பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு இன்று கூடு­கின்­றது

Published By: Digital Desk 3

29 May, 2019 | 09:39 AM
image

(ஆர்.யசி)

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்து ஆராய்ந்து அறிக்­கை­யிட பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசேட பாரா­ளு­மன்ற தெரிவுக் குழுவின் முதல் கூட்டம் இன்று இடம்­பெ­று­கின்­றது.

 பாது­காப்பு படை­களின் பிர­தானி அட்­மிரல் ரவீந்­திர விஜ­ய­கு­ண­ரத்ன, இரா­ணு­வத்­த­ள­பதி மகேஷ் சேனா­நா­யக்க, பாது­காப்பு செய­லாளர் எஸ்.எச்.எஸ். கோட்­டே­கொட மற்றும்  முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்­ககோன் ஆகியோர் இன்­றைய கூட்­டத்­திற்கு அழைக்­கப்­பட்­டுள்­ளனர். 

கடந்த மாதம் 21 ஆம்  திகதி புனித உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் பிர­தான ஹோட்­டல்கள் உள்­ளிட்ட எட்டு இடங்­களில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்­டுத்­தாக்­குதல் குறித்து உண்­மை­களை கண்­ட­றி­யவும் அது குறித்து அறிக்­கை­யி­டவும் விசேட தெரி­வுக்­கு­ழுவை  சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய கடந்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது நிய­மித்­தி­ருந்தார். 

இந்த பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின்  முதல் அமர்­வுகள் இன்று காலை 9 மணிக்கு பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் கூடு­கின்­றது. காலை 9 மணி தொடக்கம் பிற்­பகல் 1 மணி வரையில் தெரி­வுக்­குழு கூட்­டங்கள் இடம்­பெ­ற­வுள்­ளது. 

மேலும்  ஆளும் - எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள்  நாற்­பது பேரை உள்­ள­டக்­கிய பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு ஆரம்­பத்தில் அமைக்­கப்­பட்ட போதிலும்  கூட இந்த தெரி­வுக்­குழு நியா­ய­மாக செயற்­ப­டவும், உண்­மை­களை கண்­ட­றி­யவும் அமைக்­கப்­ப­ட­வில்லை என கூறி எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவின் அணி­யான  பிர­தான எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் தெரி­வுக்­கு­ழுவில் இருந்து வில­கிக்­கொண்­டனர். 

அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வர வேண்டும் என்ற தமது நிலைப்­பாட்டில் இருந்­து­கொண்டு தெரி­வுக்­கு­ழுவில் பங்­கு­கொள்ள முடி­யாது என்­பதை அவர்கள் சபையில் தெரி­வித்­தி­ருந்­தனர். ஆகவே பிர­தான எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் தெரி­வுக்­கு­ழுவில் பங்­கு­கொள்ள மறுத்­ததை அடுத்து பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் ஒன்­பது பேர் கொண்ட தெரி­வுக்­கு­ழுவை சபா­நா­யகர் கடந்த பாரா­ளு­மன்ற அமர்­வு­க­ளின்­போது நிய­மித்தார். 

தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள்

இதில் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி, அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, ரவூப் ஹகீம், ரவி கரு­ணா­நா­யக்­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சரத் பொன்­சேகா, எம்.எ.சுமந்­திரன், ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன, ஆசு மார­சிங்க, நலிந்த ஜெய­திஸ்ஸ ஆகியோர் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் சுமத்­திரன் தனிப்­பட்ட ரீதியில் வெளி­நாட்டு விஜயம் ஒன்­றினை மேற்­கொண்­டுள்ள நிலையில் அவர் இன்­றைய கூட்­டத்தில் கலந்­து­கொள்ள மாட்டார். 

இன்­றைய கூட்­டத்­திற்­கான அழைப்பு 

 இன்று முதல் கூட்­டத்தில் கடந்த 21 ஆம் திகதி சம்­ப­வங்கள் குறித்த எந்த விசா­ர­ணை­களும் இடம்­பெ­றாது. மாறாக தாக்­கு­தலின் பின்னர் இது­வ­ரை­யி­லான கால­கட்டம் வரையில் நாட்டின் பாது­காப்பு செயற்­பா­டுகள் குறித்து ஆராயும் வகையில் பாது­காப்பு படை­களின் பிர­தானி அட்­மிரல் ரவீந்­திர விஜ­ய­கு­ண­ரத்ன, இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேனா­நா­யக்க, பாது­காப்பு செய­லாளர் எஸ்.எச்.எஸ். கோட்­டே­கொட ஆகியோர் தெரி­வுக்­கு­ழு­விற்கு அழைக்­கப்­ப­டு­வ­துடன் கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதி பிரத்தியேகமாக நியமித்த விசாரணை குழுவின் உறுப்பினர்   முன்னாள்   பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனும்  அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விசாரணைக் குழுவின் நகர்வுகள் மற்றும் அவர்களின் இடைக்கால அறிக்கை குறித்து அவர் இன்று தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41