குருணாகல் வைத்தியர் குறித்து சர்வதேச நீதிமன்றத்திடம் முறையிட ஏற்பாடு

Published By: R. Kalaichelvan

29 May, 2019 | 02:24 PM
image

(செ.தேன்மொழி)

குருணாகலை வைத்தியர் தொடர்பான விசாரணைகள் குறித்து அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை.வைத்திய நிபுணர் இனப்பாகுபாட்டுடன்  செயற்பட்டிருக்கின்றார் என்பதனால் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், தற்போது உலக சுகாதார சங்கத்தின் பிரதிசெயலாளராக செயற்படும் இலங்கை சுகாதார அமைச்சரை அந்த பொறுப்பிலிருந்து விலக்குமாறும் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இந்த இயக்கம் அதில் தெரிவித்திருப்பதாவது, 

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வைத்தியர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் குழு தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள சுயாதீன குழுவொன்றை நியமிக்காது, சுகாதார அமைச்சிலிருந்தே உறுப்பினர்களை நியமித்திருப்பது திருடன் தொடர்பான விசாரணைகளை அவனது தாயிடம் ஒப்படைப்பதற்கு நிகரானதாகும்.

இன,மத,குல பேதத்துடன் கொலை செய்வது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தல், திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை செயற்பாடுகளில் பாதகம் விளைவித்தல், உடல் ரீதியான அங்கவீனர்களாக்கல் , கருத்தடை செய்தல், ஒரு இனத்தவருக்கு பிறந்த குழந்தையை இன்னுமொரு இனத்தவருக்கு மாற்றிக் கொடுத்தல் என்பன தண்டனைக்குரிய செயல்களாகும்.

மனிதன் பிறக்கும் போதே பல உரிமைகளுக்கு உரித்துடையவர்களாகின்றன். குறிப்பிட்ட சிலரால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் அதற்கு எதிராக செயற்பட்டு அனைத்து மக்களுக்கும் அவர்களின் உரிமைகளை வென்று கொடுப்பதற்காக ஒவ்வொரு அரசும் கடமைப்பட்டுள்ளது.

குருணாகல் வைத்தியரின் செயற்பாடு இனப்பாகுபாட்டை அடிப்படையாக கொண்டது இல்லை என எப்படி கூறமுடியும் என்றே நாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம். 1948 குற்றவியல் தண்டனை சட்டக் கோவைக்கமைய  வைத்தியரின் செயற்பாடுகள் ஒரு இனத்தை அழிப்பது தொடர்பான குற்றச் செயற்பாடாகும். இது குறித்த விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குருணாகல் வைத்தியர் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்காக சுகாதார அமைச்சினால் நியமித்திருக்கும் 6 பேர் அடங்கிய குழு போதுமானதல்ல. இவர்களின் விசாரணைகள் குறித்து எமக்கு நம்பிக்கை இல்லை. சுகாதார அமைச்சர் உலக சுகாதார சங்கத்தின் உபசெயலாளர் என்பதினால், அவரை அந்த பதவியிலிருந்து விலக்குமாறும் உலக சுகாதார சங்கத்திடம் கோரிக்கை விடுக்க உள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38