திருக்கோவிலில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ;  12 கிராமங்களை சேர்ந்த 17ஆயிரம் பேர் பாதிப்பு!

27 May, 2019 | 02:49 PM
image

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதனால், தம்பிலுவில் குடிநிலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் குடிநீரை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் குடிநிலம் கிராமத்தில் குடிப்பதற்கு ஒரு சொட்டு நீரும் தமக்கு இல்லையென தெரிவித்து சுமார் 4 கிலோமீற்றர் தூரமிருந்து வந்து தம்பிலுவில் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருந்து சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பெண்கள் குழந்தைகளுடன் திருக்கோவில் பிரதேச சபை மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தம்பிலுவில் அலுவலகம் ஆகியவற்றுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் வருகைதந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி மக்களை அமைதிபடுத்தியதுடன் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தம்பிலுவில் அலுவலக பொறுப்பாளர் டி.கமலகாந்திடம் மக்கள் மகஜர் ஒன்றினையும் கையளித்து இருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தம்பிலுவில் நிலையப் பொறுப்பதிகாரி டி.கமலகாந்,

தற்போது திருக்கோவில் சாகாமம் குளத்தில் நீர் இல்லாத காரணத்தினால் முழுமையாக குடிநீரை வழங்குவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன தற்போது மாற்று வழிகள் ஊடாக மட்டுப்படுத்தப்பட அளவில் குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்ததுடன் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமானால் அம்பாறை பண்ணலகம நீர்த் தேக்கத்தில் இருந்து சாகாமம் குளத்திற்கு நீர் வழங்கப்படுமிடத்து தொடர்ச்சியாக பிரதேச மக்களுக்கான குடிநீரை வழங்ககூடியதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேசசபையின் தவிசாளர் இ.வி கமலராஜனிடம் இவ் பிரச்சினை தொடர்பாக கேட்டபோது திருக்கோவில் பிரதேசத்தில் சாகாமம் குளத்தில் இருந்து தான் நீரைப் பெற்று பிரதேச மக்களின் குடிநீர் தேவைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சாகாமம் குளத்தில் தற்போது நீர்மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றன. இதனால் திருக்கோவில் பிரதேச சபையில் போதிய தண்ணீர் வவூசர்கள் இல்லை. இருக்கின்ற இரண்டு வவூசர்களின் ஒன்று பழுதடைந்து காணப்படுகின்றது. இருக்கின்ற வளத்தைக் கொண்டு மக்களுக்காக குடிநீரை விநியோகித்து வருவதுடன் மேலதிகமாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஆலயங்கள் பொது கிணறுகள் என்பனவற்றில் ஊடாக நீரைப் பெற்று வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் .

திருக்கோவில் பிரதேசத்தில் 22 கிராமங்களை கொண்ட 33ஆயிரம் மக்கள் சனத்தொகையில் தாண்டியடி, உமிரி, நேருபுரம், தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சாகாமம், காஞ்சிரம்குடா, ஸ்ரீவள்ளிபுரம், மண்டானை, காயத்திரிகிராமம், குடிநிலம் உள்ளீட்ட சுமார் 12 கிராமங்களை சேர்ந்த 17அயிரம் மக்களுக்கு தற்போது குடிநீர் பிரச்சினை எற்பட்டுள்ளன. 

இந்நிலையில் அக்கரைப்பற்று 02 ஆம் கட்டையில் இருந்து நீர் கொண்டு வந்து கொடுப்பதற்கும் எமது சபையிடம் போதிய வவூசர்கள் இல்லை இதன் காரணமாக பாரிய பிரச்சினைக்கு எமது சபை முகம் கொடுத்து வருகின்ற நிலையிலும் எம்மால் முடிந்தளவு பிரதேச மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தவிசாளர் இவி கமலராஜன் மேலும் தெரிவித்து இருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32