முன்னாள் புலி உறுப்­பி­னர்­களின் கைது தொடர்பில் ஆரா­யப்­படும் : சூழ்ச்­சி மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு அனுமதியேன்

Published By: MD.Lucias

28 Apr, 2016 | 08:51 AM
image

சூழ்ச்­சிகள் மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன். கடந்த பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­ சிக்கு 106 உறுப்­பி­னர்­க­ளையும், சுதந்­தி­ரக்­கட்­சிக்கு 95 உறுப்­பி­னர்­க­ளையும் பொது­ மக்கள் தெரிவுசெய்­தி­ருந்­தனர். இதி­லி­ருந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட வேண்டும் என்­பதே மக்­களின் எதிர்பார்ப்­பாக இருந்­தது. அரசை கவிழ்க்க முயல்­ப­வர்கள் பாரா­ளு­மன்­றத்தில் 113 பெரும்­பான்­மையை காண்­பிக்­க­வேண்டும். அதற்­கான சாத்­தியங்கள் ஒரு­போதும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

வடக்கு மாகாண சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­ன­மா­னது அவர்­களின் நிலைப்பாடாகும். நாட்டின் இறைமை ஆட்­புல ஒரு­மைப்­பாட்­டுக்கு பங்கம் ஏற்­ப­டுத்­தவோ, அல்­லது நாட்டைப் பிரிப்­ப­தற்கோ நாம் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. வடக்கு, தெற்கில் சிலர் தமது அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை முன்­வைக்­கின்­றனர். ஆனாலும் நாம் நாட்­டைப்­பி­ரிக்க இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. தமி­ழ­கத்தில் தேர்­தலை இலக்­காகக் கொண்டு தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தொடர்பில் நாம் கவ­லை­கொள்ளத் தேவை­யில்லை என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்க முன்னாள் உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­ப­டு­வது தொடர்பில் நான் அறி­ய­வில்லை. அப்­படி நடந்தால் அதற்கு அனு­மதி அளிக்­கப்­ப­ட­மாட்­டாது. இவ்­வி­டயம் குறித்து உரிய கவனம் செலுத்­தப்­படும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்கள், மற்றும் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னி­களை ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இந்த சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:-

அண்­மையில் பொலிஸ் ஆணைக்­குழு மற்றும் அரச சேவை ஆணைக்­குழு என்­ப­வற்றின் பிர­தி­நி­தி­களை நேற்று சந்­தித்து நான் பேசி­யி­ருந்தேன். அவர்­க­ளது பிரச்­சி­னைகள் குறித்து நான் கேட்­ட­றிந்­து­கொண்டேன். ஆணைக்­கு­ழு­விற்கு நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் தமது பத­விக்­கா­லத்­திற்குள் முக்­கிய பிரச்­சி­னை­களை தெரிவு செய்து அவற்­றுக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். நானும் அப்­ப­டித்தான் செய்து வரு­கின்றேன். எனது பத­விக்­கா­லத்­திற்குள் தேசிய ரீதியில் முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்து அவற்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றேன்.

அரசின் மீது குற்­றச்­சாட்டு

எமது அர­சாங்கம் பத­வி­யேற்று 15 மாதங்கள் ஆகின்­றன. அர­சுக்கு எதி­ரா­கவும் எனக்கும் பிர­த­ம­ருக்கும் எதி­ரா­கவும் விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய விமர்­ச­னங்கள் நியா­ய­மா­ன­தா­கவும், தென்­ப­டு­கின்­றன. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம்­தி­கதி எமது நாட்டு மக்கள் வழங்­கிய ஆணை இல­கு­வா­ன­தல்ல.

தேர்தல் ஒன்றை சந்­திக்­க­வுள்ள தலைவர் ஒருவர் முழு ஆயத்­தங்­களை செய்த பின்­னர்தான் தேர்­தலில் ஈடு­ப­டுவார். ஆனால் நான் சந்­தித்த தேர்­தலின் போது நா ன் எவ்­வித ஆயத்­தங்­க­ளு­மின்றி அந்த நட­வ­டிக்­கையில் இறங்­கி­யி­ருந்தேன். அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய அன்­றுதான் நான் வேட்­பாளர் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்தத் தேர்­த­லா­னது மக்கள் பொறுப்­பே­டுத்த தேர்­த­லாகும். 49 கட்­சிகள் ஒன்­றி­ணைந்து ஒப்­பந்தம் செய்து தேர்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டாலும் மக்­களே அந்தத் தேர்­தலை பொறுப்­பெ­டுத்து மேற்­கொண்­டனர். 1947 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் நடை­பெற்ற எந்த தேர்­த­லிலும் இவ்­வாறு மக்கள் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. இவ்­வாறு ஆணை­வ­ழங்­கிய மக்கள் புதிய அர­சாங்­க­மா­னது விரைவில் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் என எதிர்­பார்த்­தனர். இவ்­வா­றான எதிர்­பார்ப்பே விமர்­ச­னங்­க­ளு­கு்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

சேத­ம­டைந்த வீதி­யொன்­றினை புன­ர­மைக்­க­வேண்­டு­மென்­றாலும் அதற்கு கார்பட் போட­வேண்­டு­மென்­றாலும், அந்தப் பாதையில் சென்­றுதான் அதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுக்­க­வேண்டும். சேத­ம­டைந்த பாதை வழி­யா­கவே வாக­னங்­களும் புல்­டோ­சரும் இயந்­தி­ரங்­களும் எடுத்து செல்­லப்­ப­ட­வேண்டும். இவ்­வாறு அந்தப் பாதை வழியே சென்று அதனை புன­ர­மைக்­க­வேண்டும். இவ்­வாறு செயற்­படும் போது விமர்­ச­னங்­களும் குற்­றச்­சாட்­டுக்­களும் எழு­வது என்­பது வழ­மை­யா­ன­தாகும்.

கடந்த பொதுத்­தேர்­த­லின்­போது ஐக்­கிய தேசி­ய­கட்­சிக்கு 106 ஆச­னங்­க­ளையும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு 95 ஆச­னங்­க­ளையும் மக்கள் வழங்­கி­யி­ருந்­தனர். தனித்து ஆட்சி அதி­காரம் செய்­வ­தற்கு மக்கள் இரு­பி­ர­தான கட்­சி­க­ளுக்கும் ஆணை வழங்­க­வில்லை. அவ்­வாறு ஆணை வழங்­கி­யி­ருந்தால் பாரா­ளு­மன்­றத்தில் 113 ஆச­னங்கள் ஒரு கட்­சிக்கு கிடைத்­தி­ருக்­க­வேண்டும்.

எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளிலும் தேசிய அர­சாங்கம் அமை­யு­மென்றே கூறி­யி­ருந்தோம். தேர்தல் முடி­வை­ய­டுத்து சக­லரும் ஒன்­றி­ணைந்து ஆட்சி செய்யும் தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யி­ருந்தோம். எமது புதிய அர­சாங்­கத்தின் மீது பெரும் எதிர்­பார்ப்பை மக்கள் வைத்­துள்­ளனர். சேத­ம­டைந்த பாதை­யினை புதுப்­பிப்­ப­தற்­காக அந்த வழியில் நாம் முன்­னேறி செல்­கின்றோம்.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு

முன்னர் ஏன் தேர்தல்?

எனக்கு முன்­பி­ருந்த ஆட்­சி­யாளர் இரண்டு வரு­டங்கள் பத­விக்­காலம் இக்கும் நிலையில் ஏன் தேர்­த­லுக்கு சென்றார். என்­பது தொடர்பில் நீங்கள் யாரும் கேள்வி எழுப்­பி­ய­தாக தெரி­ய­வில்லை. அதேபோல் அவரும் தனது பத­விக்­காலம் நிறை­வ­டை­வ­தற்கு இரு­வ­ரு­டங்கள் இருக்கும் நிலையில் தேர்­த­லுக்கு சென்றார் என்­பது குறித்து கூற­வில்லை. ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் நான் எட்டு விட­யங்­களை குறிப்­பிட்டு தேர்­த­லுக்கு செல்­வ­தாயின் அந்த எட்­டு­வி­ட­யங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று கோரி­யி­ருந்தேன்.

யுத்­த­மொன்­றுக்கு இரா­ணுவம் செல்­வ­தாயின் படை அதி­கா­ரிகள், மற்றும் படை­வீ­ரர்கள் மத்­தியில் அதற்­கான மன­நி­லை­யினை ஏற்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு தேர்­த­லுக்கு செல்­வ­தற்கு முன்னர் எமது கட்­சி­யினர் மத்­தியில் அதற்­கான மன நிலையை ஏற்­ப­டுத்­து­மாறு நான் கேட்­டி­ருந்­தேன. ஆனால் அவற்­றுக்கு செவி­சாய்க்­கப்­ப­ட­வில்லை.

உண்­மை­யி­லேயே இரண்டு விட­யங்­க­ளுக்­காக மட்­டுமே தேர்­தலை முன்­ன­தா­கவே நடத்­து­வ­தற்கு முன்னாள் நாட்டின் தலைவர் தீர்­மா­னித்­தி­ருந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா தீர்­மா­னத்­திற்கு முகம் கொடுக்­க­வேண்­டிய நிலை, பொரு­ளா­தார பிரச்­சினை ஆகி­ய­வையே இந்த இரு கார­ணங்­க­ளாக அமைந்­தி­ருந்­தன.

அன்று நாட்­டுக்குப் பொருத்­த­மற்ற தீர்­மா­னங்­களே எடுக்­கப்­பட்­டன. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் புதன்­கி­ழ­மை­களில் தேனீர் விருந்­துக்­கான சந்­தர்ப்­ப­மா­கவே அமைச்­ச­ரவைக் கூட்டம் அமைந்­தி­ருந்­தது. அன்று ஆட்சி செய்த குடும்­பத்­தி­லுள்ள ஐந்து பேர் மட்டும் அமர்ந்­தி­ருந்து முடி­வு­களை எடுத்து விட்டு அந்த விட­யங்­களே அமைச்­ச­ர­வைக்கு கொண்­டு­வந்­தனர். அதி­கா­ர­மற்ற அமைச்­ச­ர­வையும் அர­சாங்­க­முமே அன்று காணப்­பட்­டன.

மாவட்­டங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீ­டுகள்

அன்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருந்­தவர் ஒவ்­வொரு மாவட்­டத்­திற்கும் சென்று நிதி ஒதுக்­கீ­டு­களை மேற்­கொண்டார். கொழும்­பி­லி­ருந்து மேடைகள், கட்­ட­வுட்­டுகள் மாவட்டம் தோறும் கொண்­டு­செல்­லப்­பட்­டன. பஸ்­களில் மக்கள் ஏற்றி இறக்­கப்­பட்­டனர். கட்­சியின் மாவட்டத் தலை­வர்­க­ளுக்கோ, அல்­லது மாவட்ட அமைச்­சர்­க­ளுக்கோ இது குறித்து அறி­விக்­கப்­ப­டு­வ­தில்லை. மாவட்டம் தோறும் குறித்த அமைச்சர் உரை­யாற்­று­வ­தா­கவே நிகழ்­வுகள் அமைந்­தி­ருந்­தன. ஐந்­து­ச­தத்­திற்­குக்­கூட மாவட்­டத்­தி­லுள்ள அமைச்­சர்கள் கணக்­கி­லெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு நிதி­ஒ­துக்­கி­யவர் தற்­போது மேதினக் கூட்­டத்­தினை நடத்­து­வ­தற்­காக பிர­தே­சங்கள் தோறும் சென்று போக்­கு­வ­ரத்­துக்கும் சாப்­பாட்­டுக்கும் நிதி பகிர்ந்து வரு­கின்றார். இந்த நிதி எங்­கி­ருந்து வந்­தி­ருக்­கின்­றது என்ற பிரச்­சி­னையும் எழுந்­துள்­ளது.

சொகுசு விமானக்

கொள்­வ­னவை நிறுத்­தினோம்

சிறி­லங்கன் எயார்லைன்ஸ் விமா­ன­சேவை நிறு­வனம் பெரும் நஷ்­டத்தில் இயங்­கு­கின்­றது. இந்த நிலையில் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் 250 கோடி ரூபா செலவில் அதி­சொ­குசு விமா­ன­மொன்றை கொள்­வ­னவு செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர். இலங்கை வங்கி மூலம் இதற்­கான ஒரு­துக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. நாம் இந்தக் கொள்­வ­னவை இரத்து செய்து அந்தப் பணத்தை விமான சேவை உப­க­ர­ணங்­களை கொள்­வ­னவு செய்யும் வகையில் மாற்­றி­யி­ருக்­கின்றோம்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் நில­விய ஊழல் மிக்க செயற்­பா­டு­களை ஒழிப்­ப­தற்­கா­கவும் நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காப்­ப­தற்­கா­வுமே நான் அன்று அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கினேன். 48 வரு­டங்­க­ளாக எதி­ராக செயற்­பட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து புதிய ஆட்­சியை உரு­வாக்கி ஜன­நா­ய­கத்தை உரு­வாக்­கி­யுள்ளோம்.

சில ஊடக நிறு­வ­னங்கள் செயற்­படும் விதத்தைப் பார்த்தால் அவர்கள் இவ்­வாறு ஊழல் மோச­டி­களை மேற்­கொண்ட தலை­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வ­தா­கவே தெரி­கின்­றது. அன்­றைய காலத்தில் ஊட­க­வி­ய­லார்கள் கொல்­லப்­பட்­டனர். ஊடக நிறு­வ­னங்கள் எரிக்­கப்­பட்­டன. ஊடக நிறு­வ­னங்கள் மீதும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதும் அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டன. இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள், மற்றும் ஊடக நிறு­வ­னங்கள் தொடர்பில் நான் தற்­போது விப­ரங்­களை கோரி­யி­ருக்­கின்றேன். ஊட­கங்கள் ஒரு­பக்கம் சாராது நடு­நி­லை­யாக செயற்­ப­ட­வேண்டும் என்று தய­வாக கேட்­டுக்­கொள்­கின்றேன்.

சுதந்­திர கட்­சிக்குள் உள்­மு­ரண்­பாடு இல்லை. கட்­சியை தோல்­வி­ய­டையச் செய்ய முயல்­ப­வர்கள் தொடர்­பி­லேயே முரண்­பாடு தொடர்­கி­றது. அர­சாங்­கத்தை உடைத்து புதிய ஆட்­சியை உரு­வாக்கும் சூழ்ச்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. சூழ்ச்­சிகள் மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு ஒரு­போதும் நான் இட­ம­ளிக்க மாட்டேன். ஆட்­சியை அமைப்­ப­தென்றால் பாரா­ளு­மன்­றதில் 113 உறுப்­பி­னர்­களின் பெரும்­பான்மை காண்­பிக்­கப்­ப­ட­வேண்டும். பிர­த­மரின் ஒத்­து­ழைப்­பின்றி எனது ஆசீர்­வா­த­மின்றி இவ்­வாறு பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாது.

சுதந்­தி­ரக்­கட்சி கடந்த தேர்­தலில் 95 ஆச­னங்­களைப் பெற்­றி­ரு­நந்­தது. சூழ்ச்சி செய்­ப­வர்கள் இதில் 50 ஆச­னங்­களைக் கூட பெற்­று­விட முடி­யாது. சரி 50 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவை இவர்கள் பெற்­றாலும் இன்­னமும் 63 உறுப்­பி­னர்கள் பெரும்­பான்­மையை பெற தேவை­யாகும். ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஜே.வி.பி. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, ஆகி­ய­வற்றின் ஆத­ரவைப் பெற்­றால்தான் இந்தப் பெரும்­பான்­மை­யினை சூழ்ச்சி செய்வோர் பெற­மு­டியும். வாழ்க்­கையில் ஜே..வி.பி. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகி­ய­வற்றின் ஆத­ரவு இவர்கள் பெற முடி­யாது.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆத­ரவும் இவர்­க­ளுக்கு கிடைக்­கப்­போ­வ­தில்லை. இவ்­வாறு சூழ்ச்­சியை மேற­கொள்­ப­வர்கள் நாட்டில் அர­சியல் ஸ்திரத்­தன்மை இல்­லை­யென்றும் அர­சாங்கம் தொடர்ந்தும் பய­ணிக்க முடி­யாது என்றும் காண்­பிக்­கவே முயல்­கின்­றனர்.

ஹைட்பார்க் கூட்டம்

அண்­மையில் ஹைட்­பார்க்கில் கூட்­ட­மொன்­றினை இவர்கள் நடத்­தி­யி­ருந்­தனர். உள­வுத்­த­க­வல்­களின் படி இந்தக் கூட்­டத்­திற்கு 11900 பேரே வந்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தக்­கூட்­ட­மா­னது ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை நடத்தி வரும் அதி­கா­ரி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுப்­ப­தற்­கா­கவே நடத்­தப்­பட்­டது. இங்கு உரை­யாற்­றிய முன்னாள் அரச தலைவர் இங்கு கூடி­யுள்ள மக்­களை நீதித்­து­றை­யினர் பார்க்­க­வேண்டும் என்று உரை­யாற்­றி­யி­ருந்தார். இந்­தக்­கூற்றின் மூலம் அவர் நீதித்­து­றை­யி­ன­ருக்கு மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுப்­ப­தையே அவ­தா­னிக்க முடிந்­தது.

உல­கி­லேயே தோல்­வி­யுற்ற ஒரு தலை­வ­ருக்கு விரும்­பிய இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும், பாது­காப்பு தரப்­பி­ன­ரையும் அழைத்­துக்­கொண்டு ஹெலி­கொப்டர் மூலம் வீடு திரும்­பு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்த ஒரே தலை­வ­ராக நானே இருக்­கின்றேன்.

கேள்வி:- ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன்­பிடி இறக்­கு­மதி தடை நீக்­கப்­பட்­டுள்­ளது. இதேபோல் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையும் கிடைக்­குமா?

பதில்:- மீன்­பிடி இறக்­கு­மதி தடை­யினை ஐரோப்­பிய ஒன்­றியம் தளர்த்­து­வ­தற்கு நான், பிர­தமர் , வெ ளிநாட்டு அமைச்சர் உட்­பட அர­சாங்கம் எடுத்த நட­வ­டிக்­கையே கார­ண­மாகும். தனிப்­பட்ட முயற்­சி­யாக இதைக் கொள்ள முடி­யாது. கொள்கை ரீதி­யான நட­வ­டிக்­கை­யா­கவே இது அமைந்­தி­ருந்­தது. இதேபோல் வெகு­வி­ரைவில் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையும் கிடைக்கும்.

கேள்வி:- பாதிக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் தக­வல்­களை கோரி­யுள்­ளீர்கள், இதேபோல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளான ஊட­க­நி­று­வ­னங்­க­ளுக்கு நட்ட ஈடுகள் வழங்­கப்­ப­டுமா?

பதில்:- ஊடக நிறு­வ­னங்கள் இதற்­கான கோரி­கை­களை முன்­வைத்தால் அர­சாங்கம் எவ்ற ரீதியில் இவை குறித்து பரி­சீ­லிக்­கப்­படும்.

கேள்வி:- சிறி­லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தை தனியார் மயப்­ப­டுத்தப் போவ­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்: சிறி­லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறு­வனம் மிக மோச­மான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. 21 விமா­னங்கள் இருக்­கின்ற நிலையில் ஐயா­யிரம் ஊழி­யர்கள் இதில் பணி­யாற்­று­கின்­றனர். நாம் ஆட்சி அமைத்த பின்னர் விமா­னங்­களில் வணிக இருக்­கை­களில் இருந்தே நான் பயணம் செய்­கின்றேன். இதனால் அர­சாங்கம் வேறு அர­சாங்­கத்­து­டனோ அல்­லது சர்­வதே நிறு­வ­னத்­து­டனோ ஒன்­றி­ணைந்து இந்த சேவை­யினை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு இல்­லை­யானால் மக்­களே கடன்­சு­மையை சுமக்­க­வேண்டி வரும்.

கேள்வி:சமஷ்டி மூல­மான அர­சி­யல்­தீர்வு வேண்­டு­மென்று வட­மா­கா­ண­சபை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. தமிழ்­நாட்டு முத­ல­மைச்சர் செல்வி ஜெய­ல­லிதா இலங்­கையில் வேறு நாடு உரு­வா­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்று கூறி­யி­ருக்­கின்றார். இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- வெளி­நாட்­டி­லி­ருந்­து­கொண்டு ஒவ்­வொ­ரு­வரும் கூறும் விட­யங்கள் தொடர்பில் கவ­னத்­தில்­கொள்­ள­வேண்­டி­ய­தில்லை. தமி­ழ­கத்தில் தேர்­தலை இலக்­காகக் கொண்டு கருத்­துக்­களை கூறு­கின்­றனர். மத்­திய அரசின் தலை­வர்­க­ளுடன் நாம் இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். இதனால் தேர்­தலை இலக்­காகக் கொண்டு தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தொடர்பில் கவ­லை­கொள்­ளத்­தே­வை­யில்லை.

அத்துடன் பொதுவாக எடுத்துக்கொண்டால் மாகாண சபைகளில் முன்மொழிவுகள் பிரேரணைகள், நிறைவேற்றப்படுகின்றன. பாராளுமன்றத்தில் 1947 ஆம் ஆண்டு முதல் பல பிரேரணைகள் சட்டமூலங்கள், நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அப்படியே உள்ளன. வடமாகாணசபையிலும், பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அது அவர்களது கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் நாட்டை பிரிப்பதற்கோ , அல்லது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.

வடக்கு, மற்றும் தெற்கில் அரசியல் இலாபம் பெறுவதற்கு சிலர் முயலுகின்றனர். வடக்கு, தெற்கில் சிலர் தமது அடிப்படைவாதக் கொள்கைகளை முன்வைக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் நாட்டை துண்டாடுவதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.

கேள்வி:- 2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை எவ்வாறானதாக அமைந்துள்ளது? .

பதில்:- ஐ.நா. ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்த போது மூன்று விடயங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியிருந்தார். வடக்கு மக்களின் மீள் குடியேற்றம், காணாமல் போனோர் விவகாரம், நீதிமன்றத்தின் சுயாதீனம் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே சுட்டிக்காட்டியிருந்தார். ஜெனிவா தீர்மானம் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.

கேள்வி:- வடக்கில் முன்னாள் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்:- இந்தப் பிரச்சினை குறித்து நான் தேடிப்பார்க்கின்றேன். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44