" எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை "

Published By: Raam

28 Apr, 2016 | 07:47 AM
image

 முஸ்லிம் சமூ­கத்தின் ஒட்­டு­மொத்த அபி­லா­ஷை­க­ளையும் உள்­ள­டக்கும் வகையில் அந்த சமூ­கத்தின் பல்­வேறு தரப்­பி­னரின் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் உள்­வாங்கி பொருத்­த­மான அர­சியல் திட்ட வரை­பொன்றை உரு­வாக்­கு­வதே அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் எண்­ண­மா­கு­மென்று அக்­கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாஷ் பதி­யுதீன் நேற்று முன்தினம் மாலை தெரி­வித்தார்.

மக்கள் காங்­கிரஸ் தயா­ரித்­துள்ள அர­சியல் திட்ட வரைபை மேலும் மெரு­கூட்டி அதனை முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் கட்­சியின் அர­சியல் மறு­சீ­ர­மைப்பு ஆலோ­ச­னைக்­குழு நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக நாம் இந்தத் திட்ட வரைபை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. எல்லோரையும் வீழ்த்திவிட்டு நாம் மட்டும் தான் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்களும் நாமல்லர். கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகத்தின் சகோதரக்கட்சிகளுடன் விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்தியுள்ளோம்.

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு எமக்குள்ளே பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதும் அவற்றுக்கும் அப்பால் பொதுவான இணக்கப்பாட்டுடன் இந்த சமூகத்திற்கு ஏற்றவகையில் ஓர் அரசியல் திட்டம் அமைய வேண்டுமென்பதில் எமக்கு இரண்டுபட்ட கருத்துக் கிடையாது. அந்த வகையிலேயே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு அனுபவங்களைப் பெற்று சமூகத்திற்கு பணியாற்றி இன்று “முன்னாள்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு இருக்கும் சமூகப் பணியாளர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்கின்றோம்.

தொடர்ந்து சுமார் 120 பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களையும் கல்விமான்களையும் வரவழைத்து ஆலோசனை பெறவுள்ளோம். அதன் பிறகு சமூகத்தின் தூண்களாக இருக்கும் ஜம்மிய்யத்துல் உலமா, சூரா கவுன்சில், முஸ்லிம் கவுன்சில் உட்பட பல்வேறு அமைப்புக்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து அவற்றை உள்வாங்க உள்ளோம். இதுமட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் அடிமட்ட மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்வோம். அத்துடன் சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறுகட்சிகளுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு பொதுவான உடன்பாட்டை எட்டுவதற்காக அந்தக் கட்சிகளுடனும் பேச்சு நடத்த எமது கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அழைப்பிதழ்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01