வெளிநாட்டு அகதிகளுக்கு நிவாரணம் வழங்க சென்றோரை திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்

Published By: Digital Desk 4

28 May, 2019 | 06:39 PM
image

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கச் சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தினரால் இன்று திருப்பி அனுப்பப்பட்டனர். 

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பிலிருந்து அழைத்து செல்லப்பட்டு வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக ஒரு பகுதியினர் பூந்தோட்டம் முகாம் பகுதிக்கு சென்றிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள முறிப்பு கிராமத்த்தில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கம் என்பவற்றைச் சேர்ந்த 11 பேர் அடங்கிய குழுவினரே இவ்வாறு சென்றிறுந்தனர்.

வவுனியா நகரிலிருந்து மூன்று முச்சக்கர வண்டியில் நிவாரணப் பொருட்களுடன் அவர்கள் சென்ற நிலையில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம் பகுதியில் மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்பட்டதுடன், வருகை தந்தவர்களின் விபரங்களைப் பெற்றுக் கொண்ட இராணுவத்தினரும், பொலிசாரும் அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க முடியாது எனத் தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். 

இதன்போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயத்தின் அனுமதி பெற்று அவர்கள் ஊடாக பொருட்களை வழங்குமாறும் இப்பகுதிக்குள் எவரையும் உட்பிரவேசிக்க விட முடியாது என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். 

இது தொடர்பில் முல்லைத்தீவு, முறிப்பு கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில், உறவினர்கள் அற்ற நிலையில் ஏதிலிகளாக தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கு உலர் உணவு வழங்கி அவர்களை பார்வையிடுவதற்காக 92 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வந்தோம். 

இராணுவமும், பொலிசாரும் எம்மை அவர்களை சந்திக்க விடாது திருப்பி அனுப்பி விட்டனர். அகதிகளைப் பார்வையிடுவதும் அவர்களுக்கு உதவுவதும் மனித உரிமை ஆகும். ஆனால் அதற்கு இடமளிக்கப்படவில்லை. எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். 

இதேவேளை, வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 35 வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40