பாடசாலைக்கு வந்த கரடி

Published By: Digital Desk 4

29 May, 2019 | 03:51 PM
image

நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து களுத்துறை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ தேவானந்தா மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை செய்யும் விதம் பாராட்டுக்குரியது.

மாணவர்களை மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருப்பதோடு அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதற்காகவும் பாடசாலை நிர்வாகம் இவ்வாரானதொரு முயற்சியைக் கையாண்டுள்ளது.

அந்ந வகையில் நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து காலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்களின் புத்தகப் பைகளில் சோதனை செய்வதற்காகக் கரடி பொம்மை  போல் வேடமணிந்த ஒருவர் மாணவர்களின் பைகளைச் சோதனை செய்கிறார்.

இதன் காரணமாக மாணவர்கள் எந்தவித பயமுமின்றி சகஜமாகக் குறித்த நபருடன் பழகுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் குறித்த நபரின் அணுகுமுறை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பாடசாலையில் வித்தியாசமான முறையில் மாணவர்களுக்கான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right