ஈபிள் கோபுரத்திலிருந்து சாகச பயணம்

Published By: Digital Desk 3

30 May, 2019 | 02:50 PM
image

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் அழகை கண்டு ரசிக்க ஈபிள் கோபுரத்தில் சாகச பயணத்தை மேற்கொள்ள புதிய முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘ஈபிள் கோபுரம்’ உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும். மேலும் இது உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

கடந்த 1887 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய ஈபிள் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 2 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்குப் பின்னர் நிறைவு பெற்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1889 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈபிள் டவர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈபிள் கோபுரம் இவ்வாண்டு தனது 130 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதையொட்டி குறித்த பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்தில் சாகச பயணம் செய்யும் வகையில் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஈபிள் கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து, 800 மீற்றர் தொலைவில் உள்ள 18 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட இராணுவ அலுவலகம் வரை கம்பி கட்டப்பட்டுள்ளது.

இந்த கம்பியில் பொருத்தப்பட்ட பெல்ட்டில் அமர்ந்துகொண்டு கம்பி வழியே பறந்து சென்று, பாரீஸ் நகரின் அழகை கண்டு ரசிக்கலாம்.

இந்த வசதி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு இம்மாதம் 29 ஆம் திகதியில் இருந்து ஜுன் 2 ஆம் திகதி வரை சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது. 

சுற்றுலா பயணிகள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரும் ஜூன் 11ம் திகதி வரை இந்த வசதி தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21