இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­துக்கு உத­வு­வ­தற்கு பணச்­ச­லவை செய்யும் உயர் ­கல்வி நிறு­வனம்

Published By: R. Kalaichelvan

29 May, 2019 | 10:20 AM
image

(நா.தனுஜா)

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­திற்கு உதவும் நோக்கில் கறுப்புப் பணத்தை சட்­ட­பூர்வ பாவ­னைக்கு உகந்த பண­மாக மாற்­றுதல் மற்றும் இஸ்லாமிய அடிப்­ப­டை­வா­தத்தைப் போஷிக் கும் இடமாக தெஹி­வ­ளையில் உள்ள தனியார் உயர் கல்வி நிறு­வனம்   காணப்­ப­டு­கின்­றது.

அந்தக் கல்வி நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ளரை உட­ன­டி­யாகக் கைது செய்ய வேண்டும்.பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில்  உடனடியாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். 

அவ்­வாறு நடவடிக்கை எடுக்­கா­விடின் எம்­மு­டைய உயி­ருக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­படும் என்று பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரிவித்துள்ளார். 

ஞான­சார தேரர்  விடு­விக்­கப்­பட்ட  பின்னர் முதற்­த­ட­வை­யாக நேற்றைய தினம் கொழும்பில் ஏற்­பாடு செய்த  செய்­தி­யாளர் சந்திப்­பி­லேயே  இவ்­வாறு குறிப்­பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது : 

சவுதி அரே­பி­யாவின் புல­னாய்வுப் பிரிவு முக­வர்கள் இலங்­கையில் வஹா­பி­ஸத்தை விதைக்கும் நோக்கில் பிரத்­தி­யேக செயற்திட்டங்களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். 

அதிலே ஒரு தலை­வரை உரு­வாக்க மாட்டோம்.பல தலை­வர்­களை உரு­வாக்­குவோம் என்று குறிப்­பி­டு­கின்­றார்கள். அதன்­படி வஹாபிஸம் சார்ந்த 50 அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அது இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் ஒரு பிரிவு எனும் அதேவேளை இதில் கல்வி நட­வ­டிக்­கைகள் சார்ந்த நிறுவனங்களும் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன. 

தெஹி­வ­ளையில் தலைமைக் காரி­யா­ல­யத்தை  மேற்­கு­றித்த தனியார் உயர்  கல்வி நிறு­வ­னத்தில் கல்வி பயின்ற சுமார் 200 முஸ்லிம் இளை­ஞர்கள் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­று­வ­தற்­காக பிரித்­தா­னி­யா­விற்கு அனுப்பப்பட்­டி­ருக்­கின்­றார்கள். 

இவ்­வாறு வஹா­பிஸம் போதிக்­கப்­பட்ட அடிப்­ப­டை­வா­திகள் 3000 பேர்­வ­ரையில் நாட்டில் உள்­ளனர்.ஒரு சிறு குறுந்­த­க­வலின் மூலம் இந்த 3000 பேரையும்  விரை­வாக ஓரி­டத்தில் திரட்ட முடியும். 

இவை­ய­னைத்­தையும் எனக்குக் கிடைக்­கப்­பெற்ற நம்­ப­கத்­தன்மை வாய்ந்த தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே குறிப்­பி­டு­கின்றேன்.

வஹா­பிஸம் என்­பது பாகிஸ்­தா­னிலும்,ஆப்­கா­னிஸ்­தா­னிலும்  மத்திய கிழக்கு நாடு­க­ளிலும் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும்  வலுவூட்டப்­ப­டு­வ­தா­கவும் நாங்கள் கரு­திக்­கொண்­டி­ருக்­கிறோம். ஆனால் தற்­போது அவுஸ்­தி­ரே­லியா  ஐக்­கிய இராச்­சியம் போன்ற நாடு­க­ளி­லேயே இந்த அடிப்­ப­டை­வாதப் போத­னைகள்  பயிற்­சிகள் நடை­பெ­று­கின்­றன.

 இந்­நி­லையில் கிழக்­கிலே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதப் பிரசாரங்­களை முன்­னெ­டுத்த   குறித்த கல்வி  நிறுவன உரிமையாளர் வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்வதற்கு முன்னர் இன்றைய தினத்திற்குள் கைது செய்ய வேண்டும். அதேபோன்று அவரால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சியையும் தடை  செய்ய வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டுக்கொள்கின்றோம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51