4 அரைசதங்களுடன் 311 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து

Published By: Vishnu

30 May, 2019 | 06:51 PM
image

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 311 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இன்று மாலை 3.00 மணிக்கு ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி களத்தடுப்பை தீர்மானிக்க, இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்ப வீரர்களாக ஜோசன் ரோய் மற்றும் பெயர்ஸ்டோ களமிறங்கினர். தென்னாப்பிரிக்க அணி சார்பில் முதல் ஓவருக்கு இம்ரான் தாகீர் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள முதல் பந்தில் ஜோசன் ரோய் ஒரு ஓட்டத்தை எடுத்தார். இரண்டாவது பந்தை எதிர்கொண்ட பெயர்ஸ்டே எதுவித ஓட்முமின்றி டீகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேற, இம்ரான் தாகீரின் ஓட்டம் ஆர்பமானது. 

இங்கிலாந்து அணி ஒரு ஓட்டத்துக்கு ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது. இருந்தபோதிலும் 2 ஆவது விக்கெட்டுக்காக ரோய் மற்றும் ரூட் ஜோடி சேர்ந்தாடி இங்கிலாந்தின் நெருக்கடியை போக்கினர்.

இதனால் இங்கிலாந்து அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 50 ஓட்டங்களையும் 17 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களையும் பெற்றது. இந் நிலையில் 17.3 ஆவது ஓவரில் ரோய் அரைசதத்தை பூர்த்தி செய்ய மறுமுணையில், அதே ஓவரின் இறுதிப் பந்தில் ரூட் அரைசதம் விளாசினார்.

இந் நிலையில் 18.4 ஆவது பந்தில் ரோய் மொத்தமாக 53 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 54 ஓட்டத்துடன் பெலக்கெய்யோவின் ஓவரில் டூப்பிளஸ்ஸியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அவருக்கு பக்கபலாமகவிருந்த ரூட்டும் 19.1 ஓவரில் மொத்தமாக 59 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 51 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (217-4).

4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடிசேரந்த அணித் தலைவர் ஈயன் மோர்கனும், பென்ஸ்டோக்ஸும் இங்கிலாந்து அணிக்கு மேலும் வலுசேர்த்தனர். அதனால் இங்கிலாந்து அணி 26.3 ஓவர்களில் 150 ஓட்டங்களையும், 30 ஓவரின் முடிவல் 170 ஓட்டங்களையும், 35 ஆவது ஓவரின் நிறைவின் 200 ஓட்டங்களையும் 3 விக்கெட் இழப்புக்கு பெற்றது.

இதனிடையே ஈயன் மோர்கன் 32.3 ஆவது ஓவரில் அரை சதம் விளாசினார்.

எனினும் அவர் 36.5 ஆவது ஓவரில் இம்ரான் தாகீரின் சுழலில் சிக்கி மக்ரமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய பட்லரும் 41.2 ஆவது ஓவரில் 18 ஓட்டத்துடன் லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் போல்ட் ஆனார் (247-5)

பட்லரின் ஆட்டமிழப்பையடுத்து மெய்ன் அலி களம்புகுந்து துடுப்பெடுத்தாடிவர இங்கிலாந்து அணி 41.5 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது. 

43.6 ஆவது பந்தில் மொய்ன் அலி 3 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸும் 47.3 ஆவது ஓவரில் 13 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (285-7).

இதன்பின் களமறிங்கிய பிளங்கடுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தாடி இங்கிலாந்து அணி 48.4 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 300 ஓட்டங்களை பெற்றதுடன், பென் ஸ்டோக்ஸ் 48 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 89 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (300-8).

இறுதியாக இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் பினங்ட் 8 ஓட்டத்துடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணிசார்பில் ரபாட 3 விக்கெட்டுக்களையும், இம்ரான் தாகீர், லுங்கி நிகிடி தலா 2 விக்கெட்டுக்களையும், பெலக்கெய்யோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

photo credit : ICC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35