மு.க.ஸ்டாலின் தனது சொத்து மதிப்பு 4 கோடி ரூபா என தெரி­வித்­துள்ளார். சென்னை கொளத்தூர் தொகு­தியில் தி.மு.க. பொரு­ளாளர் ஸ்டாலின் போட்­டி­யி­டு­கிறார். இதற்­காக அவர் நேற்று வேட்­பு­ம­னு­தாக்கல் செய்­த­போது. அதில் தனது சொத்து மதிப்பு 4,13,83,988 ரூபா எனக்­கூ­றி­யுள்ளார். தனக்கு அசையும் சொத்­துக்­களின் மதிப்பு 80,33,242 ரூபா எனவும், அசையா சொத்­துக்­களின் மதிப்பு 3,33,50,746 ரூபா எனவும் கூறி­யுள்ளார்.

இதேவேளை நாம் தமிழர் கட்­சியின் ஒருங்­கி­ணைப்­பாளர் சீமான் தனது கையி­ருப்­பாக 40 ஆயிரம் ரூபா உள்­ள­தா­கவும் அசையாச் சொத்­துக்­க­ளான வீடு, நிலம் உள்­ளிட்­டவை எதுவும் இல்லை. தனியார் வங்­கியில் 8.97 இலட்சம் ரூபா கடன் பெற்­றுள்­ள­தா­கவும் தனது வேட்பு மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்..