அப்பிள் ஐ.ஓ.எஸ்.- 13 இன் சிறப்பம்சங்கள் என்ன ?

Published By: Digital Desk 3

04 Jun, 2019 | 04:07 PM
image

ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் உலகம் எங்கும் இருக்கும் தனது தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கு நடத்தும் மாநாட்டில் (WWDC 2019 – World Wide Developers Conference) அப்பிள் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்புகளையும், எதிர்காலத் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று திங்கட்கிழமை ஜூன் 3 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் தொடங்கி 7-ஆம் திகதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ள 2019 WWDC மாநாட்டில், முதல் நாளில் அப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுட்டார். 

WWDC 2019 சிறப்புகள்

புத்தம் புதிய அப்பிள் ஓ.எஸ். அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஓ.எஸ். முற்றிலும் பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாக வெளிவந்துள்ளது. டார்க் மோட், இலகு மெமரி கொண்ட அப்ஸ் , புதிய ஆப்பிள் உள்நுழைவு போன்றவற்றை கொண்டதாக ஐ.ஓ.எஸ். 13 பெற்றுள்ளது.

குறிப்பாக இந்த ஐ.ஓ.எஸ். 13 புதிய தொழில்நுட்பத்தின் வழி டார்க் மோட் (Dark Mode) எனப்படும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கப் போகிறது. திரையில் ஒளியை உமிழாத கரும் வண்ணங்களில் எழுத்துகளும் படங்களும் இனி தெரியும் என்பதால், இதன் மூலம் அப்பிள் கருவிகளின் மின்கல (பேட்டரி) சக்தியின் கால அளவு (battery life) கூடுதலாகும்.

மேலும் பயனாளரின் அந்தரங்க தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள எதுவாக சில மாற்றங்களை அப்பிள் நிறுவனம் செய்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் ஒரு முறை மட்டும் லொகேஷனை பகிர்வது போல் அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும்.  மேலும் கமரா சிறப்பான புகைப்படங்களை எடுக்கும் வகையில் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட முறையில் எளிதாக மற்றும் விரைவாக செயலி மற்றும் வலைத்தளங்களில் உள்நுழைய அப்பிள் அறிமுகப்படுத்தி ஒரு புதிய வழி ' அப்பிளுடன் உள்நுழை' (“Sign in with Apple”) எனப்படும் வசதியாகும்.

ஒரு சமூகவலைத்தள கணக்கைப் பயன்படுத்தும் போது அல்லது படிவங்களை பூர்த்தி செய்வது, மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்க அல்லது கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அப்பிள் ஐடியை அங்கீகரிக்க பயன்படுத்தலாம் மற்றும் அப்பிள் தனித்துவமான சீரான ஐடியை டெவலப்பர்கள் வழங்குவதன் மூலம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும்.

டெவலப்பர்கள் ஒரு பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கேட்கத் தேர்ந்தெடுக்கும் இடங்களில் கூட, பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க மற்றும் அதற்கு பதிலாக ஒரு தனித்துவமான சீரான மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ள முடியும்.

அப்பிள் மூலம் உள்நுழைவு பயனர்களுக்கு ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி மூலம் அங்கீகரிக்காரம்  வழங்கப்படும். கூடுதல்  பாதுகாப்புக்காக மேற்கூறிய இரு அங்கீகாரமும் உள்ளது. அப்பிள் பயன்பாட்டில் பயனர்கள் அல்லது அவர்களின் செயல்பாடு சுயவிபர அப்பிள் உள்நுழை பயன்படுத்த முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26