மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை அகற்ற முயற்சி - இராதாகிருஷ்ணன்

Published By: Daya

28 May, 2019 | 11:51 AM
image

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை அகற்றி அதனை மத்திய மாகாண கல்வி அமைச்சாக அதாவது முதலமைச்சருக்கு கீழ் வருகின்ற கல்வி அமைச்சுடன் இணைக்க வேண்டும் என மத்திய மாகாண கணக்காய்வாளர் திணைக்களத்தினால் கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை தான் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் இது போன்ற தீர்மானங்களை கொள்கை ரீதியில் ஜனாதிபதியே மேற்கொள்ள வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அண்மையில் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ண தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக மத்திய மாகாண கணக்காய்வாளர் திணைக்களத்தினால் கணக்காய்வாளர் நாயகம் பின்வருமாறு பரிந்துறை ஒன்றை செய்துள்ளார்.

அதன்படி மத்திய மாகாண கல்வி அமைச்சின் ஊடாக சிறப்பான ஒரு சேவையை முன்னெடுக்கக்கூடிய நிலை இருக்கின்ற பொழுது தமிழ் கல்வி பிரிவை மத்திய மாகாண விவசாய அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்றமையானது பொருத்தமற்ற ஒரு செயலாக கருதுவதாகவும் இதன் காரணமாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் கீழ் (முதலமைச்சரின் கீழ் செயற்படும் கல்வி அமைச்சுடன் செயற்படுவதே சிறந்ததாகும் என பேராதனை கெடம்பே மிருக வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களத்தின் அரசாங்க கணக்காய்வாளர் திணைக்களத்தின் கணக்காய்வாளர் நாயகத்தினால் 2019 மே மாதம் 7 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த மேற்குறிப்பிட்டுள்ள பரிந்துரையை தான் முற்றாக நிராகரிப்பதாகவும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு தனியாகவே செயற்பட வேண்டும்.1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாகாண சபைகள் முறைமையின் கீழ் அன்று மறைந்த அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மத்திய ஊவா சப்ரகமுவ மாகாணங்களில் கல்வி அமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என விடுத்த கோரிக்கையின் பயனாக இந்த மூன்று மாகாணத்திலும் முறையே மத்திய மாகாணத்திற்கு தொண்டமான் இராமநாதன் ஊவா மாகாணத்திற்கு சுப்பையா சப்ரகமுவ மாகாணத்திற்கு ஏ.எம்.டி.ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் காலப்போக்கில் இது சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து அகற்றப்பட்டதுடன் மத்திய ஊவா மாகாணங்களில் தொடர்ந்தும் தனி தமிழ் கல்வி அமைச்சாகவும் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதை காண முடியும்.எனவே இந்த அமைச்சராக இ.தொ.கா உறுப்பினரா அல்லது தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினரா அல்லது மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினரா அல்லது வேறு எந்த கட்சியையும் சார்ந்த சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றவரா நியமிக்கப்படுகின்றார் என்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.ஆனால் இதனை மத்திய மாகாண கல்வி அமைச்சின் கீழ் இணைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.இந்த பரிந்துரையை எந்த காரணம் கொண்டும் நடைமுறைபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01