அயலகத்திற்கு முதலிடம் கொள்கையைப் பிரதிபலிக்கும் மோடியின் மாலைதீவு, இலங்கை விஜயங்கள்

Published By: R. Kalaichelvan

04 Jun, 2019 | 07:00 PM
image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் மாலைதீவுக்கும் மேற்கொள்ளவிருக்கும் விஜயங்கள் 'அயலகத்திற்கு முதலிடம்" என்ற கொள்கைக்கும், 'பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் அபிவிருத்தியும்" என்ற கோட்பாட்டிற்கும் இந்தியா வழங்கும் முன்னுரிமையை வெளிக்காட்டுகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.

மாலைதீவு ஜனாதிபதி இப்ரஹீம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மாலைதீவிற்கு அரசமுறை விஜயமொன்றைச் செய்யவிருக்கிறார் என்று வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.

இரண்டாவது பதவிக்காலத்திற்கு பிரதமாக மோடி தெரிவு செய்யப்பட்ட பின்னர் வெளிநாட்டிற்கு அவர் மேற்கொள்ளவிருக்கும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். 

இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையில் உயர்மட்டத்திலான பரிமாற்றங்களில் காணப்படக்கூடியதாக இருக்கும் புதிய உத்வேகத்தை இது பிரதிபலிக்கிறது.ஜனாதிபதி சோலி கடந்த வருடம் டிசம்பரில் இந்தியாவிற்கு அரசமுறை வியமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான விசேட உறவை மேலும் வலுப்படுத்தும் குறிக்கோளுடன் பரஸ்பர நலன்களுக்குரிய விவகாரங்களில் கருத்துப் பரிமாற்றங்களையும், இருதரப்பு உறவுகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மேம்பாடுகளையும் ஆராய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இந்த விஜயம் வழங்குகின்றது என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கும் மோடி விஜயம் செய்யவிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47