பத்­தி­ரி­கை­களில் ஆசி­ரியர் தலைப்பு கௌர­வத்­துக்­கு­ரி­யது.!

Published By: Robert

29 Apr, 2016 | 09:07 AM
image

பத்­தி­ரி­கை­களில் ஆசி­ரியர் தலை­யங்கம் என்­பது கௌர­வத்­திற்­கு­ரி­ய­தாகும். எனவே அதில் உண்மைத் தன்­மையும் தர­வு­களும் இருக்க வேண்டும். பொய்­யான “மேதாவிக்” கருத்­துக்­களால் அதன் கௌரவம் பாதிக்­கப்­படும் எனத் தெரி­வித்த அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன விவ­சாய நிலங்­களில் வைக்­கப்­பட்­டுள்ள “வைக்கோல்" பொம்­மைகள் போன்று தாதியர் சங்­கங்கள் தலை­தூக்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இதனை தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இலங்­கையில் அரச மருத்­துவ மனை­களில் 1400 மருந்து வகைகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

நாட்டில் இன்று அனைத்து அத்­தி­யா­வ­சிய மருந்­து ­வ­கை­களும் உள்­ளன. 16 மருந்து வகை­க­ளுக்கு தட்­டுப்­பாடு நில­வு­கின்­றது. இவை அத்­தி­யா­வ­சி­ய­மான மருந்­துகள் அல்­ல.

அத்­தோடு புற்­று­நோய்க்கு பயன்­ப­டுத்­தப்­படும் மருந்து வகைகள் அதிக விலை­கூ­டி­யவை. அவை தொடர்பில் அந்நி­று­வ­னங்­க­ளுடன் பேச்சு நடத்தி விலை­குறைக்­கப்­பட்டு கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கின்­றன. அத்­தோடு முதல் தர மருந்து வகை உற்­பத்­திக்கு ஏற்ற வகையில் வேறு மருந்­து­களும் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.

எனவே அவற்றை கொள்­வ­னவு செய்­வது தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றா­னதோர் நிலையில் தான் மருந்து வகைகள் தொடர்பில் பெயர்ப்­ப­ல­கைக்கு மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட தாதியர் சங்­கங்கள் என்று கூறிக் கொள்­வோரின் பேச்­சுக்­களையும் தக­வல்­களையும் கேட்டு பத்­தி­ரி­கை­களில் பிழை­யான செய்­திகள் பிர­சு­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

செய்­தி­களை விட ஆசி­ரியர் தலை­யங்­கங்­களும் எழு­தப்­ப­டு­கின்­றன. இது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் தலை­யங்­க­மென்­பது கௌர­வத்­துக்­கு­ரி­ய­தாகும். அதற்­கென தனித்­துவம் உள்­ளது.

ஆசி­ரியர் தலை­யங்­கத்தை பார்த்துத் தான் பத்­தி­ரி­கையின் தரம் எடை­போ­டப்­படும். எனவே பத்­தி­ரி­கையில் ஆசி­ரியர் தலை­யங்­க­மா­னது உண்மை தக­வல்­க­ளுடன் சரி­யான தர­வு­க­ளுடன் எழு­தப்­பட வேண்டும்.

மருந்து வகை­களின் விலைகள், அவற்றின் தரம் குறித்து சேனக பிபிலவின் கொள்­கை­களை கூட அறிந்­தி­ருக்­கா­த­வர்­களே கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர்.

விவசாய நிலங்களில் விவசாயிகள் வேலை செய்வார்கள். அதே நிலங்களில் வைக்கோல் பொம்மைகளும் இருக்கும்.

அந்த வைக்கோல் பொம்மைகளைப் போன்ற தாதியர் சங்கங்களின் பொய்களைக் கேட்டு செய்திகள் எழுதப்படுகின்றன என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52