வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளுக்கு 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு:ரணில் விக்ரமசிங்க

Published By: R. Kalaichelvan

28 May, 2019 | 06:15 PM
image

(நா.தினுஷா)

வடக்கு கிழக்கு  அபிவிருத்தி  பணிகளுக்காக இந்த வருடத்தின் முதலீட்டு செலவாக  5000 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பனை அபிவிருத்தி நிதியத்துக்கு மேலதிகமாக  வடக்கு மற்றும்  கிழக்கு  அபிவிருத்தி பிரதேசங்களுக்கென  கம்பெரலிய வேலைத்திட்டதினூடாக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

    

வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை வேகமாக முன்னெடுப்பதற்கான  பனை அபிவிருத்தி  நிதியத்தின் ஆரம்ப நிகழ்வு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில்  நிதி அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொணடனர்.  

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,

யுத்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கு அழிவுற்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவென புதிய நிதியமொன்று  ஆரம்பிகக்ப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த பிரதேசங்களை சேர்ந்த பிரதிநிதிகள்  அபிவிருத்திக்கென நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டிருந்தனர்.  

அவர்களின்  வேண்டுக்கோளுக்கு அமைய  வரவுசெலவுத்திட்டத்தினூடாக இந்த பனை அபிவிருத்தி நிதியத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின்  அபிவிருத்திக்கென  அந்த பிரதேச  பிரதிநிதிகளினால்  முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு  இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ள கூடியதாக இருக்கும.அந்த நிதியத்துக்கு மேலதிகமாக வடக்கு  கிழக்கில்  அபிவிருத்தி பிரதேசங்களில் அபிவிருத்தி  வேலைத்திட்டங்களுக்கென  கம்பெரலிய வேலைத்திட்டதினூடாக  700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  

அதற்கமைவாக பொதுவாக பார்க்கும் போது  வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென  இந்த வருடத்துக்கான முதலீட்டு செலவாக  5000 கோடி ரூபா  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  திரைச்சேரியின் செயலாளர்  குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 2000 வீடுகளை  அமைக்கும் வேலைத்திட்டத்துக்கு  அமைவாக  தற்போது குறித்த பிரதேசங்களில் வீடு நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.  

இவ்வாறு யுத்ததால் பாதிப்படைந்த பிரதேசங்களுக்கு  என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினூடாக  நிதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்  22 ஆயிரம்  பட்டதாரி அரச அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டமும்  தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இவர்களில்  ஒரு பகுதியினரை வடக்கு கிழக்கு பிரதேசங்களில்  இருந்து சேவைக்காக இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்க்கிறோம். 

வடக்கு அபிவிருத்தி பணிகளை போன்று  நாட்டின் ஏனைய பிரதேசங்களின்  அபிவிருத்திப் பணிகளுக்கென்றும்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04