விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மாத்திரமே இலங்கை பாதுகாப்பாக இருந்தது - சிவமோகன்

Published By: Daya

30 May, 2019 | 02:11 PM
image

விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மட்டுமே இலங்கை பாதுகாப்பாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு கூட விடுதலைப் புலிகளின் கைகளிலேயே தங்கியிருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நிலைமை என்பது மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரு தேர்தல் கூட இவர்களால் இலகுவாக நடந்த முடியுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதம் ஊடுருவியுள்ள நாட்டில்  எப்படி  இந்த தேர்தல்களை சுமுகமாக நடத்த முடியும். அது சவால்ளுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு மட்டுமல்ல இந்த நாடே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மட்டுமே இந்த இலங்கை பாதுகாப்பாக இருந்தது. தேர்தல்கள் நடந்தது. எந்த அப்பாவி மக்கள் மீதும் அவர்கள் கை வைக்கவில்லை. 

அவர்கள் தங்களுக்கு எதரான படையினருக்கு எதிராகவே செயற்பட்டார்கள். அவர்கள் ஒரு படையதிகாரிக்கு எதிராக மேடையில் செயற்பாட்டால் கூட ஒரு சிறு தொகை மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். இப்படி 400 பேரை பாதிக்கும் அளவுக்கு புலிகள் செயற்படவில்லை. இலங்கை மட்டுமன்றி இந்தியாவின் பாதுகாப்பு கூட விடுதலைப் புலிகளின் கையிலேயே தங்கியிருந்தது.

இதனை இந்தியாவும் சிந்திக்கும் காலம் வந்துவிட்டது. இன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே இலங்கை தீவு அவசியமான ஒரு தீவு. ஆனால் அதனை இன்று உருக்குலைத்துவிட்டார்கள் எனத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51