சொந்த மண்ணில் சம்பியனான மூன்று நாடுகள்...

Published By: Vishnu

30 May, 2019 | 12:52 PM
image

உலகக் கிண்ணக் கிரிக்கெட் வர­லாற்றில் இது­வரை 3 அணிகள் தான் சொந்த மண்ணில் சம்­பி­ய­னாகி இருக்­கின்­றன. அதில் இலங்­கையும் ஒன்று. 

எந்த விளை­யாட்­டாக இருந்­தாலும் சொந்த மண் என்றால் தனி­யாக ஓர் உத்­வேகம் இருக்கும்.  நம்­பிக்­கை­யுடன், உள்ளூர் ஆத­ரவும் இருக்கும் என்­பதால் தான் அதற்கு இத்­தனை கவ­னிப்பு. 

ஐ.சி.சி. உலகக் கிண்ண வர­லாற்றில் இது­வரை நடந்த 11 தொடர்­களில்  3 முறை சொந்த மண்ணில் களம் கண்ட அணிகள் உலகக் கிண்­ணத்தை தட்டிச் சென்­றுள்­ளன. இலங்கை, இந்­தியா மற்றும் அவுஸ்­தி­ரே­லியா ஆகிய அணிகள் தான் இதனைச் சாதித்­தி­ருக்­கின்­றன.

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்­தின. 

அப்­போது இந்­தியா மற்றும் பாகிஸ்தான் நாடு­களில் 2 ஆவது முறை உலகக் கிண்ணத் தொடர் நடை­பெற்­றது. 

இலங்கையிலும் முதல் முறை­யாக இந்தத் தொடர் நடை­பெற்­றது. அந்த வாய்ப்பை மிகச் சரி­யாக பயன்­ ப­டுத்திக் கொண்­டது இலங்கை அணி. 

லாகூரில் ஆஸி.க்கு எதி­ரான இறுதிப் போட்­டியில் இலங்கை 6 விக்­கெட்­டுகள் வித்­தி­யா­சத்தில் வென்று முதல் முறை­யாக உலகக் கிண்­ணத்தை முத்­த­மிட்­டது. 

2011ஆம் ஆண்டு உலகக் கிண்­ணத்தை நடத்த இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் திட்­ட­மிட்­டி­ருந்­தன. 

ஆனால் 2009ஆம் ஆண்டில் இலங்கை வீரர்­கள் பாகிஸ்தான் தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தலில் சிக்­கினர். அதனால் பாகிஸ்தான், சர்­வ­தேசப் போட்­டி­களை தனது நாட்டில் நடத்தும் உரிமை பறிக்­கப்­பட்­டது. 

இதனால் இந்­தியா, இலங்கை, பங்­க­ளாதேஷ் அணிகள் நடத்தத் திட்­ட­மிட்­டி­ருந்­தன.

இரு சொந்த மண் அணி­களான இந்­தியா மற்றும் இலங்கை இறுதிப் போட்­டிக்குத் தகுதி பெற்­றன. உலகக் கிண்ண வர­லாற்றில் முதல் முறை­யாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்­டியில் மோதி­யது இதுதான். இதில் இந்தியா வென்றது. 

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு நாடுகள் நடத்­தின. இரு அணி­க­ளுமே 2015 உலகக் கிண்ண இறுதியில் மோத, ஆஸி. கிண்ணத்தை வென்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41