தேசிய அர­சாங்­கத்தில் ஒட்­டிக்­கொண்­டுள்ளோம் என்­ப­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாலாக எம்மை நினைத்­து­விட வேண்டாம். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மட்­டுமே ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் உறவு காணப்­படும். அதன் பின்னர் தேசிய அர­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றுவோம் என ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி தெரி­வித்­தது.

எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் தேசிய அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேறி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்தத் தயா­ரா­கவே உள்ளோம் எனவும் சுதந்­திரக்கட்சி குறிப்­பிட்­டது..

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் அனுர பிரி­ய­தர்­சன யாப்பா தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் நாம் கூட்­டணி அமைத்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ளோம் என்­ப­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாலாக எம்மை நினைத்­து­விடக்கூடாது. கடந்த பொதுத் தேர்­தலில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் பெரும்­பான்மை ஆத­ரவு கிடைக்­காத கார­ணத்­தினால் தான் நாட்டின் நிலை­மைகளை சமா­ளிக்­கவும், சர்­வ­தேச சிக்­கல்­களில் இருந்து மீண்­டெழும் நோக்­கத்­திலும் தேசிய அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைத்தோம்.

எனினும் இரண்டு வரு­டக்­க­ளுக்கே நாம் தேசிய அர­சாங்கம் என்ற உடன்­ப­டிக்­கையை ஏற்­றுக்­கொண்டோம். கடந்த காலத்தில் நாட்டின் நிலை­மைகள் மோச­மாக காணப்­பட்ட நிலையில் நாட்டை சரி­யாக கையா­ள­வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் எண்­ணி­னார்கள். அதற்கு ஒத்­து­ழைக்கும் வகை­யி­லேயே நாம் ஒத்­து­ழைப்பு வழங்­கினோம்.

முன்னர் எல்லாம் கட்சி தாவி ஒரு கட்­சியை பலப்­ப­டுத்தும் அர­சியல் கொள்கை மட்­டுமே இருந்­தது. ஆனால் இம்­முறை அவ்­வாறு இல்­லாது இரண்டு கட்­சி­களின் உறுப்­பி­னர்­களும் கட்­சியை விட்டு வெளி­யே­றாது ஒரு பொது உடன்­ப­டிக்­கையில் இணைந்து ஆட்­சியை அமைத்­துள்ளோம். இதில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு முன்­னு­ரிமை உள்­ளது என்றோ அல்­லது அவர்­களின் ஆத­ரவில் ஆட்­சியில் அங்கம் வகிக்­கின்றோம் என்றோ கூற­மு­டி­யாது. எவ்­வாறி­ருப்­பினும் நிரந்­த­ர­மாக நாம் தேசிய அர­சாங்கம் என்ற நிலைப்­பாட்டில் இருக்க மாட்டோம்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்­டணிக் கட்­சிகள் எப்­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பலப்­ப­டுத்­தியே செயற்­பட்­டுள்­ளன. ஒரு­போதும் நாம் அதை மறுக்­க­வில்லை. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி பல­வீ­ன­ம­டையும் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எமது கூட்­டணிக் கட்­சிகள் எம்­முடன் முரண்­பட்ட வர­லா­று­களே உள்­ளன. இப்­போதும் அவ்­வா­றான ஒரு நிலைமை தான் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் இதில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை பிர­தா­னப்­ப­டுத்தி கட்­சிக்குள் பாரிய பிள­வு­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். இம்­முறை மேதினக் கூட்­டத்­தையும் இரண்டு பிரி­வு­க­ளாக நடத்­து­வ­தா­கவே கூறு­கின்­றனர்.

எவ்­வாறு இருப்­பினும் நாம் இப்­போது பிள­வு­ப­டு­வது எமது கட்­சி­யையும் எமது அடுத்­த­கட்ட அர­சியல் பய­ணத்­தையும் பாதிக்கும். ஆகவே அதை விளங்­கிக்­கொண்டு செயற்பட வேண்டும். எவ்வாறு இருப்பினும் எப்போது வேண்டும் என்றாலும் தேசிய அரசாங்கத்தை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலபடுத்த நாம் தயாராக உள்ளோம். அதேபோல் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு செயற்படவும் நாம் தயாராக உள்ளோம் என்றார்.