ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளின் விடுதலை குறித்து தீர்மானிக்க சட்ட அபிப்ராயத்தை நாடியிருக்கும் தமிழக ஆளுநர்

Published By: Priyatharshan

27 May, 2019 | 02:26 PM
image

முன்னாள் இந்திய  பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  ஆயுட்கால சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும்  முன் கூட்டியே விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பில்  தீர்மானிப்பதற்கு  தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  தமிழ் நாடு  மாநிலத்திற்கு வெளியிலுள்ள  சட்ட நிபுணர்களிடம்  அபிப்ராயம் கேட்டிருப்பதாகவும் அவர்களது அபிப்ராயம் கிடைக்கப் பெற்றதும் அவர் தீர்மானமொன்றை எடுப்பது  சாத்தியம் என்றும் இந்நிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 ஏழு  கைதிகளையும்  விடுதலை  செய்யுமாறு  தமிழ் நாடு அரசாங்கம்  முன்வைத்த யோசனைக்கு எதிராக  ஆறு பேர் தாக்கல் செய்த வழக்கொன்றை இந்நிய உச்ச நீதிமன்றம் இருவாரங்களுக்கு முன்னர்  தள்ளுபடி செய்த போதிலும் கூட  இந்த விவகாரத்தில் சிக்கலான  பல பிரச்சினைகள் இருப்பதன் காரணமாக  ஆளுநருக்கு சட்ட ஆலோசனை தேவைப்படுகின்றது என்று  கூறப்படுகின்றது.

கடந்த வருடம் செப்டெம்பர் 09ம் திகதி தமிழ்  நாடு அரசாங்கத்தின் அமைச்சரவை அதன்  கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தில்  சிறிகரன் என்ற முருகன்,  சுதேந்திர ராஜா என்ற  சாந்தன் , ரொபர்ட்  பாயர்ஸ்,  எஸ். ஜயகுமாரன்  என்ற ஜயகுமாரன் , ஏ. ஜி. பேரரிவாளன் என்ற அறிவு ,  ரவிச்சந்திரன் என்ற ரவி மற்றும்  நளினி சிறிகரன்  ஆகிய  ஏழு  குற்றவாளிகளையும்  முன்கூட்டியே விடுதலை செய்தற்கு சிபாரிசு செய்திருந்தது.

இந்நிய பொதுத்தேர்தல் நடைப்பெறவிருந்த  நிலையில் தேர்தல் ஆணையத்தினால் நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டு அiவை நடைமுறைக்கு வரும் வரையில் இந்த கைதிகளின் விடுதலை தொடர்பில் மாநில அரசாங்கம்  இரண்டு நினைவூட்டல் கடிதங்களை  ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. கடந்த  20ம் திகதி திங்கட்கிழமை  முதலமைச்சர்  எடப்பாடி கே. பழினிசாமி  சேலத்தில்  செய்தியாளர்களுடன்  பேசுகையில்.   ராஜீவ் கொலை வழக்கு  குற்றவாளிகளை விடுவிப்பதில் தனது அரசாங்கம் உறுதிப்பாட்டுடன்  இருக்கின்றது என்று  கூறியிருந்தார்.

இந்த அரசியலமைப்பின்  161 ஆவது பிரிவின் கீழ் (குறிப்பிட்ட சில வழக்குகளில் மன்னிப்பு வழங்குவதில்,  தண்டனைகளை இடை நிறுத்துவதுற்கு,  தண்டனைகளை குறைப்பு செய்வதற்கு   ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள்) ஆளுநர் சகல    சூழ்நிலைகளின்   கீழும் தமது அமைச்சரவையில் ஆலோசனைகளின் பிரகாரம் செயற்பட வேண்டியவராக இருக்கின்றாரா அல்லது மத்திய அரசினால்  நியமிக்கப்படுகின்றவர் என்ற வகையில் மத்திய   அரசாங்கத்தின்  நிலைப்பாட்டை ஏற்று   செயற்படுபவராக இருக்கின்றாரா, என்பதே  இதில் உள்ள சர்ச்சையாகும். விடுதலையாகும் பட்சத்தில்  இந்த ஏழு பேரில் இலங்கை  பிரஜைகளான  நால்வரின் (  சிறிகரன்,  சாந்தன், ரொபட்  பாயஸ், எஸ். ஜயகுமார்)  எதிர்காலம் குறித்த பிரச்சினையும்  தீர்வு  காணப்பட வேண்டியதொன்றாக இருக்கின்றது.

இந்த கைதிகளை விடுதலை செய்வதற்கான  எந்தவொர முயற்சியையயும் எடுப்பதாக மத்திய அரசாங்கம்  தெளிவாக கூறியிருக்கின்றது. அத்தகைய  நிலையில்  மத்திய அரசின் நிலைப்பாட்டை  பொருட்படுத்தாமல் ஆளுநரினால்  சுயாதீனமான தீர்மானமொன்றை எடுக்க முடியுமா என்ற  கேள்வி எழுகின்றது.  சுமார் ஆறு மாத காலத்மதிற்கு முன்னர் கூட  மத்திய அரசு  இந்த கைதிகள் விவகாரத்தில் தன்னுடன் ஆலோசனை  கலக்கப்பட வேண்டும் என்று  ஆளுநருக்கு தெரியப்படுத்தியிருந்தது. கைதிகள் விடுதலை செய்யும் பட்சத்தில்  இலங்கைக்கும் இந்நியாவிற்குமான  உறவுகளில் அது ஏற்படுத்த கூடிய தாக்கம்  பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டிய பிறிதொரு காரணியாகும்.  இந்த  காரணத்திற்காகவும் கூட  மத்திய அரசுடனான  கலந்தாலோசனை  அத்தியாவசியமாகின்றது.

இலங்கை பிரஜைகளான  நான்கு கைதிகளுக்கும் என்ன நடக்கும் என்பது அடுத்த முக்கியமான பிரச்சினையாகும் அவர்களை திருப்பி எடுத்துக்கொள்ள  இலங்கை அரசாங்கம் விரும்புமா  என்பது தொடர்பில்  இதுரையில் எந்த தகவலும் இல்லை. செல்லுப்படியாக கூடிய ஆவணங்கள் ஏதும் இல்லாமலே அவர்கள் நால்வரும் இந்தியாவிற்குள் பிரவேசித்திருந்தனர். அவர்களில் இருவர் (ரொபர்ட் பாயஸ், ஜயகுமார்)  1990. செப்டெம்பரில்  அகதிகளாக தங்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 இப்போது  ஐந்து வருடங்களுக்கும் கூடுதலான இலங்கையர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்வதை இந்திய அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். விடுதலையாகும் பட்சத்தில்  நால்வரும்  இந்தியாவிலே தொடர்ந்து இருக்க விரும்புவார்களானால்  அவர்களுக்காக  மத்திய அரசாங்கம்  விதிவிலக்கான நடைமுறையொன்றை  கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

நால்வரும்  இந்தியாவில் தொடர்ந்து இருக்கவோ, அல்லது  இலங்கைக்கு  திரும்பி செல்ல விரும்பாவிட்டால் மாற்று நடவடிக்கையாக  மூன்றாவது நாட்டில் குடியமர்த்தலுக்கான  சாத்தியம்  குறித்து ஆராய  இருக்கும்.  நால்வரினதும் எதிர்காலம் தொடர்பில் திருப்திகரமான  தகவல் இல்லாத பட்சத்தில்  அவர்களின் விவகாரத்தையும் ஏனைய  மூன்று கைதிகளின் விவகாரத்தையும்  தனித்தனியாக  ஆளுநராக   கையாள முடியுமா என்பது இன்னுமொரு பிரச்சினையாகும். ஆனால் ஏழு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே   மாநில  அமைச்சரவையின் சிபாரிசாகும். சட்ட ரீதியாக உள்ள  நிலைப்பாட்டின் கீழ் கைதிகளை வேறுப்படுத்தி எந்தவொரு தீர்மானத்தையும் ஆளுநர் எடுப்பதற்கான வாய்ப்பெல்லை கிடையாது  என்று த இந்து பத்திரிகையின் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி, கொலைவழக்கு, தமிழகம், இந்தியா, விடுதலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52