மோடியின் அமோக வெற்றியும் அதனால் இலங்கையில் ஏற்படக்கூடிய பொருளாதார மாற்றங்களும்

Published By: R. Kalaichelvan

28 May, 2019 | 10:03 AM
image

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக நரேந்திர மோடியின் அமோக வெற்றியுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது நாம் அனைவரும் நன்றாக அறிந்ததே.இதனால் இலங்கைக்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பது பற்றி நாம் இப்போது பார்ப்போம்.

பாரதிய ஜனதா கட்சி கடந்த 5 வருட காலங்களில் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொண்டு இந்தியாவில் பல பாரிய கட்டமைப்பு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

உதாரணமாக GST வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமை, புழக்கத்திலிருந்த பழைய நாணயத்தாள் வலுவிளக்கம் செய்தமை, வேலையின்மை விகிதாசாரக் குறைப்புத்திட்டம், இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமை போன்றனவை அவற்றில் சிலவாகும். 

இந்தியாவை உலகின் முதன்மை வல்லரசு நாடாக மாற்றுவதனையே நீண்டகால திட்டமாகக் கருதியதுடன் அதனால் ஏற்பட்ட மற்றும் ஏற்படும் குறுங்கால பிரதிகூலங்கள், மேலும் இவ்வாறான புதிய மாற்றங்களை ஒரு பகுதி மக்களும் சில அமைப்புகளும் பாரிய எதிர்ப்புகளினை தொடர்ந்து கொடுத்து வந்திருந்தாலும் அதனை சவாலாக ஏற்று மக்கள் நலனை மாத்திரமே கருத்தில்கொண்டு நீண்ட காலத் தொலைநோக்கு பார்வையுடன் துணிச்சலுடன் அறிமுகப்படுத்தினார். 

ஒரு சிறந்த அரசியல்வாதியாக இருந்து மக்களினதும் மற்றும் நாட்டினதும் உண்மையான வளர்ச்சியே மிக முக்கியமென எண்ணியதுடன் மாத்திரமல்லாது அதனால் பாரிய எதிர்ப்புகள் ஏற்பட்டு அடுத்த தேர்தலில் மக்களால் தூக்கி எறியக்கூடிய நிலைமை ஏற்படக்கூடும் என தெளிவாக தெரிந்திருந்தும், நரேந்திர மோடியின் துணிகரமாக மேற்கூறிய திட்டங்களினை வெற்றிகரமாக அமுல்ப்படுத்தினார். தொடர்தேர்ச்சியாக அவர் தனது நாட்டு மக்களுக்கு பொறுமைகாக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொண்டதோடு, திட்டங்கள் முழுமையாக அமுலுக்கு வந்து திறம்பட செயற்பட்டபின் அதனால் வரும் அனுகூலங்களினை இனிவரும் காலங்களில் நிச்சயம் மக்கள் அனுபவிக்கக் கூடியதாக இருக்குமென மிகவும் தெளிவுடனும் உறுதியுடனும் கூறியிருந்தார். 

இந்தியாவின் பெரும்பான்மை மக்களும் அவரின் உண்மையான நோக்கத்தினை புரிந்துகொண்டு நடந்துமுடிந்த தேர்தலில் அவருக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியினை கொடுத்துள்ளனர். இதன் மூலம் உண்மையிலேயே திரு. நரேந்திர மோடி ஒரு முன்னுதாரணமான தலைவனாக தன்னை முழு உலகுக்கும் நிரூபித்துள்ளமை மாத்திரமன்றி இந்தியநாட்டு மக்களும் தாங்கள் நாட்டின் நல்ல பிரஜைகள் என்பதனையும் நிரூபித்துள்ளனர். 

இதனையே ‘WIN – WIN’ situation என்பார்கள். அண்மைக்காலமாக இலங்கை நல்லதொரு முன்னேற்றகரமன பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பழைய கசப்பான நிலமைகளையெல்லாம் மக்கள் மறந்து மிகவும் சமாதான ஐக்கிய ஜனநாயக கட்டமைப்புக்குள் தங்களின் வாழ்க்கை முறையினை அர்ப்பணித்து செழுமையுடன் வாழ்ந்துவந்தனர். முழுஉலகமுமே வியந்துபோகும் வண்ணம் இலங்கை நாட்டின் பொருளாதார முன்னேற்றமும் மற்றும் ஏனைய துறைகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன.

யாருமே எதிர்பாராத வகையில் நெஞ்சில் ஈட்டியை துளைத்தது போல “உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த தொடர்க்குண்டுத் தாக்குதலானது” ஒரு துரதிஷ்ட சம்பவமாக அமைந்துவிட்டது. இதனால் இலங்கை நாட்டின் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திடத்தன்மை மிகவும் பின்னடைவினை சந்தித்துள்ளது. ஆனால் இலங்கை மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பல துன்பங்களை முகங்கொடுத்போதிலும் அவற்றையெல்லாம் துணிச்சலாகக் கையாண்டு இயலுமானவரையில் வென்று முழு உலகுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

இலங்கையானது ஆசியாகண்டத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய பெரிய வல்லரசு நாடுகளுக்கு மத்தியில் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு சிறிய அழகிய நாடாகும். சுருங்கச்சொல்லின் இரண்டு செல்வந்த சகோதரர்களின் மத்தியில் வாழும் ஒரேஒரு செல்ல சகோதரி போன்று இலங்கை விளங்குகிறது. நான் சொல்லவருவது என்னவென்றால் ஒரு அண்ணனின் உதவியும் கவனிப்பும் இல்லாவிடத்து மற்றைய அண்ணனின் கவனிப்பு எப்பொழுதுமே இருந்த வண்ணம் இருக்கும். சிலபல சந்தர்ப்பங்களில் இருவரினதும் அமோக கவனிப்பு தொடர்தேர்ச்சியாக இருந்த வண்ணமே இருக்கும். இதனை இலங்கையர் அனைவரும் அனுபவித்தே வருகின்றோம். மேலும் இனிவரும் காலங்களில் சீனாவும் இந்தியாவும் ஒரு ஸ்திடமான அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிப்போக்கினை நோக்கிச் செயற்படப்போவது உறுதியே. 

எனவே இலங்கையும் இந்த சாதகமான வெளிநிலவரத்தினை பயன்படுத்துமேயானால் நல்லவொரு எதிர்காலம் அமையப்போவது உறுதியே. எனவே எமது நாட்டிலும் மேற்குறிப்பிட்ட இந்திய பிரதமரான திரு. நரேந்திர மோடியின் அணுகுமுறையையும் இலங்கை மக்களின் நேர்த்தியான போக்கினையையும் கருத்திற்கொண்டு வருகின்ற இலங்கை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தொலைநோக்க வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக இலங்கை நாட்டினை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றி அமைக்ககூடிய ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளமுடியும். ஏனெனில் கடந்த காலங்களில் நாம் உன்னிப்பாகக் கவனிப்போமேயானால் இலங்கை அரசினால் காலத்திற்குகாலம் அறிமுகப்படுத்திய புதிய நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய திட்டங்களினை மக்கள் எதுவித எதிர்புமின்றி ஏற்றுக்கொண்டு அதற்கமைய செயற்பட்டு வாழ்ந்துகாட்டி வந்துள்ளனர். இதற்கு உதாரணமாக 30 வருடத்திற்கு மேலாக வழக்கத்திலிருந்த BTT (Business Turnover Tax) வரிமுறையினை நீக்கி புதிய GST வரி (Goods and Services Tax) அறிமுகப்படுத்தியமை மற்றும் மிகக் குறிகியகாலத்தினுள் அதாவது 2 வருடத்துனுள் அமுலிலிருந்த GST வரியினை நீக்கி தற்போது அமுலிலிருக்கும் VAT வரியினை (Value Added Tax) அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எனவே மக்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும்பொழுது குறிப்பாக லஞ்சம், ஊழல், கறுப்புப்பணப்புழக்கம், போதைவஸ்துபாவனை மற்றும் சட்டத்திற்கு புறம்பான ஏனைய நடவடிக்கைகள் போன்ற முழுநாட்டையும் வீட்டையும் சீரழிக்கும் செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிக்கும்வண்ணம் புதிய திட்டத்தினை மிகவும் துணிச்சலுடனும் தொலைதூரநோக்குடனும் அறிமுகப்படுத்தமுடியுமேயானால் நல்லதொரு எதிர்காலத்தினை இலங்கையில் ஆட்சியாளர்கள் அமைக்க முடியும். இதற்கு நான் மேலே குறிப்பிட்ட இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் துணிச்சலான அணுகு முறைகளை முன்னுதாரணமாகக் கருதி எமது நாட்டு அரசியல் கட்சிகளும் பின்பற்றுமேயானால் எமது இலங்கை நாட்டு மக்கள் நிச்சயமாக அதற்குக் கைகொடுப்பார்கள்.

ஏனெனில் இவ்வாறன நல்லதொரு சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி இலங்கைக்கான புதிய தேசிய திட்டக்கொள்கை (National Policy) அறிக்கையினை அமுல்படுத்தமுடியும். அவ்வாறு புதிய தேசிய திட்டக்கொள்கை (National Policy) இருக்குமேயானால் எவ்வித ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் இலங்கையானது பொதுவான இலக்கினை நோக்கி எந்தவித தங்குதடையுமின்றி முன்னோக்கிச் செல்லக்கூடியதாக அமையும். அதுமாத்திரமன்றி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைமீது பல்லாண்டுகாலமாக சுட்டிக்காட்டும் பாரிய குறைபாடான ஸ்திடமற்ற அரசின் பொருளாதாரக்கொள்கை போன்ற தன்மைகள் அறவே நீங்கிவிடும்.

இதன்வாயிலாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, மொத்த தேசிய வருமானம், சிறந்த பொருளாதார வளர்ச்சிவிகிதம், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் பாரிய வளர்ச்சி அடைவதோடு மட்டுமல்லாது தனிநபர் வருமானம் அதிகரிப்பு போன்றவையும் துரிதமான முறையில் வளர்ச்சியடையும். இதன் மூலம் ஆசியாக் கண்டத்தில் இலங்கையும் ஒரு சிறந்த சுபீட்ஷம்மிக்க நாடகத் திகழமுடியும்.

Catches win the Matches என்பதனை மனதில் வைத்துக்கொண்டு, இந்த நல்லதொரு வாய்ப்பினை இலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த எல்லாம்வல்ல எம்பெருமான் அருள்புரிய வேண்டுமென வேண்டிநிற்கின்றேன்.

A.G.S. சுவாமிநாதன் சர்மா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57