தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள 559 முஸ்­லிம்கள் விசாரணையின் பின்னர் விடுதலை - ஜனாதிபதி

Published By: Digital Desk 3

04 Jun, 2019 | 11:00 AM
image

இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் என்­ப­தனால் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் பரஸ்­பர புரிந்­து­ணர்­வு­டனும் நாட்டில் சமா­தா­னத்தைப் பாது­காப்­ப­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டு­மென ஜனா­தி­பதி   தெரி­வித்தார். 

நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்த புரிந்­து­ணர்­வு­டனும் புத்­தி­சா­து­ரி­யத்­து­டனும் செயற்­பட்டு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்­ப­தோடு, நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொள்ளும் என்றும்  ஜனா­தி­பதி  கோரிக்கை விடுத்தார். 

இஸ்­லா­மிய பக்­தர்­க­ளுக்­காக நேற்று மாலை ஜனா­தி­பதி மாளி­கையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த தேசிய இப்தார் வைப­வத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே ஜனா­தி­பதி  மைத்தி­ரி­பால சிறி­சேன  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

இஸ்­லா­மிய மதத்தலை­வர்­களும் பெரு­ம­ள­வி­லான இஸ்­லா­மிய பக்­தர்­களும் இவ்­வை­ப­வத்தில் கலந்­து­கொண்­டனர்.  ஜனா­தி­பதி அங்கு  தொடர்ந்து குறிப்­பி­டு­கையில், 

நாட்டு மக்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் குரோ­தத்­து­டனும் சந்­தே­கத்­து­டனும் நோக்கும் நிலை காணப்­படும் வரையில் நாட்டில் ஐக்­கி­யத்­தினை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.   அடிப்­ப­டை­வாத மற்றும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தோடு, சகல இன மக்­களும் நியா­ய­மான சமூ­கத்தில் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய சூழலைக் கட்­டி­யெ­ழுப்ப அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டும். 

முஸ்­லிம்கள் பெரு­ம­ளவில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்­பான அறிக்கை ஒன்­றினை நான் பெற்­றுக்­கொண்­டுள்ளேன்.  கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்டு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக 559 முஸ்­லிம்கள் மாத்­தி­ரமே தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு, உரிய விசா­ர­ணை­களின் பின்னர் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பற்ற அனை­வ­ரையும் விரைவில் விடு­தலை செய்ய நட­வ­டிக்கை  எடுப்போம் என்றார். 

இதே­வேளை நாட்டின் தற்­போ­தைய சூழ்­நி­லையில் அனைத்து இனங்­க­ளி­னதும் மதங்­க­ளி­னதும் கௌர­வத்­தினை பாது­காத்து அனை­வ­ருக்கும் நியா­யத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக  ஜனா­தி­பதி  மேற்கொண்டுவரும் முயற்சியினை பாராட்டிய இஸ்லாமிய மதத் தலைவர்கள், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசி வழங்கினர். 

சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வெளிநாட்டு தூதுவர்கள், வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37