நியூஸிலாந்தை புரட்டிப் போட்ட மேற்கிந்தியப் புயல்!

Published By: Vishnu

29 May, 2019 | 11:32 AM
image

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 91 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

உலகக் கிண்ணத் தொடரானது நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் பயிற்சிப் போட்டிகள் அனைத்தும் நேற்று நடைபெற்று முடிந்துள்ளன.

அதன்படி நேற்று  பிரிஸ்டலில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான 9 ஆவது பயிற்சி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களின் இடைவிடாத அதிரயாட்டத்தினால் 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 421 ஓட்டங்களை குவித்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 36 ஓட்டத்தையும், எவின் லீவிஸ் 50 ஓட்டத்தையும், ஷெய் ஹோப் 86 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 101 ஓட்டத்தையும், சிம்ரன் ஹேட்மெயர் 27 ஓட்டத்தையும், ஹோல்டர் 47 ஓட்டத்தையும், நிகோலஷ் பூரண் 9 ஓட்டத்தையும், ரஸல் 54 ஓட்டத்தையும், பிரத்வெய்ட் 24 ஓட்டத்தையும், ஆஷ்லே நெர்ஸ் 21 ஓட்டத்தையும், கேமர் ரோச் ஒரு ஓட்டத்தையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணிசார்பில் டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களையும், மாட் ஹென்றி 2 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

422 என்ற இமாலய இலக்கை நோக்கி மனம் தளராமல் போராடிய நியூஸிலாந்து அணியினரால் 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

நியூஸிலாந்து அணிசார்பில் டொம் பிளண்டெல் 89 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்களாக 106 ஓட்டத்தையும், கேன் வில்லியம்சன் 64 பந்துகளில் 2 ஆறு ஓட்டம் 11 நான்கு ஓட்டம் அடங்கலாக 85 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுள் அணிசார்பில் பிரத்வெய்ட் 3 விக்கெட்டுக்களையும், பேபியன் ஆலன் 2 விக்கெட்டுக்களையும், எல்டன் காட்ரெல், கேமர் ரோச், உஷேன் தோமஸ் மற்றும் ஆஷ்லே நெர்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

photo credit : ICC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35