வெனிசுவேலா நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வேலை எனும் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

மின்சாரப் பிரச்சினை தீரும் வரை சுமார் 20 இலட்சம் அரசு ஊழியர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாத்திரம் பணிக்கு வந்தால் போதும் என துணை ஜனாதிபதி அரிஸ்டோபுலோ இஸ்துரிஸ் தெரிவித்துள்ளார். 

இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும், மின் பிரச்சினை தீரும் வரை இது நடைமுறையில்இருக்கும் எனவும் நாட்டின் துணை ஜனாதிபதி மேலும்தெரிவித்துள்ளார்.

கடும் வறட்சியின் காரணமாக நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறியுள்ளது.