சம்பந்தன் தமிழர் என்பதாலேயே முகாம் விவகாரம் பூதாகரமானது.!

Published By: Robert

28 Apr, 2016 | 09:05 AM
image

நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒற்­றை­யாட்சி, சமஷ்டி முறை­மை­யி­லான தீர்­வு­கள்தான் வேண்டும் என பிடி­வாதம் பிடிப்போர் முட்­டாள்கள் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், சுகா­தார அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தமி­ழ­ரென்­பதால் தான் படை­மு­கா­முக்குச் சென்ற விடயம் பூதா­க­ர­மாக்­கப்­பட்­டது. இவ்­வி­ட­யத்தில் “முது­கெ­லும்பை” விட “மூளையை” பயன்­ப­டுத்­தியே தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என்­பதை உத­ய­ கம்­மன்­பில புரிந்துகொள்ள வேண்­டு­மென்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வாராந்த அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று கிரு­லப்­ப­னை­யி­லுள்ள அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன இதனை தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; வடக்கு,கிழக்கு பிரச்­சி­னைக்கு ஒற்­றை­யாட்சியின் கீழ் தான் தீர்வு. இல்லை. சமஷ்டி முறையில் தான் தீர்வு என அடம்பிடிப்போர் முட்­டாள்கள்.

வடக்கு அர­சியல்வாதிகள் தமிழ் மக்­களை ஏமாற்ற சமஷ்டி முறையில் தீர்வு என சொல்­கி­றார்கள். இது அவர்­க­ளது அர­சியல் இருப்­புக்­கான துரும்­பாகும்.

அதே­போன்று தெற்கில் சிங்­கள மக்­களை ஏமாற்றும் அர­சியல் இருப்­புக்­காக ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வு என பிடி­வாதம் பிடிக்­கப்­ப­டு­கி­றது. எனவே தான் இதனை முட்டாள் தன­மென அர்த்­தப்­ப­டுத்­தினேன்.

உலகில் பல்­வேறு நாடு­களில் சமஷ்டி, ஒற்­றை­யாட்சி, சுய­நிர்­ணய உரிமை என பல்­வேறு ஆட்­சி­மு­றை­மைகள் மற்றும் கலப்பு ஆட்சிமுறை­களால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் காணப்­ப­டு­கின்­றன.

எமது அண்டை நாடான இந்­தி­யாவின் அர­சி­ய­ல­மைப்பில் சில மாநி­லங்­க­ளுக்கு விசேட முறை­மையில் அதி­கா­ரங்­கள வழங்­கப்­பட்­டுள்­ளன.

எனவே நாம் ஒவ்­வொரு முறை­மை­களை பிடித்துக்கொண்டு அடம்பிடிக்­கக்­கூ­டாது.1926ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டிச் சிங்­க­ள­வர்­க­ளுக்கு சமஷ்டி முறை­மை­யி­லான ஆட்­சி­ய­தி­காரம் தேவை­யென எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க வலி­யு­றுத்­தினார்.

அப்­போது வடக்கு தமிழ் மக்கள் சமஷ்டி கேட்­க­வில்லை. முதன் முதல் சமஷ்­டியை சிங்­க­ள­வர்கள் தான் கேட்­டார்கள். சக­லரும் சமஷ்­டியை ஆத­ரித்­தனர். இன்று உலகம் மாறி­விட்­டது. ஆட்­சி­மு­றை­களும் மாறி­விட்­டன. கலப்பு ஆட்சி முறை­மைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

படை முகாம்

எதிர்க்கட்சித் தலைவர் சம்­பந்தன் தமிழர் என்­பதால் தான் அவர் படை­மு­கா­முக்குச் சென்ற விடயம் பெரி­து­ப­டுத்­தப்­பட்­டது. ஜனா­தி­ப­திக்கு முது­கெ­லும்­பி­ருந்தால் சம்­பந்­தனை கைதுசெய்ய வேண்டும் என்றும் வட­மா­காண சபையை கலைக்க வேண்டும் எனவும் உதய கம்­மன்­பில கூறு­கின்றார்.

முது­கெ­லும்­பல்ல ஜனா­தி­ப­திக்கு மூளை இருக்­கின்­றது. என­வேதான் சிந்­தித்து தீர்­மா­னங்­களை எடுக்­கின்றார். கடந்த காலங்­களில் முது­கெ­லும்பின் பலம் மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­பட்­டது. மூளை பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதனால் ஏற்­பட்ட விப­ரீ­தங்­களை நாம் பார்த்­துள்ளோம். இதனை கம்­மன்­பில புரிந்­து­கொள்ள வேண்டும்.

எதிர்க்­கட்சித் தலைவர் முகா­முக்குச் சென்­றது தொடர்பில் கட்­ட­ளை­ய­தி­காரி எவரும் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­ய­வில்லை. இவ்­வா­றான விஜ­யங்­களின் போது கடைப்­பி­டிக்க வேண்­டிய நடை­மு­றைகள் தொடர்­பா­கவே பொலிஸ் உய­ர­தி­கா­ரி­யுடன் இரா­ணுவ கட்­டளைத் தள­பதி உரை­யா­டி­யுள்ளார்.

படை முகாமுக்கு பிரபாகரன் போக வில்லையே? எதிர்க்கட்சித் தலைவர்தானே சென்றார். அத்தோடு எதிர்க்கட்சித் தலைவருக்கு வடக்கில் தமிழ் மக்களின் அழுத்தங்கள் உள்ளன.

அதனை சமாளிக்க வேண்டும். அத்தோடு அவர் மிதவாத அரசியல் கொள்கையை முன்னெடுக்க விரும்புகிறார். அதனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இப்பிரச்சினை முடிந்துவிட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46