கொல்­கத்­தா­வுக்கு எதி­ரான போட்­டியில் பொல்­லார்டின் அதி­ரடி ஆட்­டத்­தினால் மும்பை இந்­தியன்ஸ் அணி 6 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது.

நேற்று மும்பை வான்­கடே மைதா­னத்தில் நடை­பெற்ற 24ஆவது ஐ.பி.எல்.லீக் போட்­டியில் மும்பை மற்றும் கொல்­கத்தா அணிகள் மோதிக்­கொண்­டன.

இந்­தப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடக் கள­மி­றங்­கிய கொல்­கத்தா அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக உத்­தப்பா மற்றும் அணித் தலைவர் கம்பீர் ஆகியோர் கள­மி­றங்­கினர்.

இந்த ஜோடி சிறப்­பான ஒரு ஆரம்­பத்தைக் கொடுக்க 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 174 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது கொல்­கத்தா. இதில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கிய உத்­தப்பா (36)இ கம்பீர் (59) மற்றும் யாதவ்(21)இ ரஸல் (22) என ஓட்­டங்­களைச் சேர்த்­தனர்.

அதைத் தொடர்ந்து 175 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான மும்பை இந்­தியன்ஸ் அணி 18 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 178 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

மும்பை இந்­தி­யன்ஸின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் பட்டேல் ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் பட்டேல் 1 ஓட்­டத்­துடன் வெளி­யேறஇ அடுத்து வந்த அம்­பத்தி ராயுடு 32 ஓட்­டங்­களை விளா­சினர். அதன்­பி­றகு கள­மி­றங்­கிய பாண்­டியா (6)இ பட்லர்(15) ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க அணி இக்­கட்­டான நிலைக்கு தள்­ளப்­பட்­டது.

அதன்­பி­றகு அணித் தலைவர் ரோஹித் ஷர்­மா­வுடன் ஜோடி சேர்ந்த பொல்லார்ட் இறு­தி­வரை களத்தில் நின்று அணியை வெற்­றி­பெ­ற­வைத்தார். இதில் ரோஹித் ஷர்மா 49 பந்துகளில் 68 ஓட்டங்களையும்இ அதிரடியாக ஆடிய பொல்லார்ட் 17 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும் பெற்று களத்தில் நின்றனர்.

இறுதியில் மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.