தீர்ப்பு அறி­விக்க நீதி­ப­திக்கு விருப்­ப­மில்லாததால் மனு மீண்டும் விசாரணைக்கு

Published By: R. Kalaichelvan

29 May, 2019 | 11:45 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து சர­ணா­ல­யத்தின் காட்டுப் பகு­தியில் உள்­ள­தாக கூறப்­படும் சட்டவிரோத குடி­யி­ருப்­புக்­களை அகற்ற உத்தரவிடுமாறு கோரி தாக்கல்  செய்­யப்­பட்ட மனுவின் தீர்ப்பை அறி­விக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி மஹிந்த சமரவர்தன விருப்­ப­மின்­மையை வெளி­யிட்­டதால் அந்த மனுவை மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்த இந்த ரீட் மனு,மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதிபதி மஹிந்த சம­ர­வர்­தன முன்­னி­லையில் விசா­ரிக்­கப்­பட்ட நிலையில் எதிர்­வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி தீர்ப்பறிவிக்கப்படவிருந்­தது.

இந்நிலையில் அந்த தீர்ப்பை அறி­விக்க குறித்த நீதி­பதி விருப்பமின்­மையை வெளி­யிட்­டதால், அந்த மனுவை மீள ஆரம்பத்திலிருந்து விசாரிக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை  நீதி­பதி முடிவு செய்­துள்ளார். 

அதன்­படி அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் உள்­ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குறித்த வழக்கை எதிர்­வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல், ஆரம்பத்தி­லி­ருந்து மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தாக  மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று அறிவித்­தது.

வில்­பத்து வனத்தை அண்­மித்த பகு­தி­க­ளி­லுள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் முஸ்லிம் மக்­களை குடி­ய­மர்த்­து­வ­தற்­காக சட்­ட­வி­ரோ­த­மாக காணிகளை வழங்­கு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள முயற்­சியை தடுத்­து­நி­றுத்­து­மாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான ஜனக்த சில்வா மற்றும் நிஷங்க பந்­துல கரு­ணா­ரத்ன ஆகியோர் முன்­னி­லையில் நேற்று இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போதே மீள விசா­ர­ணைக்­காக குறித்த வழக்கு எடுக்­கப்­ப­டு­வது குறித்து அறிவிக்கப்பட்­டது. 

2015 இல் தாக்கல் செய்­யப்­பட்ட இந்த வழக்கில் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், வன­வளத் திணைக்­களப் பணிப்­பாளர் நாயகம், வன பாது­காப்பு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் உள்­ளிட்­ட­வர்கள் இந்த வழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்­ளனர். 

இந்த வழக்கின் விசா­ர­ணைகள் அனைத்தும் கடந்த வருடம் நிறைவு செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது மீள விசாரணைகள் இடம்பெறவுள்ளன. 

தீர்ப்பு வழங்க திகதி குறிப்பிடுவதற்கு முன்னர் ஏற்கனவே  4 தடவைகள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமரவர்தன வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58