ஆதியும் அந்தமும் தெரியாத கிரிக்கெட்

Published By: Vishnu

30 May, 2019 | 12:17 PM
image

ஜென்டில்மன் ஜகேம் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் ஆட்டமானது உலகின் அதிகம் பேரால் கவரப்பட்ட ஒரு விளையாட்டாக இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப உலக மாறுதல், தொழில்நுட்ப புரட்சிக்கு ஈடு கொடுத்து தன்னை மாற்றிக் கொண்டு கிரிக்கெட் உலகத்தோடு வேகநடை போட்டு வருகின்றது.

ஆம்... எப்போதோ ஆரம்பமானதாகச் சொல்லப்படும் கிரிக்கெட்டானது இன்று 12 ஆவது உலகக் கிண்ணத்தைக் காண்கின்றது. உலகக் கிண்ணம் தொடர்பான பல தகவல்களை நாம் அறிந்து வைத்திருந்தாலும் கிரிக்கெட்டின் மூலம் குறித்து நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் அது கேள்விக் குறிதான்.

காரணம்... கிரிக்கெட்டின் வரலாற்றை தெளிவாக யாராலும் சொல்ல முடியாது... 

கிரிக்கெட் ஆட்­டத்தின் வர­லாற்றைத் தேடிப் போனால் எமக்கு ஒரு சில ஆதா­ரங்கள் கிடைத்­தாலும் அதில் பல ஊகத்தின் அடிப்­ப­டையில் சொல்­லப்­பட்­ட­வையும் எழு­தப்­பட்­ட­வை­யாகவும் இருக்­கின்­றன. ஆக கிரிக்­கெட்­டா­னது ஆராய்ச்­சிக்கும் அப்­பாற்­பட்ட வர­லாற்றை தன்­ன­கத்­தே கொண்­டி­ருக்­கி­றது என்­பதும்... அந்த ஆராய்ச்­சிக்கு அப்­பாற்­பட்ட விளை­யாட்டில் இலங்கை உலகக் கிண்­ணத்தை வென்று சம்­பி­ய­னா­கி­ய­மையும் எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு விட­யம்தான்.

கிரிக்­கெட்டின் ஆதியைத் தேடி பலரும் தோற்­றுத்தான் போயி­ருக்­கி­றார்கள். இங்­கி­லாந்தில் தோன்­றி­யது என்றும் இங்­கி­லாந்து அணிதான் கிரிக்­கெட்டின் தலை­ம­கன் என்றும் பல­ராலும் அறி­யப்­பட்­டாலும் இடம், நாள், நாடு என்று எந்­த­வித உறு­திப்­பாடும் இல்­லா­மல்தான் கிரிக்­கெட் வர­லாறு கூறப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

பிரான்ஸ்தான் பிறப்பிடமா?

அடி நுனி தெரி­யாமல் கிரிக்கெட் வர­லாறு போய்க்­கொண்­டி­ருந்­தாலும் பிரான்ஸில் விளை­யா­டப்­பட்ட கிரோகெட் (Croquet) என்ற விளை­யாட்­டி­லி­ருந்து கிரிக்கெட் தோன்­றி­ய­தாக பல ஆராய்ச்­சி­யா­ளர்கள் அபிப்­பி­ரா­யங்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பிரான்ஸில் விளை­யாடப்­பட்­டு­வந்த கிரோகெட் எனும் ஆட்­ட­மா­னது திருத்­த­ம­டை­யாத ஒரு­விதத் தொடக்க நிலையில் இருந்­த­தா­கவும் அதை பிரான்ஸ் மக்கள் மிகவும் உற்­சா­கத்­துடன் ஆடி மகிழ்ந்­தி­ருக்­கலாம் என்றும், கிரோகெட் ஆட்­டத்­தி­லி­ருந்தே தற்­பொ­ழுது அழைக்­கப்­படும் கிரிக்கெட் ஆட்டம் கிளைவிட்டு கிளை­விட்டுப் பிரி­வது போல் உரு­மாறி வந்­தி­ருக்­கலாம் என்றும் இந்த இனிய ஆட்­டத்தைக் கண்ட ஆங்­கி­லே­யர்கள் ஆட்­டத்தின் அமைப்­பையும் கருத்­தையும் ஏற்று இங்­கி­லாந்­துக்குக் கொண்டு வந்து திருந்­திய ஆட்­ட­மாகப் பொலி­வு­பெற அமைத்துக் கொண்­டி­ருக்­கலாம் என்றும் ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

இங்­கி­லாந்­துக்கும் பிரான்ஸுக்  கும் அந்தக் காலத்தில் மிகவும் நெருக்­க­மான அர­சியல் மற்றும் மண உறவு இருந்­த­தால் கிரிக்கெட் ஆட்டம் பிரான்ஸ்­கா­ரர்­களின் கிரோகெட் ஆட்­டத்­தி­லி­ருந்து உரு­வா­கி­யி­ருக்­கலாம் என்று கரு­து­கின்­றனர்.

இங்­கி­லாந்தில் கிரிக்கெட் ஆட்டம் மிகப்­பெ­ரிய இடத்தைப் பிடித்து மக்­களால் விளை­யா­டப்­பட்டு வந்த காலத்தில் பிரான்ஸ் நாட்­டினர் கிரிக்கெட் பற்­றியே தெரிந்­தி­ருக்­க­வில்லை என்றும் ஒரு­சாரார் தெரி­விக்­கின்­றனர்.  

எனினும்  கிரிக்கெட் ஆட்டம் எங்கே தோன்­றி­யது என்­பதைத் திட்­ட­வட்­ட­மாகக் குறிப்­பிட இய­லாது.

ஆனாலும் இலை­ம­றை ­காய்­களைப் போன்று இங்­கு­மங்­கு­மாக ஒரு சில குறிப்­புகள் வர­லாற்றுப் பின்­ன­ணி­யிலே ஆங்­காங்கு மறைந்து கிடப்­பதை சுட்டிக்காட்டி இப்­ப­டியும் இருக்­கலாம் என்­கின்ற தங்­க­ளது குறிப்­பையும் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

கிளப் போல் (Club Ball) என்­ப­தாக ஓர் ஆட்டம் இங்­கி­லாந்தில் முன்­னாளில் ஆடப்­பட்டு வந்­துள்­ளது.

பிர­ப­ல­மாக ஆடப்­பட்டு வந்த கிளப் போல் ஆட்­டத்­தி­லி­ருந்து கிளை­விட்டுப் பிரிந்து, சிறப்­பாகத் தோன்­றிய ஆட்­டமே கிரிக்கெட் என்றும் ஒரு குறிப்­பீடு உண்டு.

கிளப் போல் எனும் ஆட்டம் பற்­றிய குறிப்பும், எந்த வித­மான விவ­ரமும் இன்னும் தெரி­யா­மலே இருக்­கி­றது என்­பதால், இதைப் பற்றி ஒரு முடி­வெ­டுக்­காத நிலையில் நின்று போக ­வேண்­டி­ யி­ருக்­கி­றது. 

அடுத்­த­தாக ஸ்கொட்­லாந்தில் ஆடப்­பட்­டு­வந்த கேட் அண்ட் டோக் (Cat and Doug) என்ற ஆட்­டத்தின் அடிப்­ப­டையில் தான் கிரிக்­கெட்டின் ஆரம்­ப­ காலம் அமைந்­தது என்றும் ஒரு கருத்­துண்டு. 

மூன்­றா­வ­தாக, கிரிக்கெட் ஆட்டம் தோன்­று­வ­தற்கும், ஆட்ட அமைப்பு உரு­வா­வ­தற்கும் ஸ்டூல் போல் (Stool Ball) தான் கார­ண­மாக இருந்­தது என்றும் கூறு­கின்ற ஆசி­ரி­யர்­களும் உண்டு. 

ஹேண்ட் இன் அல்­லது ஹேண்ட் அவுட் (Handyn or Handoute) மறு­ வ­டி­வுதான் கிரிக்கெட் என்­ப­தா­கவும் சிலர் கூறு­வார்கள். 

ஆனால் இங்­கி­லாந்தில் லண்டன் நக­ரத்திலுள்ள அர­சர்கள் நூல­கத்தில் கிரிக்கெட் ஆட்டம் பற்றி கி.பி. 1344ஆம் ஆண்டே எழுதப் பெற்­றி­ருக்­கி­றது என்று சான்­றுகள் கூறு­கின்­றன.

1344ஆம் ஆண்டில் வரையப் பெற்றிருந்த ஓவியம் ஒன்றில் கிரிக்கெட் குறித்து உள்ளது. இதனால் கிரிக்கெட் ஆட்டம் பல ஆண்­டுக­ளுக்கு முன்­ன­தா­கவே இங்­கி­லாந்தில் சிறப்­பான வளர்ச்­சி­யுற்­றி­ருக்க வேண்டும் என்றும், அப்­படிப் பார்த்தால், கிரிக்கெட் ஆட்டம் ஏறத்­தாழ 12 அல்­லது 13ஆவது நூற்­றாண்­டிலே தோன்­றி­யி­ருக்க வேண்டும் என்றும் அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்­றார்கள். 

இவ்­வாறு பெரும் வளர்ச்­சி­யுற்­ற­தி­னாலோ என்­னவோ, இந்த ஆட்டம் 1365ஆம் ஆண்டு அர­சாள்­வோ­ருக்கு அதி­ருப்­தியை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய மாற்­றத்­தையே ஏற்­ப­டுத்தியிருந்­தது. 

வில்­வித்தைப் பயிற்­சியில் மக்கள் விருப்­ப­முடன் ஈடு­ப­டாமல் ஹேண்ட் இன் ஹேண்ட் அவுட் மற்றும் கிரிக்கெட் ஆட்­டத்­திலும், அதி­க­மாக ஈடு­ப­டு­வதால், வில்­லாற்­றலில் மக்கள் தேர்ச்சி பெறாமல் போகின்­றனர். 

ஆகவே நாட்டின் பாது­காப்­புக்கு உரிய கலை­யான வில் பயிற்­சியைக் கற்கும் பொருட்டும், அதனைக் காக்கும் பொருட்டும், மேலே குறிப்­பிட்ட இரண்டு விளை­யாட்­டு­க­ளையும் மக்­களை ஆட­வி­டா மல், தடைச்­சட்­டத்தை நான்காம் எட்வர்ட் மன்னர் இயற்றித் தடை செய்தார். 

மக்கள் இந்த ஆட்­டங்­களை ஆடக்­கூ­டாது என்று சட்டம் போட்டு தடை­ வி­தித்­ததோடல்­லாமல், மீறி­ய­வர்­க­ளுக்குக் கடு­மை­யான தண்­டனை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

மீறி விளையா­டு­ப­வ­ருக்கு இரண்­டாண்டுகள் சிறை வரை தண்­டனை நீடி­த்­தது.  அது­மட்­டு­மன்றி விளையாட இடம் தரு­ப­வ­ருக்கும் இந்த தண்­டனைச் சட்டம் பாய்ந்­தது.

இவ்­வா­றாக, 185 ஆண்­டுகள் தடை போட்ட சட்­டத்தின் கீழ் அடை­யாளம் தெரி­யாமல் இந்த இரண்டு ஆட்­டங்­களும் முடங்கிக் கிடந்­தன என்று வர­லாறு கூறு­கின்­றது. ஆயுள் காலம் வரை தடை­போட்­ட­வாறே ஆட்­சியை முடித்துக் கொண்ட நான்காம் எட்வர்ட் மன்­ன­ருக்குப் பிறகு, தொடர்ந்து அரி­யணை ஏறி­ய­வர்கள் அனை­வரும் இவ்­வாறே தடை போட்­டனர் என்­பதால், ஹேண்ட் இன் ஹேண்ட அவுட் ஆட்­டத்­துடன் கிரிக்­கெட்டும் இணை­யா­கவே இருந்­தது என்­பதும், அதனால் கிரிக்கெட் ஆட்­டத்தின் முன்­னோடி என்று இதனைக் கூற முடி­யாது என்றும் ஆராய்ச்­சி­யா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

எப்­படிப் பார்த்­தாலும் கிரிக்கெட் எங்கு ஆரம்­பித்­தது, யாரால் தோற்­று­விக்­கப்­பட்­டது என்­ப­தற்கு இது­வ­ரையில் சரி­வர எந்த ஆதா­ரமும் இல்லை.  இருப்­பினும் இங்­கி­லாந்தில் 15 மற்றும் 16ஆ-ம் நூற்­றாண்­டு­களில் சிறு­வர்­களால் விளை­யா­டப்­பட்டு வந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது. 

17ஆ-ம் நூற்­றாண்டில் பெரி­ய­வர்­களால் விளை­யா­டப்­பட்டு வந்த கிரிக்கெட் 18 ஆம் நூற்­றாண்டில் ஆங்­கி­லே­யர்­களின் ஆதிக்­கத்தால் உலகின் மற்ற இடங்­க­ளுக்கும் பர­வி­யது. 

அதே வேளையில் கிரிக்­கெட்டை ஒத்த வடிவில் இரு வேறு அள­வு­களைக் கொண்ட குச்­சி­களை வைத்து சிறு­வர்­களால் கிட்­டிப்புல் விளை­யா­டப்­பட்டு வரு­கி­றது. 

தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய விளை­யாட்­டாகக் கரு­தப்­படும் இந்த விளை­யாட்டு கில்லி தாண்டு, குச்சி கம்பு, சில்­லாங்­குச்சி, கரக்­குட்டி என்று பல்­வேறு பெயர்­களில் அழைக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்தக் கிட்­டிப்­புல்­லுக்கும் கிரிக்­கெட்­டிற்கும் நிறைய ஒற்­று­மைகள் உள்ளன. ஆனாலும் இதி­லி­ருந்து கிரிக்கெட் வந்­த­தா­க எந்த ஆதா­ரமும் இல்லை.

ஆங்­கி­லே­யர்­களின் கால்லனித்துவ ஆதிக்கம் மற்றும் ரயில் போக்­கு­வ­ரத்தின் வளர்ச்­சியால் உலகின் பல்­வேறு இடங்­களில் கிரிக்கெட் விளை­யா­டப்­பட்­டாலும் முதல் சர்­வ­தேசப் போட்டி 1844இ-ல் நியூயோர்க் நகரில் அமெ­ரிக்­கா­வுக்கும், கன­டா­வுக்கும் இடையே நடை­பெற்­ற­தாக வர­லாற்றில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்­ளது. 

இருந்த போதிலும் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் இந்த இரு­ நா­டு­களும் தற்­போது பங்­கேற்­க­வில்லை. 

ஆதி­ கா­லத்தில் முடிவு தெரியும் வரை விளை­யா­டப்­பட்டு வந்த கிரிக்கெட் போட்­டிகள்  காலம் கருதி முதலில் 6 நாட்­க­ளாக வரை­ய­றுக்­கப்­பட்டு பின்னர் 5 நாட்கள் என தற்­போ­தைய வடி­வத்தைப் பெற்­றன. 

கால்­பந்து மோகம் உலகில் தீயாய் பரவி இருந்த நிலையில் கிரிக்­கெட்­டையும் அவ்­வாறு பிர­ப­ல­ப்ப­டுத்­தலாம் என்ற நோக்கில் இங்­கி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, தென்­னா­பி­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே 1912ஆ-ம் ஆண்டு முத்­த­ரப்பு டெஸ்ட் போட்டித் தொடர் நடத்­தப்­பட்­டது. 

இருப்­பினும் பாரம்­ப­ரி­ய­மிக்க ரசி­கர்­களால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிகள் விரும்பப்­பட்­டாலும் கால்­பந்­துக்கு இருந்த மோகம் கிரிக்­கெட்­டுக்கு அப்­போது இல்லை என்றே கூறலாம். 

இந்­நி­லையில் 1962 ஆம் ஆண்டு கிரிக்கெட் வர­லாற்றில் ஒரு புது முயற்­சி­யாக இங்­கி­லாந்தில் ஒரு நாள் போட்­டிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. உள்ளூர் அணி­க­ளுக்கு இடையே நடை­பெற்ற இந்த ஒருநாள் தொட­ருக்கு ரசிகர் மத்­தியில் பெரும் வர­வேற்பு கிடைத்­தது. 

இந்­நி­லையில் 1971ஆம் ஆண்டில் மெல்­போர்னில் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இங்­கி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யி­லான டெஸ்ட் போட்டி மழை கார­ண­மாக தடைப்­பட்­டதால் அதி­ருப்­தியும், ஏமாற்­றமும் அடைந்த ரசி­கர்­களை திருப்திப்படுத்தும் வகையில் அந்த இரு அணி­களும் பங்­கேற்ற ஒருநாள் போட்­டி­யாக நடத்­தப்­பட்­டது. 

இதுவே சர்­வ­தேச அள­வி­லான முதல் ஒருநாள் போட்­டி­யாகும். ஒரு ஓவ­ருக்கு 8 பந்­துகள் வீதம் 40 ஓவர்கள் கொண்ட இந்த ஒருநாள் போட்டிக்கு கிடைத்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இதனை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முயற்சியே ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஆகும். 

முதல் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடத்தும் முன்னர் பரீட்சார்த்த முயற்சியாக 1973ஆம் ஆண்டில் மகளிர்க்கான சம்பியன் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. 

இங்கிலாந்து, அவுஸ் திரேலியா, நியூஸிலாந்து என்று 7 நாடுகளுக்கு இடையே ரவுண் ரொபின் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில்  இங்கிலாந்து மகளிர் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. 

ரசிகர்களின் மத் தியில் இந்தத் தொடர் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதலா வது உலகக் கிண் ணத்தை 1975-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தியது.

அதன் தொடர்ச் சியாக இன்று 12 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அதே இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது.

பிரான்ஸில் ஆடப்பட்ட அதேவேளை கிரிக்கெட்டின் முன்னோடியாக கருதப்படும் கிரோகெட் (Croquet) விளையாட்டின் ஓவியப்படம்...

1975 ஆம் ஆண்டு ஆண்களுக்கான உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முன்னர் பெண்களுக்கான உலகக் கிண்ணத்தை 1973 ஆம் ஆண்டு நடத்தியது சர்வதேச கிரிக்கெட் சபை.

ஆரம்ப நாட்களில் பந்தை கீழாகக் கையை வீசி ஏறிந்து வந்தார்கள். இதற்கு அண்டர் ஆர்ம் பெளலிங் (Undr arm bolling) என்று பெயர்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகளான அப்ரோஜியன்களின் முதலாவது கிரக்கெட் அணி இது. எம்.சீ.சீ.மைதானத்தின் பெவிலியனில் எடுத்துக்கொண்ட படம்...

கிரிக்கெட் மட்டைகளின் வளர்ச்சியை காண்பிக்கும் ஒரு ஓவியம் 

(தொகுப்பு : எஸ்.ஜே.பிரசாத்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22