100 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு : 27 பேர் மீது வழக்குத் தாக்கல்

Published By: Robert

28 Apr, 2016 | 01:37 PM
image

மட்டு. மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடாமல் மற்றும் நிறை குறைத்த பொருட்களை விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்கள் கடந்த 3 நாட்களில் சுற்றிவளைக்கபட்டன.

இவற்றுள் 27 வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு நகரம், ஆரையம்பதி, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கடிச்சோலை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீன்வியாபார நிலையங்கள், மீன்வாடிகள், நகைகடைகள், பேக்கரிகள், சில்லறை கடைகள், பழக்கடைகள் என்பன இச்சுற்றிவைப்பு நடவடிக்கைக்குள் அடங்கியிருந்தன.

முத்திரையிடப்படாத தராசுகளை பாவித்தமை நிறை குறைந்த பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி நீதிமன்றங்களில் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43