தென்னாபிரிக்கா - இங்கிலாந்து அணிகளுகிடையிலான போட்டியில் சில துளிகள்

Published By: Vishnu

31 May, 2019 | 01:32 PM
image

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெற்றது.

இப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டத்தினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் நேற்றைய போட்டியில் இடம்பெற்ற சில பதிவுகள் :

* இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கனின் 200 ஆவது ஓருநாள் போட்டி.

இங்கிலாந்து அணிசார்பில் அதிகப்படியான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தலைவராகவும் இவர் பதிவானர். இதற்கு முன்னர் போல் கொலிங்வூட் 197 ஒருநாள் போட்டிகளிலும், ஜேம்ஸ் அண்டர்சன் 194 போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

* கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறை லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியமை.

* இத் தொடரில் முதல் விக்கெட்டை தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாகீர் கைப்பற்றினார்.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு ஓட்டத்தைப்பெற்றபோது தாஹிரின் பந்தில் பெய்ஸ்ரே தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

* உலகக் கிண்ண தொடரில் முதல் போட்டியில் முதல் ஓவரை வீசிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இம்ரான் தாஹிர் பெற்றார். 

இதற்கு முன்னதாக 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் இரண்டாவது ஓவரை வீசியவர் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீபக் பட்டேல் ஆவார்.

* இத் தொடரில் முதல் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார் இங்கிலாந்து அணியின் ஜோசன் ரோய்.

ரோய் மொத்தமாக இப் போட்டிகளில் 51 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் பெற்றார். அத்துடன் அவர் கடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மொத்தமாக 452 ஓட்டங்களை குவித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

* சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன் 7000 ஓட்டங்களை பெற்றார்.

* இங்கிலாந்து அணி அண்மையில் தான் எதிர்கொண்ட தொடர்ச்சியான ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் 300 ஓட்டங்களை கடந்துள்ளது.

373/3 (50), 359/4 (44.5), 341/7 (49.3), 351/9 (50), 311/8 (நேற்று)

* 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொய்ன் அலி, ஒருநாள் போட்டிகளில் நேற்றைய போட்டியுடன் மொத்தமாக 55 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு ஒரேயொரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றியுள்ளார்.

0/85(10), 0/51(7), 0/31(2), 1/66(10), 0/32(6), 0/30(4), 0/63(10), 0/38(6) -நேற்று. ஒரு விக்கெட் 55 ஓவர்களில்

* கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தென்னாபிரிக்க அணி தான் எதிர்கொண்ட உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நேற்றைய தினம் தோல்வியடைந்தது.

2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தான் எதிர்கொண்ட முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளிடம் 3 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணி தோல்வியை சந்தித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31