இஸ்லாமிய அரசே தாக்குதலுக்கு இலங்கையை தெரிவுசெய்தது !

Published By: Priyatharshan

30 May, 2019 | 05:41 PM
image

  - பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன்

250 பேரைபப் பலியெடுத்து மேலும் நாற்றுக்கணக்கானோரை முடமாக்கிய ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறும்வரை இலங்கைக்கும் இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து அவதானிகளும் ஆய்வாளர்களும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. தாக்குதல்களுக்கு பிறகு இந்த விடயம் குறித்து பெருமளவுக்கு எழுதப்பட்டு பிரசுரமாகியிருக்கிறது. 

ஜோனா பிளாங்க் என்ற அமெரிக்க நிபுணரினால் ஸ்ரீலங்கா கார்டியன் இணையத்தள பத்திரிகையின் ஆசிரியர் நிலாந்த இலங்கமுவவுக்கு அண்மையில் அளிக்கப்பட்ட நேர்காணல் ஒன்று பெருமளவுக்கு கவனத்தை ஈர்த்திருந்தது. ' இஸ்லாமிய அரசு இலங்கையை தெரிவுசெய்யவில்லை ; ஆனால், இலங்கைக் குழுவே இஸ்லாமிய அரசை தெரிவு செய்தது ' (  ISIS did not choose SriLanka, but SriLankan Group chose ISIS ) என்ற தலைப்பில் வெளியான அந்த நேர்காணல் பல பத்திரிகைகளும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டதுடன் உள்ளூர் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. நேர்காணலின் மையக்கருத்து தவறான தகவலின் அடிப்படையிலானது மாத்திரமல்ல, தவறான எண்ணத்தை தோற்றுவிப்பதாகவும் இருக்கிறது ; குறிப்பிடத்தக்க அளவுக்கு கொள்கை மற்றும் செயற்பாட்டு விளைவுகளையும் கொண்டுவரக்கூடியதாகும்.அதனால் இந்த கட்டுரையில் எனது நோக்கில் அமெரிக்க நிபுணரின் நேர்காணலில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துக்கூறுவதே நோக்கமாகும்.

பிளாங்கின் கருத்து

அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியிலும்  தனியார் நன்கொடைகளிலும் இயங்குகின்ற சர்வதேச கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான  ராண்ட் கோர்ப்பரேசனுக்காக ( RAND Corporation )பணியாற்றுகின்ற ஒரு அரசியல் ஆய்வாளரும் ஆராய்ச்சியாளருமான ஜோனா பிளாங்க் ' ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் ' பற்றி குறிப்படத்தக்க இரு கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் ; (1)  பல தரப்பினரும் கூறுவதைப் போன்று புலனாய்வுத்துறையின் தவறு அல்ல அதைக்காட்டிலும் அரசியல் அலட்சியமே குண்டுத்தாக்குதல்களுக்கு காரணம். (2) இஸ்லாமிய அரசு ( ஐ.எஸ்.ஐ.எஸ்.) இலங்கையைத் தெரிவுசெய்யவில்லை, மாறாக இலங்கைத் தீவிரவாதிகளே இஸ்லாமிய அரசை தெரிவுசெய்தார்கள்.

முதலாவது அனுமானத்தை எவரும் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அரசியல் உட்பூசலின் விளைவா தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள்? தாக்குதல்களைத் தடுக்கமுடியாமல் போனமைக்கு மிகவும் உயர்மட்டத்தில் நிலவிய அதிகாரச்சண்டையும் செயற்திறனின்மையும் காரணம் என்று நான் நம்புகிறேன்.சஹரான் குழு அல்லது தேசிய தவ்ஹீத் ஜமாத் தீவிரவாதமயப்பட்டதன் விளைவே தாக்குதல்கள். இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் இருக்கக்கூடியது சாத்தியம்.ஆனால், அதுவல்ல இங்கு பிரச்சினை. இரண்டாவது வாதமே பிரச்சினைக்குரியதாக இருக்கிறது.அந்த வாதம் இலங்கையில் கணிசமானளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கின்றது போலத் தெரிகிறது.

இஸ்லாமிய அரசு இலங்கையை தெரிவுசெய்யவில்லை, மாறாக இலங்கைக்குழுவே இஸ்லாமிய அரசைத் தெரிவுசெய்தது என்ற வாதம் பல்வேறு காரணங்களுக்காக பல குறைபாடுகளையுடையதாக இருக்கிறது. அவற்றில் முக்கியமான மூன்று காரணங்களை தருகின்றேன் 

 (1) அந்த வாதம் இஸ்லாமிய அரசுக்கு தெற்காசியா குறிப்பாக இந்தியா எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்ற அம்சத்தை குறைத்து மதிப்பிடுகிறது.(2)  தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் ( மற்றைய குழுக்களினதும் ) ஆற்றலை மிகைதிப்பீடு செய்கிறது.(3) அந்த வாதத்தை நம்பினால் பாதுகாப்புப்படைகளும் பொலிஸும் மெத்தனமாக இருந்துவிடுவதற்கு அது வழிவகுத்துவிடக்கூடும்.

இந்தியாவும் தெற்காசியாவும்

இஸ்லாமிய அரசு இலங்கையை தெரிவுசெய்யவில்லை, இலங்கைக் குழுவே இஸ்லாமிய அரசை தெரிவுசெய்தது என்ற கருத்து இஸ்லாமிய அரசுக்கு இலங்கை மீது ஆர்வம் இல்லை என்ற மறைமுகமாகக் குறிப்பிடுவதாக அமைகிறது. இலங்கைக்குழுவினர் கேட்டுக்கொண்டதனாலேயே இஸ்லாமிய அரசு தாக்குதலுக்கான கருவிகளையும் பயிற்சியையும் கொடுத்தது என்ற அர்த்தத்திலேயே பிளாங்க் கூறுகிறார். இந்த எண்ணம் இஸ்லாமிய அரசுக்கு தெற்காசியாவும் இந்தியாவும்  முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை முற்றுமுழுதாக அலட்சியம் செய்கிறது.

உலகளாவிய இராச்சியத்தை ( Global caliphate  ) நிறுவுவதற்கு நாட்டம் கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு பரந்தளவிலான அபிலாசைகள் இருக்கின்றன. அதன் உலகளாவிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக இஸலாமிய அரசு எகிப்து, இந்தோனேசியா, சோமாலியா மற்றும் பிலிப்பைன்ஸ்போன்ற நாடுகளில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது. தெற்காசியாவும் நிகழ்ச்சித்திட்டத்தில் ஒரு அங்கம். அந்த பிராந்தியத்தில் கணிசமான முஸ்லிம் சனத்தொகை இருப்பதே பெரும்பாலும் அதற்க காரணமாகும். ' இஸ்லாமிய அரசின் வீழ்ச்சியும் தெற்காசியாவுக்கான அதன் விளைவுகளும் ' ( The Fall of ISIS and it's implications for South Asia  ) என்ற கட்டுரையில் கபீர் தனேஜா , " தெற்காசியாவின் சிக்கலான சமூக -- அரசியல் மற்றும் சமூக -- கலாசார கதையாடல்கள் இஸ்லாமிய அரசின் கோட்பாடுகளைக் காட்டிலும் அதன்  சாகசவேலைகளுக்கு வசதியாக கதவைத் திறந்துவைத்திருக்கிறது " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உதாரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய அரசின் ஆழமான ஊடுருவல்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது.பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பாராந்தியங்களில் இஸ்லாமிய அரசு தீவிரமாக இயங்கிவருகின்றது. பாகிஸ்தானை இஸ்லாமிய அரசு இயக்கமயமாக்குவது (Isisization   ) குறித்து சிலர் பேசுவதால் பாகிஸ்தானி்ன் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்யமுடியாது.

கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா இஸ்லாமிய அரசின் கவனிப்பு மையமாக மாறியிருக்கிறது. இஸ்லாமிய அரசினால் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரைபடமொன்றில் உலகளாவிய இஸ்லாமிய இராச்சியத்தின் ஒரு அங்கமாக இந்தியாவின் மேற்குப் பிராந்தியங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.ஒரு அடையாளபூர்வமான நடவடிக்கையாக  இந்தியாவை இஸ்லாமிய அரசு அதன் மாகாணங்களில் ( Wilayath of Hind  )  ஒன்றாக இவ்வருடம் பிரகடனமும் செய்திருக்கிறது. இந்தியாவில் தாாக்குதல்களை நடத்துமாறு பிராந்தியத்தில் உள்ள தனது முகவர்களை இஸ்லாமிய அரசு அண்மைக்காலத்தில் கேட்டிருந்தது. இந்தியாவில் ஆட்சேர்ப்பதில் குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலமாக அந்த இயக்கம் கூடிய கவனம் செலுத்தியிருக்கிறது.

தெற்காசியாவும்இந்தியாவும் இஸ்லாமிய அரசின் திட்டங்களில் முக்கியமான ஒரு பகுதியாக மாறியிருக்கும்போது  இலங்கை மீது அந்த இயக்கத்துக்கு ஏன் ஆர்வம் இருந்திருக்காது  என்பது முக்கியமான கேள்வியாகும். தெற்காசியாவின் ஏனைய பல அரசுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை திறந்த ஒரு சமுதாயமாகும். அது கணிசமான அளவில் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்டிருக்கிறது ; தீவிரவாதமயப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் சிறிய குழுவொன்றும் இலங்கையில் இருக்கிறது.

இந்த சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடம் ஒரு வகையில் ஆசீர்வாதமாகவும் இன்னொரு வகையில் சாபமாகவும் இருக்கிறது. அமைவிடம் பல வெளிநாடுகளைக் கவர்ந்திருக்கிறது. அந்த நாடுகளில் சிலவற்றுக்கு உள்மறைவான நோக்ங்களும் இருக்கின்றன. இந்தியாவுக்குள் ஊடுருவ எவராவது விரும்பினால் இலங்கை அதற்கு மிகப்பொருத்தமான இடமாகும்.இஸ்லாமிய அரசுக்கும் இது பொருந்தும். 15 இஸலாமிய அரசு இயக்கப் பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து படகில்புறப்பட்டு கேரளாவின்  லக்சத்தீவுகளை நோக்கிச் சென்றதாக என்.டி.ரி.வி.தொலைக்காட்சி சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. கட்டவிழும் இந்த நிகழ்வுப்போக்குகளில் இந்த செய்தி முக்கியமானதாக நோக்கப்படக்கூடியதாகும்.குருநாகலில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற பயிற்சி முகாமில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டிருந்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

இஸ்லாமிய அரசிடமிருந்து வருகின்ற அச்சுறுத்தல் பாரதூரமானதா இருப்பதால் பிராந்தியத்தில் அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் இலங்கையில்தாக்குதல்கள் இடம்பெறப்போகின்றன  என்று இந்திய புலனாய்வுத்துறையினரால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததுபோலும். இலங்கைப் புலனாய்வுத்துறையினருக்கு அந்த தகவல்களை இந்தியர்கள் தெரியப்படுத்தினார்கள்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவை அலட்சியம் செய்யப்பட்டன.எனவே இலங்கையை இஸ்லாமிய அரசு தெரிவுசெய்யவில்லை என்று எவும் கூறமுடியாது. உண்மையில், பிளாங்க் தனது கருத்தை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். இஸ்லாமிய அரசு இலங்கையைத் தெரிவுசெய்யவில்லை என்றே " தோன்றுகிறது " என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆபத்து 

இலங்கைக் குழுவினர் ஆதரவுகோரி அணுகியபோது இஸ்லாமிய அரசு அவர்களுக்கு வெறுமனே தாக்குதலுக்கான கருவிகளையும் பயிற்சிகளையும் மாத்திரமே கொடுத்திருந்ததாக பிளாங்க் கூறியிருப்பது சஹரான் குழுவின் ஆற்றலை மிகைமதிப்பீடு செய்வதாக இருக்கிறது.ஆரம்பத்தில், அவர்கள் தீவிரவாத கோட்பாடுகளுடனான சிறிய குழுவினராக இருந்து சிறிய குற்றச்செயல்களிலேயே ஈடுபட்டனர்.அவர்களில் சிலர் உடைமைகளைச் சேதப்படுத்துவதில் பேர் போனவர்களாக விளங்கினர். உலகளாவிய அபிலாசைகளுடன் இருக்கின்ற பரந்த ஒரு அமைப்பான இஸ்லாமிய அரசு இலங்கைக்குழுவினருக்கு ஆதரவைக்கொடுத்துவிட்டு அக்கறை எதுவுமின்றி பாராமுகமாக இருக்குமென்று எதிர்பார்க்கமுடியாது. சந்தேகநபர்களிடமிருந்து மீட்ப்பட்ட நினைத்துப்பார்க்க முடியாத அளவு பணம் மலைப்பைத்தருகிறது. தேசிய  தவ்ஹீத் ஜமாத் போன்ற சிறியதொரு குழுவிடம் இவ்வளவு பணமா என்று கேள்வியெழுகிறது.இந்தக் குழுவினரிடம் இருந்த மாபேரளவு வளங்களைப் பார்க்கும்போது இஸ்லாமிய அரசு இவர்களுக்கு வெறுமனே ஆதரவையும்பயிற்சியையும்தான் கொடுத்திருக்கிறது என்று எவரினாலும் நம்பமுடியுமா?

பிளாங்கின் கருத்துடன் இருக்கின்ற முக்கியமான பிரச்சினை அது இலங்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்புக்குரிய தரப்பினர் மத்தியில் மெத்தனப்போக்கும்  செயலின்மைக்கும் வழிவகுத்துவிடும் என்பதேயாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கை மீது இஸ்லாமிய அரசுக்கு அக்கறை இல்லை என்ற  பிளாங்கின் கருத்தை நம்பினால், அதனால் பாரதூரமான கொள்கை மற்றும் நடைமுறை தாக்கங்கள் ஏற்பட்டுவிடமுடியும்.நாடு பூராவும் பெரும் எண்ணிக்கையில் சந்தேக நபர்கள் ஏற்கெனவே  கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை, ஆபத்து கட்டப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டது என்று அரசாங்கத் தலைவர்களில் சிலர் கூறுகிறார்கள்.

இஸ்லாமிய அரசின் தந்திரோபாயங்களையும் நடவடிக்கை நுட்ங்களையும் பெருமளவுக்கு தெரியாதவர்களாக இலங்கை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். இப்போதுதான் அவற்றை பெரும்பாலும் கற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆனால், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான -- ஈவிரக்கமற்ற  வன்முறையே இஸ்லாமிய அரசின் செயற்பாட்டுமுறையாகும். இன்னொரு படுகொலையை இலங்கை தாங்கமாட்டாது.

எனவே இஸ்லாமிய அரசு இலங்கையைத் தெரிவுசெய்யவில்லை என்ற கருத்தை " உண்மையானதாக  அல்லது துல்லியமானதாக இருப்பதற்கான வாய்ப்புக் குறைந்த " ஒன்றாகவே நோக்கவேண்டும்.இலங்கை போன்ற கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ள நாடொன்றில் தீவிரவாதமயப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று இருக்கிறதென்பதை தெரிந்துகொண்டுள்ள இஸ்லாமிய அரசு இயக்கம் அதன் உலகளாவிய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அவர்களைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறதுஇலங்கைக்குழுவினர் இஸ்லாமிய அரசின் சக்திமிக்க பிரசாரங்ளுக்கும் ஆட்திரட்டல் திட்டங்களுக்கும் எளிதில் வசப்பட்டுவிடக்கூடியவர்களாக மாறிவிட்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22