வெப்பதினால் அறிவிக்கப்படாத ஊரடங்கு சட்டம்.!

Published By: Robert

27 Apr, 2016 | 03:54 PM
image

ஒடிசாவின் தித்லாகர்க் நகரின் தெருக்களில் மக்கள் நடமாடவில்லை. ஆடு மாடு கோழிகளை காணவில்லை. தெரு நாய் கூட ஓடவில்லை. ஊரே அடங்கி கிடக்கிறது. அந்த ஊரில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கிறதா என கேள்வி எழும்புகிறது. இந்த நிலைக்கு காரணம் வெப்பநிலை. 48.5 டிகிரி செல்சியஸ் (119.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நிலவிகிறது.இதனால் மக்கள் வௌியில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போயுள்ளனர்.

ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள இந்த நகரில் சுமார் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். காலை 10 மணிக்கு காலை கடன்களை முடித்து வீட்டிற்குள் செல்லும் பொது மக்கள் மாலை 6 மணி வரை வெளியே வருவதில்லை. இங்கு நிலவும் வெப்பநிலை மக்களை தெருக்களில் செல்ல அனுமதிப்பதில்லை. வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க குளிரூட்டிகள் , ஏர்கூலர்கள், மின் விசிறிகள், குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்கின்றனர். மக்களுடன் சேர்ந்து தெருநாய்கள், ஆடு மாடுகளும் நிழலை தேடி ஒதுங்கியுள்ளன.

இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், தித்லாகர்க் நகரில் காலை 10 மணிக்கு மேல் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது போல் காணப்படும். இதையும் மீறி வெளியில் செல்லும் நபர்கள் தைரியசாலிகள். அல்லது வெளியூர்வாசிகளாக தான் இருக்க வேண்டும். இந்த நகரம் கோடையில் வெப்பம் அதிகமாக தான் இருக்கும். இந்த முறை ஏதோ அனலுக்குள் வசிப்பது போல் உள்ளது எனக்கூறினார்.

இந்தியாவில் வெப்பம் நிறைந்த இடமாக இருக்கும் இந்த நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 48.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். கடந்த வாரம் இங்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10