வெடிபொருட்களை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Published By: Vishnu

29 May, 2019 | 06:26 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அண்மையில் நிலவிய பாதுகாப்பு அச்சுறுத்தலின் காரணமாக தேசிய பாதுகாப்பு சபையினால் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக வெடிபொருள் விநியோகத்தடையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் நீக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

வெடிபொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெடிபொருட்கள் தொடர்பான அளவை மாவட்ட செயகத்தின் அனுமதியுடன், அரச வெடிபொருட்கள் கொள்வனவு செய்யும் நிறுவனத்தின் ஆலோசனையுடன் விநியோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு கற்பாறைகளை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மாவட்ட செயலகங்களின் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களை மாவட்ட செயலகங்கள், அரச வெடிபொருள் விநியோக நிறுவனத்திற்கு (CEFAP) 011-2958227 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதனூடாகவும், பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவின் 011-2335798 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும் என்று இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50