இதய பாதிப்பை ஏற்படுத்தும் பணிச்சுமை

Published By: Digital Desk 4

29 May, 2019 | 07:18 PM
image

அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் அந்த சூழலில் ஏற்படும் பணிச்சுமையின் காரணமாக அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இதனை உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்திருக்கிறது. 

அத்துடன் இதய பாதிப்பை ஏற்படுத்தும் பணிச்சுமையை அதாவது பணியிட சூழலில் ஏற்படும் மன உளைச்சலை உடனடியாக அகற்றிவிட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

பணியிட சூழலில் ஏற்படும் மன அழுத்தமானது, நாட்பட்ட உடலியல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய பணித்திறன் இதன் காரணமாக வீணாக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் வேலைப்பளுவின் காரணமாக பாதிக்கப்படும்போது அவர்கள் ஆற்றல் குறைவு உணர்வால் பாதிக்கப்படுகிறார்கள். பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுகிறார்கள். வேலையைப் பற்றிய எதிர்மறை எண்ணத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுடைய உற்பத்தித் திறன், மனித வள திறன் பாதிக்கப்படுவதுடன்,அவர்களை சார்ந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

அதனால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏதேனும் பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை உடனடியாக அகற்றுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதனை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வேலைப்பளுவின் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். புகை, மது ஆகியவற்றுக்கு அடிமையாகிறார்கள். அதே சமயத்தில் உடற்பயிற்சி செய்வதிலும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுத்து தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.

இதன் காரணமாக பதற்றம், எரிச்சல், ஆர்வமின்மை, தூக்கமின்மை, சோர்வு , பணியாற்றுவதில் இடையூறு, தலைவலி, வயிற்று உபாதைகள், சமூகத்துடன் சரியாக தொடர்பு கொள்ள முடியாத தன்மை என பல கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் இதயம் பாதிக்கப்படுகிறது.

இதனை களைய வேண்டும் என்றால், பணிச்சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. ஏனெனில் பணியிட சூழலில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கிய காரணமாக பசி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் உறக்கத்தையும் சரியான முறையில் பேண வேண்டும். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் காரணமாக உடலில் என்டார்பின் எனப்படும் ஹோர்மோன் சுரப்பி சரியான அளவில் சுரந்து மகிழ்ச்சியான மனநிலையை பராமரிக்கும் என பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.

டொக்டர் அனந்தகிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04