மோசடி செய்யும் ஊழி­யர்கள் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை.!

Published By: Robert

28 Apr, 2016 | 08:46 AM
image

இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்குச் சொந்­த­மான பணத்­தினை மோசடி செய்யும் ஊழி­யர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

அநு­ரா­த­புரம் சி.டி.சி. வர­வேற்பு மண்­ட­பத்தில் போக்­கு­வ­ரத்துச் சபை ஊழி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில், போக்­கு­வ­ரத்துச் சபை பொது­மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யினை வழங்­கவே இருக்­கின்­றது. அதனை பாது­காப்­பது ஒவ்­வொரு ஊழி­யர்­களின் பாரிய பொறுப்­பாகும்.

போக்­கு­வ­ரத்துச் சபையில் சேவை செய்யும் ஊழி­யர்கள் அர்ப்­ப­ணிப்­புடன் நேர்­மை­யாக தமது கட­மை­களை செய்தால் போக்­கு­வ­ரத்துச் சபை நஷ்­ட­ம­டை­வதில் இருந்து பாது­காக்க முடியும். அதன் மூலம் சபைக்கு இலா­பத்தை ஈட்டிக் கொள்­வது மாத்­தி­ர­மன்றி பொது­மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யி­னையும் வழங்க முடி­யு­மென நான் இவ்­ வி­டத்தில் கூறிக்கொள்ள விரும்­பு­கின்றேன்.

போக்­கு­வ­ரத்து சேவையில் இருந்து ஒதுக்­கப்­பட்­டுள்ள 500 பஸ் வண்­டி­களை எதிர்­வரும் மே மாதத்தில் இருந்து சேவையில் ஈடு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான உதி­ரிப்­பா­கங்­களும் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன என அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் அமைச்­சர்­க­ளான துமிந்த திசா­நா­யக்க, சந்­தி­ராணி பண்­டார, போக்­கு­வ­ரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறி வர்த்தன, அநுராதபுரம் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சந்திம மஹிந்தசோம, போக்குவரத்துச் சபை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47