வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்கள் தப்பி ஓட்டம்

Published By: Daya

04 Jun, 2019 | 10:47 AM
image

யாழில்.வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்களின் மோட்டார் சைக்கிள் ஊர் இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 31ஆம் திகதி வங்கியில் இருந்து பணம் எடுத்துகொண்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த வயோதிப தாயாரை திருநெல்வேலி மணல் தரை ஒழுங்கைக்குள் வைத்து தாக்கி விட்டு அவரது துவிசக்கர வண்டி கூடைக்குள் இருந்த பணப்பையை இரு இளைஞர்கள் கொள்ளையிட்டு சென்றனர். அந்த பையினுள் 37ஆயிரம் ரூபா பணம் மற்றும் 40ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி என்பன இருந்துள்ளன. 

வயோதிப பெண் தாக்கப்படுவதனை அவதானித்தவர்கள் அவரை மீட்க சென்ற போது கொள்ளையர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற போது அப்பகுதி இளைஞர்கள் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் துரத்திய போதிலும் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். 

கொள்ளையர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகோ ரக மோட்டார் சைக்கிள் எனவும் BGH 9328 இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் எனவும் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

பொலிஸாரின் விசாரணையின் வேகம் காணாது என அதிருப்தியடைந்த அப்பகுதி இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை கொண்டு அதன் உரிமையாளர் பொம்மை வெளி பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து அவரது வீட்டுக்கு  திங்கட்கிழமை இளைஞர்கள் சென்ற போது உரிமையாளர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.  

அவ்வேளை வீட்டின் முன்னால் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் நின்றதனை அவதானித்த இளைஞர்கள் அதனை மீட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47