பாதிக்­கப்­பட்ட மக்­களை கவ­னத்தில் கொள்­ளுங்கள்

Published By: Digital Desk 4

27 May, 2019 | 11:17 AM
image

யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் இது­வரை யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வு­மில்லை. நிவா­ர­ணங்கள் சரி­யான முறையில் அந்த மக்­களை சென்­ற­டை­ய­வு­மில்லை. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கவே இருப்­ப­துடன் நீதிக்­காக தொடர் போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

 நாட்டின் தற்­போ­தைய இக்­கட்­டான சூழலில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­து­வது முக்­கி­யத்­து­வ­மற்­றது என யாரும் கரு­தி­விடக் கூடாது நாட்டின் தற்­போ­தைய நிலை­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்து மக்­க­ளுக்கு பாது­காப்­பான ஒரு சூழலை உரு­வாக்கிக் கொடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பிர­தான மற்றும் முக்­கிய பொறுப்­பாகக் காணப்­ப­டு­கி­றது.

இந்தச் சூழலில் அவ்­வாறு நாட்டை மீண்டும் பழைய நிலை­மைக்குக் கொண்­டு­வந்து மக்­களின் இயல்பு வாழ்க்­கையை உறு­திப்­ப­டுத்த முழு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­துடன் எக்­கா­ரணம் கொண்டும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மக்­களின் தேவை­களை யாரும் அலட்­சியம் செய்­து­விட முடி­யாது. மிக முக்­கி­ய­மாக யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் போன்­ற­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பல்­வேறு இழப்­புக்­க­ளு­டனும் வலி­யு­டனும் வடுக்­க­ளு­டனும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே அந்த நிலைமை தொடர்பில் கவனம் செலுத்­தாமல் இருந்­து­விட முடி­யாது என்­பதை அனை­வரும் புரிந்­து­கொள்ள வேண்டும். மிக முக்­கி­ய­மாக பத­வி­யி­லி­ருக்­கின்ற அர­சாங்கம் இது­வி­ட­யத்தில் உணர்ந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அண்­மையில் ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்ற நாட்டின் பாது­காப்பு சம்­பந்­த­மான உயர்­மட்டக் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் நாட்டின் இக்­கட்­டான சூழலில் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களை பாராட்­டி­யி­ருந்தார். ஆனால் வேறு ஒரு சந்­தர்ப்­பத்தில் கருத்து வெளியிட்­டி­ருந்த கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள் தாம­திக்­காமல் தீர்க்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்­தையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அந்­த­வ­கையில் தமிழ்த் தேசியப் பிரச்­சினை விரை­வாகத் தீர்க்­கப்­பட்டு அந்த மக்­களின் அர­சியல் தேவை­களை மற்றும் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றக் கூடிய தீர்வுத் திட்டம் விரைந்து முன்­வைக்­கப்­பட வேண்டும் என்­ப­துடன் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­பட்டு அவர்­களின் வாழ்­வா­தாரம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். இதனைப் புறக்­க­ணித்தோ அல்­லது மறுத்தோ யாரும் செயற்­பட முடி­யாது என்­பதை அனை­வரும் ஏற்­றுக்­கொள்­வது அவ­சியம்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் இந்தப் பிரச்­சி­னைகள் ஆரா­யப்­பட்டு தீர்க்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் எதிர்­பார்த்த அளவில் எந்­த­வி­ட­யமும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை. விசே­ட­மாக யுத்தம் முடி­வ­டைந்­ததும் இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பாக உள்­ளகப் பொறி­மு­றையை ஆராய்ந்து நீதியை நிலை­நாட்ட வேண்­டிய தேவை காணப்­பட்­டது. அதே­போன்று அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னையை ஆராய்ந்து அதற்கு தீர்­வு­காண வேண்­டி­யி­ருந்­தது. முப்­பது வரு­ட­கால யுத்­தத்­திற்கு அடிப்­படைக் கார­ண­மான தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான தீர்வைக் காண வேண்­டிய தேவை காணப்­பட்­டது. காணா­மற்­போ­னோரின் பிரச்­சி­னைக்குத் தீர்வைக் கண்டு அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைக் கண்­டு­பி­டித்து உற­வி­னர்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டிய தேவை இருந்­தது. 

அதே­போன்று கண­வனை இழந்த மற்றும் குடும்பத் தலை­மையைக் கொண்­டி­ருந்த பெண்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவையும் தீர்க்கப்­பட வேண்­டி­யி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி யுத்­தத் தின் போது இழப்­புக்­களை சந்­தித்த மக்­க­ளுக்கு இழப்­பீ­டு­களை வழங்க வேண்­டி­யி­ருந்­த­துடன் இனங்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்கும் இடையில் நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒற்­று­மை­யையும் உறு­திப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் காணப்­பட்­டது. மேலும் யுத்த காலத்தில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பும் நில­வி­யது.

ஆனால் கடந்த பத்து வருட கால­மாக இந்த எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் சரி­யாக கையா­ளப்­பட்டு தீர்­வு­பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வில்லை. 2010 ஆம் ஆண்டு கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்கம் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு பொது­மக்­களின் சாட்­சி­யங்கள் பெறப்­பட்­டன. அதன் அறிக்கை வெளியி­டப்­பட்டும் அந்த அறிக்­கையின் பரிந்­து­ரைகள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அதன் பின்னர் காணா­மற்­போனோர் தொடர்பில் ஆராய ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­குழு ஊடா­கவும் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. அதே­போன்று ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒவ்­வொரு முறையும் இலங்கை தொடர்பில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன. 2014 ஆம் ஆண்டு வரை அவ்­வாறு நிறை­வேற்­றப்­பட்ட அனைத்துப் பிரே­ர­ணை­களும் அப்­போ­தைய அர­சாங்கத்தால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­னவே ஒழிய பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான பொறி­முறை குறித்து ஆரா­யப்­ப­ட­வில்லை. 

இந்தச் சூழலில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கி­யது. அந்த பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வாக காணா­மற்­போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கமும் இழப்­பீடு வழங்கும் அலு­வ­ல­கமும் அமைக்­கப்­பட்­டன. ஆனால் இது­வரை காணா­மற்­போனோர் பிரச்­சி­னையும் இழப்­பீடு வழங்கும் தேவையும் முழு­மை­யாக தீர்க்­கப்­ப­ட­வில்லை. 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ரணை 2017 ஆம் ஆண்­டிலும் 2019 ஆம் ஆண்­டிலும் மீள புதுப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டன. எனினும் இது­வரை அந்தப் பிரே­ரணை முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இதற்­கி­டையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதிக்­காக காத்­தி­ருந்து விரக்­தி­ய­டைந்த நிலையில் கடந்த சில வரு­டங்­க­ளாக போராட்­டங்­களில் ஈடு­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். காணா­மற்­போன தமது உற­வு­களை மீட்டுத் தரு­மாறு கோரி பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.  அதே­போன்று தம்­மி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீளப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரியும் பாதிக்­கப்­பட்ட மக்கள் போராட்டம் நடத்தி வரு­கின்­றனர்.

ஆனால் காணி­களும் இது­வரை முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­டாத சூழலே நில­வு­கின்­றது. இந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றனர். அவர்­களின் தேவைகள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­ப­துடன் அவை தொடர்பில் சரி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே உண்­மை­யாகும். 

விசே­ட­மாக இந்த மக்­களை பொறுத்­த­வ­ரையில் நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு உரிமை உடை­ய­வர்கள். இதனை யாரும் மறுக்க முடி­யாது. தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறியும் உரிமை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கி­றது. அதனை யாரும் புறக்­க­ணிக்க முடி­யாது. அதே­போன்று தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு நீதியைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய உரிமை அந்த மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்­றது. அத­னையும் யாரும் மறுக்க முடி­யாது. தற்­போ­தைய இக்­கட்­டான நிலை­மையில் இந்த மக்­களின் பிரச்­சி­னைகள் இரண்டாம் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னவா என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது.  தற்­போது ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியைத் தீர்த்து மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதே­போன்று பத்து வரு­டங்­க­ளாக நீதிக்­காக காத்­தி­ருக்கும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆராய்ந்து அவர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுப்­பதும் மிகவும் முக்­கி­ய­மாகும்.

இங்கு யுத்­தத்­தின்­போது கண­வனை இழந்த பெண்கள் இன்று குடும்பத் தலை­வி­க­ளாக பாரிய நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் தமது குடும்­பங்­களை கொண்­டு­ந­டத்த வேண்­டிய சூழலில் இருக்­கின்­றனர். பல்­வேறு இன்­னல்­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும் எதிர்­கொண்டே இந்த மக்கள் அன்­றாட வாழ்க்­கையை கொண்டு நடத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. எனவே இவர்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் யுத்தம் நடை­பெற்ற வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில்  வறு­மையும் வேலை­யின்­மையும் தலை­வி­ரித்­தா­டு­கின்­றன. இங்கு புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­தற்கு சரி­யான முத­லீட்டுத் திட்­டங்கள் கடந்த காலங்­களில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. 

இவ்­வாறு யுத்­தத்­தினால் பாதிக்­கப்பட் மக்கள் எதிர்­கொண்­டு­வரும் பிரச்­சி­னைகள் மிகவும் பார­தூ­ர­மா­ன­வை­யாகும். எனவே இவற்றைத் தீர்த்து வைக்கும் விட­யத்தில் யாரும் அலட்­சியப் போக்கை கடைப்­பி­டிக்க முடி­யாது. பிரச்­சி­னை­களை தொடர்ந்து இழுத்­த­டித்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்­காக பாதிக்­கப்­பட்ட மக்கள் வழங்­கிய பங்­க­ளிப்பு மிகவும் முக்கியமானதாகும். தமது நீண்ட காலப்பிரச்சினைகளுக்கு மற்றும் தமக்கு ஏற்பட்ட அநீதிக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்ற  நம்பிக்கையிலேயே மக்கள் தமது ஆதரவை தற்போதைய அரசாங்கத்திற்கு  வழங்கியிருந்தனர். எனினும் மக்களுக்கு தற்போதைய ஆட்சிக் காலத்திலும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. 

எனவே தொடர்ந்தும் இந்த மக்களின் பிரச்சினைகளை இழுத்தடித்துக் கொண்டிருக்காமல் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வளவு வேதனையுடனும் துயரங்களுடனும் தமது காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது கூடத் தெரியாமலும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதும் தெரியாமலும் பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய துயரத்து டனும் இன்னல்களுடனும் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டி ருக்கின்றனர். எனவே இந்த நிலைமை தொடர்ந்து நீடிப்பதற்கு இடமளிக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13