குருநாகல் வைத்தியர் தொடர்பான முறைப்பாடுகளைக் கோரும் பொலிஸார்

Published By: Digital Desk 4

26 May, 2019 | 07:31 PM
image

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை சேர்த்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருக்குமாயின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷியாப்தீன் சாபி சட்டவிரோதமான முறையில் குடும்ப கட்டுப்பாடு செய்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் இருப்பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியர் பணியாற்றும் போது 8 ஆயிரம்  மகப்பேற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதுடன், இது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

மற்றும் சிசிச்சைகளை மேற்கொண்ட போது , சிங்கள பௌத்த பெண்களை கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் விடயம் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான வைத்தியர் பணிபுரிந்த வைத்தியசாலையிலும் இவர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இவர் பணிபுரிந்த காலங்களில் சிகிச்சை பெற்றவர்களுக்கு இவரால் ஏதும் குற்றம் விளைவிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இவர் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக செயற்பட்டு தோல்வியடைந்துள்ளதுடன், பின் மீண்டும் வைத்திய சேவையில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது வங்கி கணக்கில் காணப்படும் பாரியளவான பணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதுடன் , இவர் தௌஜீத் ஜமாத்துடன் தொடர்பு கொண்டுள்ளாரா எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் 

இதனையடுத்தே குறித்த வைத்தியர் தொடர்பான முறைப்பாடுகளை பொலிஸார் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26