எல்­லோரும் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ச­மா­கவும் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்­காக ஐவேளை தொழு­கையில் தொடர்ந்தும் பிரார்த்­தனை புரிய வேண்டும்.

ஏழை­களின் பசிப்­பி­ணியை உணர்ந்து ஏழை­க­ளுக்கு நோன்பு காலங்­களில் உத­வி­யது போல், தொடர்ந்தும் உத­விகள் செய்து வர­வேண்டும். ஸகாத், சதக்கா,  போன்­ற­வை­களை கொடுக்க வேண்டும். ஸகாத் பெறத் தகு­தி­யு­டைய எட்டுக் கூட்­டத்­தா­ருக்கும் ஸகாத் கொடுக்க வேண்டும்.

இறை­யச்சம் எனும் ஆடை

நாங்கள் இன்று புத்­தா­டை­களை அணிந்து பெருநாள் கொண்­டா­டு­கிறோம். இந்த ஆடைகள் ஒருநாள் பழைய ஆடை­க­ளா­கி­விடும். ஆனால் இறை­யச்சம் எனும் ஆடையை அணி­வதன் மூல­மாக உண்­மை­யான பெரு­நாளைக் கொண்­டாட முடியும். அந்த இறை­யச்ச ஆடையை புனித ரமழான் நோன்பு எமக்கு தரு­கி­றது. இறை விருப்­பத்­தையும் அவ­னது நெருக்­கத்­தையும் அடையும் நோக்கில் நோன்பு நோற்­ற­வர்­க­ளுக்கு அந்த ஆடை கிடைத்­தி­ருக்கும். 

சோத­னை­யான கால­கட்­டத்தில் பெருநாள்

இந்த வருடம் இலங்கை முஸ்­லிம்கள் பல்­வேறு சோத­னை­க­ளுக்கு மத்­தியில் புனித நோன்புப் பெரு­நாளைக் கொண்­டா­டு­கின்­றனர். புனித நோன்பை அச்­சத்தின் மத்­தி­யிலும் சோத­னை­களின் மத்­தி­யிலும் நோற்­று­விட்டு இன்று பெரு­நாளைக் கொண்­டா­டு­கின்­றனர்.

ஏப்ரல் 21 தற்­கொலை தாக்­கு­தல்­களின் பின்னர் வன்­செ­யல்கள் இடம்­பெற்ற இடங்­களில் முஸ்­லிம்கள் பலர் அக­தி­க­ளா­கி­யுள்­ளனர். பலர் வீடு வாசல்கள், சொத்­துக்­களை இழந்து நிர்க்­க­தி­யா­கி­யுள்­ளனர். பலர் தொழில்­க­ளையும் வரு­மா­னங்­க­ளையும் இழந்­துள்­ளனர். பொது­வாக இலங்கை வாழ் முஸ்­லிம்கள் அச்­சத்­துடன் வாழும் நிலையில் இந்த வருடம் நோன்புப் பெரு­நாளைக் கொண்­டா­டு­கின்­றனர். முஸ்­லிம்கள் மட்­டு­மன்றி நாட்டு மக்கள் அனை­வரும் அச்­சத்­து­டனும் முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலை­யிலும் இந்தப் பெரு­நாளைக் கொண்­டா­டு­கிறோம்.

எனவே, புனித நோன்புப் பெரு­நாளை எல்­லோரும் அவ­தா­ன­மாக கொண்­டாட வேண்டும். சில ஊர்­களில் பட்­டாசு கொளுத்தும் வழக்கம் உள்­ளது. அதனை முற்­றாக நிறுத்த வேண்டும். எமது கொண்­டாட்­டங்கள் மற்­றைய மதத்­தி­னரை பாதிக்கும் வகையில் இருக்­கக்­கூ­டாது. பெருநாள் விளை­யாட்டுப் போட்­டிகள் நடத்­து­வது தொடர்­பிலும் ஊர் ஜமா­அத்­தினர் முடி­வெ­டுக்க வேண்டும்.

அத்­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வச­தி­ப­டைத்­த­வர்கள் தாரா­ள­மாக உதவ வேண்டும். எமது ஆறுதல் வார்த்­தை­கள்­கூட பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் மனக்­கா­யங்­களை சுகப்­ப­டுத்தும். 

இந்த பெரு­நாளை ஏனைய இனத்­த­வர்­க­ளுக்கு எமது கவ­லை­யையும் அனு­தா­பங்­க­ளையும் தெரி­விக்கும் வகையில் நல்­லி­ணக்கப் பெரு­நா­ளாக கொண்­டாட வேண்டும். அதற்­கான பயிற்­சியை ரமழான் நோன்பு எமக்­க­ளித்­தி­ருக்­கி­றது.

அத்துடன் முஸ்லிம்கள் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்தவர்களாக வாழவேண்டும். எமக்குள் பிளவுபட்டி­ருந்தால் என்றும் துன்பங்களையும் சோதனைகளையுமே சந்திக்க வேண்டி வரும் என்பதை உணரவேண்டும்.

'தக்பீர்' ஓசை இறை பள்ளிவாசல்களில் முழங்க, பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை என்றும் மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக. ஈத் முபாரக்!!

- எம். இஸட். ஷாஜஹான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02