விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சாரதி வாகனத்துடன் கைது

Published By: Daya

01 Jun, 2019 | 02:36 PM
image

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற  சாரதியை வாகனத்துடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வவுனியா மரக்காரம்பளை வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்ற சொகுசு வானம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனச்சாரதி தப்பிச் சென்ற நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாகனச் சாரதியை வாகனத்துடன் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

வவுனியா மரக்காரம்பளை வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிளை பின்னால் சென்ற கே.டி.எச் சொகுசு வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.  இதையடுத்து அப்பகுதியிலிருந்தவர்களின் உதவியுடன் படுகாமடைந்த நபரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

குறித்த வீதிகளுக்கு அண்மையில் இருந்த சி.சி.ரி காணொளி மூலம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்றைய தினம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மரக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 44வயதுடைய நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08