தினமென் சதுக்க படுகொலைகளை உலகம் மறக்கவிடமாட்டோம்

Published By: Rajeeban

04 Jun, 2019 | 05:46 PM
image

ரோஜினா சியாவோக்கிங் ஹீ

கார்டியன்-  தமிழில் - ரஜீபன்

1989 இல் தினமென் சதுக்கத்தில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் ஒருவனின் சகோதரனனை கட்டுப்படுத்துவதற்கு தான் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லயனே  நினைவுகூறுகின்றார்.

அவன் சிறியவன் ஆனால் பெரிய மனிதர்களை போன்று கதறினான் என அவர் தெரிவிக்கின்றார்.

1989 இல் தினமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானவேளை லயனே ஹொங்ஹொங் பல்கலைகழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தார்.ஆர்ப்பாட்டங்கள் பற்றி அறிந்ததும் அதற்கு ஆதரவு வழங்குவதற்காக அவர் தினமென் சதுக்கத்திற்கு சென்றார்.

யூன் 3 ம் திகதி சீனா 200,000 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய படையினரை அப்பாவி பொதுமக்கள் மீது ஏவியது

அவ்வேளை லயனே தினமென் சதுக்கத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள  சீனா புரட்சி அருங்காட்சியகத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்.

மாணவன் ஒருவன் படையினரை நோக்கி ஆவேசமாக செல்வதை தடுக்க முடியாமல் அவர் மயங்கி விழுந்தார்.

எனக்கு மீண்டும் சுயநினைவு வந்தபோது அங்கிருந்தவர்கள் என்னை அம்புலன்ஸில் ஏற்ற முயன்றனர் என தெரிவிக்கும் லயனே நான் எனக்கு அம்புலன்ஸ் அவசியமில்லை என தெரிவித்தேன் என்கிறார்.

மீண்டும் ஒரு அம்புலன்ஸ் என்னை நோக்கி வந்தது,அதிலிருந்து இறங்கிய நடுத்தரவயது பெண் மருத்துவர் ஒருவர் எனது கையை பிடித்து இந்த அரசாங்கம் என்ன செய்தது என்பதை தெரிவிப்பதற்காக நீங்கள் பாதுகாப்பாக ஹொங்ஹொங் திரும்பவேண்டும் என தெரிவித்தார் என்கிறார் லயனே.

1997 சீனாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் ஹொங்ஹொங் அனுபவித்த சுதந்திரம் காரணமாக லயனே தாங்கள் அனுபவித்த துயரங்களிற்கான சாட்சியாக விளங்குவார் என  சீனா மக்கள் கருதினார்கள்

அன்று தாங்கள் சிந்திய குருதி வீணாகிப்போய்விடும் என்ற அச்சம் சீனாவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் காணப்பட்டது.

இங்கு என்ன நடந்தது என்பது உலகிற்கு தெரியுமா என  சீன பிரஜையொருவர் கனடாவை சேர்ந்த செய்தியாளர் ஒருவரை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்பினார்.

சீனா மக்களின் அச்சம் சரியானதாக காணப்பட்டது.

தினமென் சதுக்க படுகொலைகளின் பின்னர்

------------

தினமென் சதுக்கத்தில் அடக்குமுறையில் ஈடுபட்ட பின்னர் சீனா அரசாங்கம் நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையானவர்களை கைதுசெய்தது.

தினமென் சதுக்க படுகொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த பீஜிங்வானொலியின் பிரதி இயக்குநர் வு ஜியாவோயங் சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோளொன்றை விடுத்தார்.

சீன தலைநகரில் இடம்பெற்ற மிகவும் துயரமான நிகழ்வை மனதில் வைத்திருக்குமாறு அவர் உலகை கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

கறுப்பு உடையணிந்தவாறு முகத்தில் துயரத்துடன் இராணுவத்தின் உத்தியோக பூர்வ அறிக்கையை வாசித்த இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள் பணியிலிருந்து அகற்றப்பட்டனர்.

இதேவேளை சீன தலைநகரில் காணப்பட்ட அனைத்து பிரச்சார அலுவலகங்களையும் சீன இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது,

தினமென் சதுக்கத்தில் நடைபெற்றவைகளை நேரில் பார்த்த தங்கள் செய்தியாளர்களை பாதுகாப்பதற்கு பல  பத்திரிகையாசிரியர்கள் முயற்சித்தனர் ஆனால் அவர்களே பதவி நீக்கப்பட்டனர்.

சீனா அரசாங்கத்தின் ஊதுகுழல் என கருதப்படும் இரு ஊடகங்களின்  தலைமை நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிற்கு ஆதரவாக காணப்பட்டதால் பதவி நீக்கப்பட்டனர்.

அவ்வேளை சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளராக காணப்பட்ட  ஜாவோ ஜியாங் மாணவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்ததால்  2005 இல் அவர் மரணிக்கும் வரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதேபோன்று சீன இராணுவ அதிகாரியொருவரும் ஐந்து வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 30வருடங்களாக சீனாவின் ஆட்சியாளர்கள் யூன் 3 ம் திகதியும் நான்காம் திகதியும் இடம்பெற்றவைகளை நினைவிலிருந்து அகற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவை பலவீனப்படுத்துவதற்கான மேற்குலகின் ஒரு சதிமுயற்சி என சீனா தலைமை இதனை சித்தரிக்க முயன்றுள்ளது.

ஸ்திரதன்மைக்கும் பொருளாதார அபிவிருத்திக்காகவும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க நேர்ந்தது என தெரிவித்துள்ள சீன தலைமை இதன் காரணமாகவே தற்போதைய பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது எனவும் தெரிவித்து வருகின்றது.

அச்சுறுத்தப்ட்ட சாட்சிகள்

--------

எனினும் தினமென் சதுக்கத்தில் உயிர் தப்பியவர்களும் கொல்லப்பட்டவர்களின்  குடும்பத்தவர்கள் சீன அரசாங்கம் தெரிவிப்பதை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றனர்.

இவர்களில் பான் ஜெங் ஒருவர் - தினமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவரது கால்களை டாங்கிகள் துண்டித்தன.

தன்னை அதிகாரிகள் பொய்சாட்சி சொல்லுமாறு வற்புறுத்தினர் என்கிறார் அவர்

தினமென் சதுக்கத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் தெரிவிப்பதற்கும் அரசாங்கம் தெரிவிப்பதற்கும் இடையி;ல் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றனர்.

அவர்கள் உண்மை மற்றும் சுயாதீன விசாரணைக்காக விடுத்து வரும் வேண்டுகோள்கள் தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றன.

தினமென் சதுக்கத்தி;ல் கொல்லப்பட்ட மாணவன் ஒருவனின் தாய் ஒருவர் தனது பிள்ளையை வெளிப்படையாக நினைகூறுவதற்கு கூட உரிமையில்லாத நிலை காணப்படுவதாக சமீபத்தில் தெரிவித்தார்.

தனது பிள்ளையை மன்னித்து விடுமாறும்  அவர் கேட்டுக்கொண்டார்.

ஹொங்ஹொங்  ஊடகங்களிற்கு சீனா கடும் அழுத்தங்களை விடுத்து வருகின்ற போதிலும் தினமென் சதுக்க ஆர்ப்பாட்டங்களை நேரில் பார்த்த பத்திரிகையாளர்கள் பேட்டிகளை உள்ளடக்கிய  நான் பத்திரிகையாளன் -எனது யூன் நான்கு கதைகள்- என்ற  நிகழ்ச்சியொன்றை தயாரித்தனர்.கூட்டு நினைவுகளை அழியாமல் வைத்திருப்பதே இதன் நோக்கம்

தினமென் சதுக்கத்தின் பாரம்பரியம் என்பது வெறுமனே சீனாவிற்கு மாத்திரமானதல்ல,அது முழு உலகிற்குமானது.

சுதந்திரம் உண்மை மற்றும் நீதிக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும்  மனிதர்களிற்கு எல்லைகள் இல்லை.

யூன் நான்காம் திகதி சம்பவம் எங்கள் கூட்டு  மனிதத்தை மீறியது.

இதன் காரணமாகவே மூன்று தசாப்தங்களாக  உலகின் முக்கிய நகரங்களில் தினமென் சதுக்க படுகொலைகளை நினைவுகூறும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

முடிவற்ற மெழுகுதிரிகளின் படங்கள் டாங்கி மனிதனின் படத்தை போன்று முக்கிய குறியீடாக மாறியுள்ளது.

தினமென் என்பது வெறுமனே ஒடுக்குமுறையுடன் தொடர்புபட்டதல்ல நம்பிக்கையுடனும் தொடர்புபட்டது என்பதை அது நினைவுபடுத்துகின்றது.

 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22