இலங்கை அணிக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கிய வீரர்கள் யார்?

Published By: Rajeeban

01 Jun, 2019 | 11:10 AM
image

2019 உலக கிண்ண தொடரில் இலங்கை இன்று தனது முதலாவது போட்டியில் நியுசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள அதேவேளை இலங்கை அணியின் இரு முன்னாள் தலைவர்கள் அணி வீரர்களிற்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் அவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளனர்.

இலங்கை அணியின் தலைவர்; திமுத் கருணாரட்ண இதனை தெரிவி;த்துள்ளார்.

முன்னாள் தலைவர்களான அர்ஜூன ரணதுங்கவும் குமார் சங்ககாரவும் இலங்கை அணி வீரர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளதுடன் அவர்களிற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் என திமுத்  கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

சங்ககார அணி வீரர்களிற்கு சில ஆலோசனைகளை வழங்கினார் அவை எங்களிற்கு மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த உலக கிண்ணபோட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினார் இதன் காரணமாக  இவ்வாறான போட்டிக்கு எவ்வாறு எங்களை மனோரீதியில் தயார்படுத்துவது என்ற ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக முக்கியமானதாக காணப்பட்டது என  திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்

1996 இல் உலக கிண்ணத்தை கைப்பற்றிய அர்ஜூன ரணதுங்கவும் நாங்கள் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் எங்களிடம் வந்து ஆலோசனைகளை வழங்கினார் என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

நாங்கள் துணிச்சலுடன் இருப்பதற்கு இவ்வாறான விடயங்கள் முக்கியமானவை,முன்னாள் வீரர்கள் எங்களிற்கு உதவுகி;ன்றனர், மகேல ஜெயவர்த்தனாவும் இங்கிருக்கின்றார் அவரும் எங்களிற்கு ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22