மோசடிகளைத் தடுக்கவே சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் வழங்கப்பட்டது - கல்வி அமைச்சர்

Published By: Daya

31 May, 2019 | 04:48 PM
image

பாடசாலை சீருடை துணி வழங்கலில் காணப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகளை முற்றாக நீக்கி மாணவர்களின் சீருடையை வைத்து எவரும் மோசடிகளில் ஈடுபடாமல் இருப்பதற்காகவே பாடசாலை சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. சீரான ஒழுங்கு முறைமைக்கு அமைவாகவே குறித்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைமையின் ஊடாக பல கோடிக்கணக்கான பணத்தை அராசாங்கத்திற்கு சேமிக்க முடிந்தது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப்பிரிவில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் முகமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவைக்கு உள்வாங்கும் திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட அபிவிருத்தி அலுவலகர்கள் 592 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபேகம அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

பாடசாலை சீருடை துணி வழங்கலில் காணப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகளை முற்றாக நீக்கி மாணவர்களின் சீருடையை வைத்து எவரும் மோசடிகளில் ஈடுபடாமல் இருப்பதற்காகவே பாடசாலை சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. சீரான ஒழுங்கு முறைமைக்கு அமைவாகவே குறித்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைமையின் ஊடாக பல கோடிக்கணக்கான பணத்தை அராசாங்கத்திற்கு சேமிக்க முடிந்தது. 

அதேபோன்று சுரக்சா காப்புறுதித் திட்டம் தொடர்பாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் கல்வி அமைச்சினால் சுரக்சா காப்புறுதி திட்டம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக சுரக்சா திட்டத்தை தனியார் துறைக்கு வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதி நியமித்த மேன்முறையீட்டு விசாரணை குழுவே எடுத்தது. 

மேலும் பாடப்புத்தகங்களில் அமைச்சரின் வாழ்த்து செய்தி உட்சேர்க்கப்பட்டமை தொடர்பாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் பாடப்புத்தக வாழ்த்துச் செய்தி முறைமை முன்பு இருந்த கல்வி அமைச்சர்களின் காலத்திலும் நிலவியதுடன் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியும் கடந்த காலங்களில் பாடப்புத்தகங்களில் உட்சேர்க்கப்பட்டிருந்தது. எனினும் அமைச்சரின் வாழ்த்து செய்தி உட்சேர்க்கப்பட்டமைக்காக மேலதிக நிதி செலவிடப்படமாட்டாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44