அரச சார்பற்ற நிறுவனத்திற்குள் படையினர் புகுந்து திடீர் சோதனை

Published By: Digital Desk 4

30 May, 2019 | 07:18 PM
image

மன்னார் வயல் வீதி பகுதியில் அமைந்துள்ள மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினுள் இன்று வியாழக்கிழமை மாலை திடீர்  சோதனைக்கு எனப்  புகுந்த படையினர் குறித்த நிறுவனத்தை முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தியதுடன் அங்குச் சென்ற படைத்தரப்பு அதிகாரி ஒருவர் அநாகரிகமான முறையில் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பாகக் குறித்த படைத்தரப்பு அதிகாரி அச்சுறுத்தல் விடுத்ததாகவும்  மன்னார் மனித உரிமைகள்  ஆணைக்குழுவில் வாய் மொழி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் திடீரென குறித்த நிறுவனத்திற்குள் புகுந்த 50க்கும் மேற்பட்ட படையினர் குறித்த நிறுவனம் முழுவதையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

 குறித்த நிறுவனமானது தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் காணி தொடர்பாகவும் விவசாயம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும் மக்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றது.

இந்த நிலையில் குறித்த பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட போதும் சோதனைக்கு வந்த  அதிகாரி ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் உரையாடியதாகவும் குறித்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் ஒரு அதிகாரியினால் குறித்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த  சி.சி.ரீவி கெமராவும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த சோதனை தொடர்பாகவும் அநாகரிகமாகச் செயற்பட்ட அதிகாரி தொடர்பாகவும் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் குறித்த நிறுவனம் வாய் மொழி மூலமான முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ததுடன் மனித உரிமை ஆணைக்குழு ஊழியர்  உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27