சிங்கள பேரினவாதத்தின் கோரமுகம் வெளிப்பட்டுள்ளது - சிறிதரன் எம்.பி

Published By: Vishnu

04 Jun, 2019 | 03:41 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது. மதவாதத்திற்கும், பேரினவாதத்திற்கும் இடையில் சிக்குண்டு நாடு அழியப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாகவே இவ்விடயம் அமைந்திருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டில் காணப்படும் நிலை மிகப் பயங்கரமான செய்தியொன்றை நாட்டிற்கும், உலகத்திற்கும் கூறுகின்றது. நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது. பௌத்த பிக்குகள் அரசியலைக் கையிலெடுத்துச் செயற்படுகின்றார்கள். அதன் விளைவு சிறுபான்மையின மக்களை அடக்கியொடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. அதன்மூலம் இந்த நாட்டில் சிங்கள, தமிழ் மக்கள் ஒருபோதும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழமுடியாது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயற்பாடுகள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. பௌத்த தேரர்கள் போராட்டம் நடத்தினால் அதற்கு ஏற்றவாறு அரசாங்கமும் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோருக்கான நீதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கடந்த பல வருடகாலமாக தமிழ் மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். எனினும் அவை தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் எவ்வித தீர்வையும் வழங்கவில்லை. ஆனால் அத்தனை பாரதூரமற்ற ஒரு விடயத்திற்கு ஒரு தேரர் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறியிருக்கின்றன. இதன் ஊடாக சிங்கள பேரினவாதத்தின் கோரமுகம் வெளிப்பட்டிருக்கின்றது.

இந் நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள், நாளை இன்னொரு 'மற்றவர்'. எவ்வாறெனினும் முஸ்லிம் மக்களோடு நாம் தொடர்ந்து நாம் தோழமையோடு நிற்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14