இனவாதம் மீண்டும் தலைதூக்கினால் நாடும் அழிந்துவிடும், நாமும் அழிந்து விடுவோம் ; பிரதமர்

Published By: Digital Desk 4

02 Jun, 2019 | 08:27 PM
image

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பெயரால் சிலர் இனமோதலை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு முயல்கின்றார்கள். இவ்வாறான இனமோதல்களை ஒரு குழுவே திட்டமிட்டு மேற்கொள்கின்றது. அந்த குழு நாட்டில் பல பகுதிகளில் இனமோதலை உருவாக்க முயன்ற நிலையில் நாங்கள் அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். இனியும் தடுத்து நிறுத்துவோம்.என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

சமூர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுடன் தொடர்புகளை பேணியவர்களுக்கும் எந்தக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது. மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படாது. தற்போது பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு இராணுவமும், பொலிஸாரும் இணைந்து பணியாற்றி கொண்டிருக்கின்றார்கள். அதற்குச் சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

தீவிரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் அபிவிருதிகள் தடைப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் உள்ள சகல மத தலைவர்களுக்கும் நன்றி கூறவேண்டியவனாக இருக்கிறேன். குறிப்பாக கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டில் சமாதானத்தை உண்டாக்கக் கடுமையாக உழைத்திருந்கின்றாா். அதேபோல் சகல மத தலைவர்களும் ஒன்றிணைந்த இந்த நாட்டி ல் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடாது என்பதற்காக பணியாற்றியுள்ளார்கள்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாங்கள் முன்னதாக அறிந்திருக்கவில்லை. அதற்கு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்கச் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் தற்போது சூழல் நன்றாக இருக்கின்றது.

வாாியபொல உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. அவற்றுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும். எங்கள் அமைச்சர்கள் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு சென்று மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை செய்திருக்கின்றார்கள்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகப் பூரணமான விசாரணைகள் நடாத்தப்படும். மேலும் இந்த தாக்குதல் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றே நான் கூறவிருக்கிறேன். இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிக்க சிலர் நினைக்கிறார்கள். நீா்கொழும்பு பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது.

அதற்குக் காரணம் வதந்தி. இவ்வாறு பல தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் அவற்றை நாங்கள் முறியடித்திருக்கின்றோம். தீவிரவாதிகளுக்கு மனிதாபிமானம் என்பது கிடையாது. ஆகவே இவ்வாறான தாக்குதல்களுக்கு இனிமேல் இடமளிக்கப்படாது. பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது.

தீவிரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி கண்டுள்ளதாக சிலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலைகளைத் திறந்திருக்கின்றோம். மேலும் முஸ்லிம் மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பங்கள் நன்கு திட்டமிட்டு ஒரு குழு நடாத்தியிருக்கின்றது. அதற்குள் தனிப்பட்ட முரண்பாடுகளும் இருக்கின்றன.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரும், பொலிஸாரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குப் பொதுமக்கள் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் மன்னிப்பு கிடையாது. தீவிர வாதிகளின் பெயரால் இனவாதம் தலைதூக்குவதைத் தடுக்கவேண்டும்.

இனவாதம் மீண்டும் தலைதூக்கினால் நாடும் அழிந்துவிடும், நாமும் அழிந்து விடுவோம். தாக்குதல்களினால் நாடு பரியப் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றது. இவற்றிலிருந்து மீள்வதற்கு இன்னும் 2 வருடங்கள் தேவை

இந்த நாட்டில் வடக்கு மக்களுக்கு 10 வருடங்களுக்கு மேலாக சமூா்த்தி கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் அரசியல் லாபம் கருதிச் செயற்பட்டமையே ஆகும். ஐ.தே.கட்சி 2018ம் ஆண்ட ஒக்டோபா் மாதம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றதன் பின்னர் சமூா்த்தி அமைச்சின் ஊடாக சமூா்த்தி வழங்க முன்வந்துள்ளோம். 52 நாட்கள் மஹிந்த ஆட்சியில் இவர்களுக்கு சமுா்தி கிடைக்கவில்லை.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நாம் யூலை மாதம் வடக்கு சென்று சமூா்த்தி வழங்குவோம் என்றோம்.இதன் பிரகாரம் இன்று சமூா்தி வழங்கப்படுகிறது. விசேடமாக தயாகமகே அமைச்சு பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சை திறம்பட நடாத்திவருகின்றாா்.

அவர் சிறு கிராமிய அமைச்சைத் திறம்பட நடாத்தியா் தற்போது சமூா்தியை திறம்பட நடாத்துகிறாா். இந்த வருட இறுதியில் 15 ஆயிரம் ரூபாய் சமூா்த்தி கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. திறமையாக செயற்பட்டமையே இதன் வெற்றியாகும்.

இதேவேளை அரசாங்கம் பெரும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கிறது. நாம் வடக்கில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் பதவியேற்ற பின்னர் யுத்தத்தால் முற்றாக அழிந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதற்கு இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கிவருகின்றனா்.

மீன்படி துறைமுகம், காங்கேசன்துறை,

வீடமைப்பு திட்டம், நகர அபிவிருத்தி திட்டம் எனச் சகல அமைச்சுகளின் ஊடாகவும் அபிவிருத்திகளை செய்கிறோம். விசேடமாக நிதியமைச்சு இந்த திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது. சுமார் 250 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் ஊடாகவும் என்டபிறைஸ் சிறீலங்கா திட்டம் ஊடாக கடன் வழங்கும் திட்டம், வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. கொழும்பைப்போல் சமமான அபிவிருத்தித் திட்டங்களை செய்கிறோம். வடக்கில் 10 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தைத் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்பிக்கிறோம். தற்போது வீட்டுத்திட்டம் ஆரம்பிக்க்பட்டுள்ளது 5200

கிழக்கிலும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கவுள்ளோம். யுத்தத்தால் முற்றாக அழிந்துள்ளது. இந்த நாட்டில் இனவாதம் இல்லையென்றால் நாம் பல அபிவிருத்திகளை செய்திருப்போம். தமிழ் மக்கள் இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக திருப்தியடையவேண்டும். விசேடமாக நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கவேண்டும். நாங்கள் இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலிருந்து விலகவில்லை.என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31