ஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

27 May, 2019 | 03:07 PM
image

வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாடாளாவிய ரீதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.எனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாக காணப்படுகின்றன.

.பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சொதனையிடப்படுகின்றனர்.பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.

நாட்டில் பிற மாவட்டங்களை விட வடக்கில் மட்டும் அதிக கெடுபிடிகள் காணப்படுவதை தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்தனர்.அத்துடன் பாராளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் சுட்டிக்காட்டி இருந்தனர்.எனினும் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ பிரசன்னமோ கெடுபிடிகளோ குறைக்கப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் ஏற்பட்டுள்ள இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்ற ஜனாதிபதி கலந்துரையாடலில் பங்கேற்று இருந்த இராணுவ தளபதியிடம் உடனடியாக உத்தரவிட்டிருந்தார்.

எனினும் வடக்கில் குறிப்பாக பூநகரி,ஆனையிறவு,நாவற்குழி போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் பயண தடைகளை விதித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி உத்தரவிட்டும் மக்கள் இராணுவ கெடுபிடிக்குள் சிக்கியே வீதியில் பயனிகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01